தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், புகழ் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘அயோத்தி’.
இந்த படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த படத்தை பார்த்த பெரும்பாலான மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். காரணம் அப்படி ஒரு அருமையான திரைக்கதையை வடிவமைத்து கொடுத்திருந்தார் இயக்குனர் மந்திரமூர்த்தி.
தற்போது ஏப்ரல் 7 தேதி முதல் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
இந்த படத்தை பலரும் பாராட்டி வந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பாராட்டி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில்…
அயோத்தி…
நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.
முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி.
தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
இவ்வாறு ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘அயோத்தி’ இயக்குநர் மந்திரமூர்த்தி தன்னுடைய ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளதாவது…
உலகில் உள்ள அத்தனை விருதுகளும் ஒரு நொடியில் கிடைத்த மகிழ்ச்சியையும் ,உத்வேகத்தையும் தருகிறது தங்களின் பாராட்டுகள்…நன்றி sir 🙏♥️
rajini praises the director of ayothi movie