சிவாஜி ராவ்வின் சில் மொமன்ட்ஸ்.; பழசை மறக்காத ரஜினி்; கண்டக்டராக பணிபுரிந்த பஸ் டிப்போவை பார்வையிட்டார்

சிவாஜி ராவ்வின் சில் மொமன்ட்ஸ்.; பழசை மறக்காத ரஜினி்; கண்டக்டராக பணிபுரிந்த பஸ் டிப்போவை பார்வையிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் வெளியானது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றார் ரஜினிகாந்த்.

அதன் பின்னர் அங்கு ஒரு வாரம் தங்கி இருந்த நிலையில் சென்னைக்கு வந்து ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடினார்.

மேலும் செய்தி டிவி சேனலுக்கும் பேட்டியளித்தார். அப்போது வயது குறைவாக இருந்தாலும் யோகி காலில் விழுவது என் வழக்கம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 29ஆம் தேதி பெங்களூருக்கு சென்றுள்ளார் ரஜினிகாந்த். அங்கு ராகவேந்திரா ஆலயத்தில் தரிசனம் செய்தார்.

ரஜினிகாந்த்

இதனிடையில் ரஜினிகாந்த் சினிமாவில் நுழைவதற்கு முன்பு கண்டக்டராக பணிபுரிந்த போது உள்ள பணிமனையை பார்வையிட்டார்.

அங்கு தன்னுடைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ரஜினியை பார்த்த பணிமனை ஊழியர்கள் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டு நலம் விசாரித்தனர். அங்கு பழைய சிவாஜி ராவ் ஆகவே தன்னை அவர் உணர்ந்ததாக கூறப்படுகிறது.

(ரஜினி உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பது குறிப்பிடத்தக்கது.)

இந்த வீடியோவும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினிகாந்த்

Rajinikanth met Sivaji Rao working place at Bengaluru

பிரபஞ்சம் எனக்கு கொடுத்த பரிசு.; தலைவர் அப்பா ரஜினிக்கு நன்றி – வசந்த் ரவி

பிரபஞ்சம் எனக்கு கொடுத்த பரிசு.; தலைவர் அப்பா ரஜினிக்கு நன்றி – வசந்த் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்திருந்தார்.

‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் வசந்த் ரவி, ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வசந்த் ரவி

அதில், ‘ஜெயிலர்’ எனது சினிமா பயணத்தில் மிக முக்கியமான மைல் கற்களில் ஒன்றாக மாறியுள்ளது. நான் இத்தனை வருடங்களாக இந்த துறையில் கற்ற முழு அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் உறுதி ஆகியவற்றிற்கு இந்தப் படம் அங்கீகாரம் கொடுத்து, என்னை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது!!.

ஆகஸ்ட் 11, 2017 அன்று, இயக்குநர் ராம் சார் என்னை பிரபுநாத் என ‘தரமணி’ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியதில் இருந்து, ஆகஸ்ட் 10, 2023 அன்று, ஜெயிலர்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சாரின் மகன் அர்ஜுன் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் அடியெடுத்து வைத்தது என இவை அனைத்தும் இந்த பிரபஞ்சம் எனக்கு கொடுத்த விலைமதிப்பில்லாத பரிசாகவே நான் பார்க்கிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. “எனது சினிமா பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே இடைவிடாத ஊக்கம் மற்றும் ஆதரவை அளித்த ‘தலைவர்’ ரஜினிகாந்த் (அப்பா) சாருக்கு முழு மனதுடன் நன்றி கூறுகிறேன்” பதிவிட்டுள்ளார்.

வசந்த் ரவி

heartfelt Thanks to the Rajini appa says vasanth ravi tweets

LGM படத்தை அடுத்து தோனி தயாரிக்கும் புதிய பட அப்டேட்

LGM படத்தை அடுத்து தோனி தயாரிக்கும் புதிய பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து தமிழில் வெளியான படம் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM)).

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியிருந்தார்.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு மற்றும் ஆர் ஜே விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருந்த ‘எல்.ஜி.எம்’ படம் ஜூன் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், தயாரிப்பாளர் சாக்ஷி டோனி தன் அடுத்த படத்திற்கான கதை கேட்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தனது இரண்டாவது படைப்பை தரமானதாக உருவாக்கும் ஆர்வத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Sakshi Dhoni is in the process of hearing the story for his next film

சென்னையில் ‘ஜவான்’ ஆஜர்.; ஷாருக்கான் நயன்தாரா விஜய்சேதுபதி பங்கேற்பு

சென்னையில் ‘ஜவான்’ ஆஜர்.; ஷாருக்கான் நயன்தாரா விஜய்சேதுபதி பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான் ‘பதான்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார்.

