அன்பு செய்வதை ‘அயோத்தி’ நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது – ரோகிணி

அன்பு செய்வதை ‘அயோத்தி’ நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது – ரோகிணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம் என்பதை அழுத்தி சொல்லி மக்களின் மனங்களை வென்று பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது “அயோத்தி” திரைப்படம்.

Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

அயோத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு பட நிறுவனம் கேடயம் வழங்கி கௌரவித்தது.

இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.

இவ்விழாவினில்

*நடிகை ரோகிணி பேசியதாவது…*

படம் பார்த்தேன்…
இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு, இப்போதைய நேரத்திற்கு மிகமிக அவசியமான ஒரு படம். இயற்கை போல் அன்பு செய்வதை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது இந்தப்படம்.

இதில் உழைத்த அத்தனை பேரையும் மேடையேற்றி வாழ்த்தும் இந்த அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி. இப்படி ஒரு கதையை நம்பி தயாரித்த தயாரிப்பாளர், உடன் நின்ற நடிகர் சசிகுமார் இருவருக்கும் என் நன்றிகள், வாழ்த்துகள். படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

அயோத்தி

Rohini speech in ayothi 50 days celebration

இசைராஜா-வுடன் 3வது முறை சந்திப்பு.; அல்போன்ஸ் புத்திரன் அடுத்த பட அப்டேட்

இசைராஜா-வுடன் 3வது முறை சந்திப்பு.; அல்போன்ஸ் புத்திரன் அடுத்த பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் வெற்றிப் படங்களால் பிரபலமானவர் அல்போன்ஸ் புத்திரன்.

தமிழில் அடுத்ததாக அல்போன்ஸ் புத்திரன் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்.

அல்போன்ஸ் புத்திரன் தமிழில் தனது அடுத்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டு வருவதால் சென்னையில் முகாமிட்டுள்ளார்.

மேலும் பல தமிழ் நட்சத்திரங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இளையராஜாவை மூன்றாவது முறையாக சந்தித்துள்ளார்.

அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து. அதில், “சில நாட்களுக்கு முன் “தமிழ் இசை ராஜா” மேஸ்ட்ரோ இளையராஜாவை மூன்றாவது முறையாக சந்தித்தேன். இந்த முறை நான் புகைப்படம் எடுக்க மறக்கவில்லை. அவரைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை. ரோமியோபிக்சர்ஸுடன் நான் நடிக்கும் படத்திற்குப் பிறகு, மேஸ்ட்ரோ இளையராஜா சாருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவேன்.” என பதிவிட்டுள்ளார்.

Alphonse Puthuren met Ilaiyaraaja for the third time

தசரா OTT ரிலீஸ்.; மைனரு வேட்டி கட்டி.. பாட்டை இனிமே ஓடிடியில் பாருங்க மக்களே!

தசரா OTT ரிலீஸ்.; மைனரு வேட்டி கட்டி.. பாட்டை இனிமே ஓடிடியில் பாருங்க மக்களே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான படம் ‘தசரா’.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், தீக்‌ஷித் ஷெட்டி, பிரகாஷ் ராஜ், ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரகனி, பூர்ணா உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படம் மார்ச் 30, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து வருகிறது.

மேலும் அதன் டிஜிட்டல் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ‘தசரா’ படத்தை ஏப்ரல் 27-ம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தசரா

‘Dasara’ to stream on OTT from April 27th

குற்றாலத்தில் ‘ரகு தாத்தா’ உடன் நடிகை கீர்த்தி சுரேஷ்

குற்றாலத்தில் ‘ரகு தாத்தா’ உடன் நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த டிசம்பர் 2022 இல், நடிகை கீர்த்தி சுரேஷ் ஹோம்பலே பிலிம்ஸின் ‘ரகு தாத்தா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் சுமன் குமார் இயக்கி வருகிறார். இதன் மூலம் ஹொம்பலே பிலிம்ஸ் தனது முதல் தமிழ்த் திரைப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்தசாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் குற்றாலத்தில் நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார்.

