தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான படம் ‘அயோத்தி’.
முதலில் தியேட்டரில் வெளியாகி பின்பு ஓடிடியில் வெளியாகி தற்போது 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் பட குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர்.
இந்த விழாவில் நடிகர் அஸ்வின் குமார் பேசியதாவது…*
நான் செம்பி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இந்தப்படமும் ஆரம்பித்தது. கதை கேட்டு நான் நடிக்கவா என்று ரவி சாரிடம் கேட்டேன். ஆனால் சசி சார் நடிக்க போகிறார், அவர் தான் இந்தக்கதைக்கு சரியாக இருப்பார் என்றார்.
இந்தக் கதைக்கு சசி சாரை விட பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது. சசி சார் நிஜத்தில் அத்தனை சாந்தமானவர், எல்லோரையும் சமமாக நடத்துபவர். இந்தப் படத்தில் இறுதிக்காட்சியில் அழ வைத்து விட்டார். சசி சாருக்கும் இயக்குநர் மந்திரமூர்த்திக்கும் வாழ்த்துகள். மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகள்.
ashwin kumar speech in ayothi 50 days celebration