அட்லீ இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்க, விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 30-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜவான்

Shah Rukh Khan’s Jawan to have a grand audio launch in Chennai

தினம் தினம் கூடும் வசூல்.; பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் ‘அடியே’ படம்

தினம் தினம் கூடும் வசூல்.; பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் ‘அடியே’ படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் – கௌரி கிஷன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்த ‘அடியே’ படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று வெளியானது. வெளியான முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வசூல் செய்த இந்த திரைப்படம், இரண்டாவது நாள் அதைவிட கூடுதலாகவும், மூன்றாவது நாள் அதைவிட கூடுதலாகவும் வசூலித்து இந்த வாரம் வெளியான படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக ‘அடியே’ வெற்றி பெற்றிருக்கிறது.

அடியே

மேலும் இந்த திரைப்படம் செப்டம்பர் 1 தேதி முதல் உலக நாடுகளிலும் வெளியாகவிருக்கிறது.

அதன் பிறகு இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆல்டர்நேட்டிவ் ரியாலிட்டி.. மல்டிவெர்ஸ்.. பேரலல் யுனிவெர்ஸ்… எனும் சயின்ஸ் பிக்சனுடனும், டைம் டிராவல்.. டைம் லூப்.. எனும் இளைய தலைமுறையை கவரும் உத்திகளால் சுவாரசியமான காதல்… திரைக்கதையாக இப்படத்தில் இடம்பெற்றதால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பேராதரவினை பெற்று, பிரம்மாண்டமான வெற்றியை பதிவு செய்து வருகிறது.

அடியே

‘அடியே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை தயாரித்த மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தொடர்ந்து தமிழ் திரையுலகில் தரமான படைப்புகளை வழங்கி முன்னணி பட தயாரிப்பு நிறுவனமாக உயரும் என்பது உறுதியாகி இருக்கிறது.

அடியே

Gv Prakash and Gowri starrer Adiyae got good response

பிரசாந்த் படத்தலைப்பை கவின் படத்துக்கு வைத்த இளன்.; யுவன் பிறந்தநாளில் விருந்து

பிரசாந்த் படத்தலைப்பை கவின் படத்துக்கு வைத்த இளன்.; யுவன் பிறந்தநாளில் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும் ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் திரைப்படம் ‘ஸ்டார்’.

பி. ரூபக் பிரணவ் தேஜ் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வரும் இந்தத் திரைப்படத்தை ‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் கவின் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நடிகை ஒருவரும், கோலிவுட் நடிகை ஒருவரும் ஜோடியாக இணைகிறார்கள்.

ஸ்டார்

மேலும் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஒருவரும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். பன்மொழி ரசிகர்களை கவரும் வண்ணம் இத்திரைப்படத்தின் கதையும், கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

எழில் அரசு ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘இளைய இசைஞானி’ யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனிக்கிறார். தேசிய விருது வென்ற ஆடை வடிவமைப்பாளரான சுஜித் சுதாகரன் ஆடை வடிவமைப்பாளராகவும், எஸ். வினோத்குமார் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்றது. தற்போது 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாகவும், விரைவில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஸ்டார்

இந்தப் படத்தில் இடம் பெறும் அறிமுக பாடல் காட்சிக்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து படமாக்கப்பட்டிருக்கிறது. இதற்காகவென யுவன் சங்கர் ராஜா இளைய தலைமுறையினரை கவரும் வகையில் வித்தியாசமாக இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் வெவ்வேறு விதமான பாடல்களும் இடம் பெற்றிருக்கிறது. இவை அனைத்தும் ரசிகர்களை பரவசப்படுத்தும் என படக் குழுவினர் உத்வேகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று ‘ஸ்டார்’ படத்திலிருந்து பிரத்யேக காணொளி ஒன்று வெளியிடப்படவிருக்கிறது.

இதனை முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவர் இணையத்தில் வெளியிடவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஸ்டார்

இளம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்ற படைப்பை இன்னிசையுடன் வழங்கிய இயக்குநர் இளன் – யுவன் ஆகியோருடன் முதன்முறையாக நடிகர் கவினும் இணைந்து கூட்டணி அமைத்திருப்பதால், இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே மட்டுமல்லாமல் இசை ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

கூடுதல் தகவல்…

2001 ஆம் ஆண்டு பிரவீன் காந்தி இயக்கத்தில் பிரசாந்த், ஜோதிகா நடித்த ‘ஸ்டார்’ என்ற படம் வெளியானது. தற்போது இதே பட பெயரில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்

Kavin Elan Yuvan movie titled STAR

More Articles
Follows