ரகு தாத்தா

Keerthy Suresh resumes shooting for ‘Raghu Thatha’ in Courtallam

JUST IN மம்மூட்டியின் தாயாரும் துல்கரின் பாட்டியுமான பாத்திமா காலமானார்

JUST IN மம்மூட்டியின் தாயாரும் துல்கரின் பாட்டியுமான பாத்திமா காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக 393 மலையாள படங்களிலும் மற்ற மொழிகளை சேர்த்து 420 படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

மலையாள சினிமாவில் நடித்து கேரள அரசின் பல விருதுகளையும் வென்றுள்ளார். கேரள அரசின் 7 விருதுகளையும் மத்திய அரசின் 3 தேசிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

தமிழில் நடிகர் ரஜினியுடன் தளபதி படத்திலும் நடித்திருந்தார். மேலும் நிறைய நேரடி தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அழகன், மௌனம் சம்மதம், மறுமலர்ச்சி உள்ளிட்ட படங்கள் இவருக்கு தமிழில் நல்ல பெயரை பெற்று தந்தது.

தற்போது மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

இவரும் நேரடி தமிழ் படங்களில் நடித்து வருகிறார். ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால், ஹே சினாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் மம்முட்டியின் தாயாரும் துல்கர் சல்மானின் பாட்டியுமான பாத்திமா இஸ்மாயில் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார் அவருக்கு வயது 93.

சில நாட்களாக உடல் நல குறைவால் இவர் அவதிப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

இதனை அறிந்த மம்மூட்டி ரசிகர்களும் துல்கர் சல்மான் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மம்மூட்டி

Mammootty s mother FathimaIsmayil passed away

ரீலீல் ரஜினி.. ரியலில் அஜித்.; மாறிவரும் ஜெயம் ரவி… வைரலாகும் போட்டோஸ்.!

ரீலீல் ரஜினி.. ரியலில் அஜித்.; மாறிவரும் ஜெயம் ரவி… வைரலாகும் போட்டோஸ்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா நடிகர் நடிகை என்றாலே தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதிலும் தங்களுடைய அழகை பராமரிப்பதிலும் அதிக அக்கறை செலுத்துவார்கள்.

சினிமாவில் மட்டுமல்லாமல் பொது வெளியில் தோன்றும் போதும் சினிமாவை போன்று மேக்கப்புடன் வலம் வருவார்கள்.

ஜெயம் ரவி

இவையல்லாம் 30 வருடங்களுக்கு முன்பு.

ஆனால் இதை மாற்றியமைத்தவர் என்றால் அது நடிகர் ரஜினிகாந்தை சொல்லலாம்.

சினிமாவில் மட்டுமே மேக்கப் போடுவேன். கேமராவுக்கு முன்னால் மட்டுமே நடிப்பேன். கேமராவுக்கு பின்னால் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை வைத்திருப்பவர் ரஜினிகாந்த்.

ஜெயம் ரவி

எனவேதான் அவர் பொது இடங்களில் வரும் போது நரைத்த தாடி முடி இல்லாத தலை என எந்த இமேஜும் கவலை இல்லாமல் வருவார். ஆனால் சினிமாவில் விக் வைத்து நடித்து வருகிறார்.

இந்த ஃபார்முலாவை மாற்றி தன்னுடைய இயல்பான தோற்றத்திலே சினிமாவிலும் நடிக்கத் தொடங்கியவர் நடிகர் அஜித்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வந்தவர் தற்போது முழுக்க நரைத்த தாடியுடன் சினிமாவில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி

இந்த நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியும் இந்த பாணியில் வலம் வருகிறார்.

சமீப காலமாக அகிலன் பட பிரஸ்மீட் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய பட விழாக்களுக்கு தன்னுடைய இயல்பான தோற்றமான சால்ட் & பெப்பர் லுக்கில் வலம் வருகிறார்.

மேலும் ரவி நடத்திய போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜெயம் ரவி

Jayam Ravi’s recent photos viral in social media

More Articles
Follows