படப்பிடிப்பிற்காக மீண்டும் மங்களூருக்கு சென்ற ரஜினிகாந்த்

படப்பிடிப்பிற்காக மீண்டும் மங்களூருக்கு சென்ற ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெங்களூருவில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா மற்றும் அவரது மூத்த சகோதரர் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்டின் சதாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் இருந்து ரஜினிகாந்த் ஓய்வு எடுத்தார்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மறைவுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ரஜினிகாந்த் சென்னையில் உள்ள மறைந்த நடிகரின் வீட்டிற்குச் சென்றதால், அவரது இடைவெளியை நீட்டித்தது.

இந்நிலையில், ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பிற்காக மீண்டும் மங்களூருக்குத் திரும்பியுள்ளார்.

மேலும், இந்த ஷெட்யூல் ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Rajini again going to Mangalore for ‘Jailer’ shoot

அமலாபால் – சமந்தாவை தொடர்ந்து பழனி கோவிலுக்கு சென்ற சந்தானம்

அமலாபால் – சமந்தாவை தொடர்ந்து பழனி கோவிலுக்கு சென்ற சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள், அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் நடிகைகள் அமலாபால், சமந்தா, நடிகர் கவுதம் கார்த்திக், அவரது மனைவி மஞ்சிமாமோகன் உள்ளிட்ட பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், நேற்று நடிகர் சந்தானம் பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.அதன்பின் ரோப்கார் மூலம் அடிவாரம் வந்தடைந்தார்.

பழனி அருகே சந்தானம் நடிக்கும் ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதால் படப்பிடிப்புக்கு இடையே பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தார்.

மேலும், இப்படத்தில் சந்தானம், மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Santhanam visits Palani Murugan temple

பவர் ஸ்டார் உடன் கைகோர்க்கும் இயக்குனர் சமுத்திரக்கனி

பவர் ஸ்டார் உடன் கைகோர்க்கும் இயக்குனர் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2021 ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு,சமுத்திரக்கனி இயக்கிய ‘வினோதய சித்தம்’ கரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நேரடியாக OTT இல் வெளியிடப்பட்டது.

தம்பி ராமையா மற்றும் சமுத்திரக்கனி நடித்த படம் மிகவும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது .

சமுத்திரக்கனி தெலுங்கில் ‘வினோதயா சித்தம்’ படத்தை ரீமேக் செய்கிறார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, படம் இன்று பூஜையுடன் ஆரம்பமானது . ரீமேக்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Director Samuthirakani’s new movie with power star goes on floors

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெயம் ரவியின் ‘அகிலன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேங்ஸ்டர் படமான ‘அகிலன்’ மார்ச் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இன்று, தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் ஒரு போஸ்டரை வெளியிட்டு , அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் , “இந்தியப் பெருங்கடலின் ராஜா நடிகர் ஜெயம் ரவியின் #அகிலன் மார்ச் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வருகிறது! #AgilanFromMarch10” (sic). ப்ரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த அதிரடி திரில்லர் படத்தில் ஜெயம் ரவி கேங்ஸ்டராக நடித்துள்ளார்.

Jayam Ravi’s ‘Agilan’ to hit the screens before ‘Ponniyin Selvan 2’

6000 மாணவர்கள் முன்னிலையில் சிங்கிளா பறக்கத் தொடங்கிய ‘பருந்தாகுது ஊர் குருவி’

6000 மாணவர்கள் முன்னிலையில் சிங்கிளா பறக்கத் தொடங்கிய ‘பருந்தாகுது ஊர் குருவி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களிடம் வரவேற்பைக் குவிக்கும், ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘மதயானைக்கூட்டம்’.

Lights On Media வழங்கும், இயக்குநர்
தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ .

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மதயானைக்கூட்டம் பாடல் வித்தியாசமான முறையில் 6000 மாணவர்கள் மத்தியில், மாணவர்கள் கையால் வெளியிடப்பட்டது.

Kpr institution coimbatore Fessta ’23 கல்லூரி விழாவில், 6000 மாணவர்கள் மத்தியில், மாணவர்களின் உற்சாக கரவொலிகளுக்கு இடையில், மாணவர்கள் கைகளால் பருந்தாகுது ஊர் குருவி படத்தின் முதல் லிரிகல் பாடலான ‘மதயானைக்கூட்டம்’ பாடல் வெளியிடப்பட்டது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மதயானைக்கூட்டம் பாடல் இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி இசையில் அவரும் ராகுல் நம்பியாரும் இணைந்து பாடியுள்ள இப்பாடலை, பாடலாசிரியர் விதாகர் எழுதியுள்ளார்.

படத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடல், படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.

இணையம் முழுக்க வைரலாகி வரும் இப்பாடல் யூடூயுப் தளத்தில் பெரும் பார்வை எண்ணிக்கைகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும், இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனைத் தொடர்ந்த அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை. அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாகப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையைப் படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’ எனும் கருத்தில், திறமை மிகு இளைஞர்கள் குழுவின் முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகியுள்ளது “பருந்தாகுது ஊர் குருவி” படம்.

இப்படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media தனது முதல் படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா P.,வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவில்…

ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல், எடிட்டர்கள் – ( டான் படப்புகழ் )நாகூரான் ராமசந்திரன் – நெல்சன் அந்தோணி, இசை – ரெஞ்சித் உண்ணி, சண்டைக் காட்சிகள் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, மக்கள் தொடர்பு – AIM சதீஷ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

Parundhaaguthu Oor Kuuvi first single released

நடன இயக்குனர் பிருந்தா-வை பார்த்து பிரமித்த நடிகர் PL தேனப்பன்.; ஏன்.?

நடன இயக்குனர் பிருந்தா-வை பார்த்து பிரமித்த நடிகர் PL தேனப்பன்.; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் ஹிருது பாபி சிம்ஹா ஆர் கே சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த படம் ‘தக்ஸ்’.

பிப்ரவரி 24ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது இப்பட நடிகர் PL தேனப்பன் பேசியதாவது…

“மெல்லிசைப் பாடலைப் படமாக்கப் போகும் போதெல்லாம், உடனடியாக நம் நினைவுக்கு வரும் பெயர் பிருந்தா மாஸ்டர். இன்று ஒரு ஆக்‌ஷன் கலந்த திரில்லர் பட இயக்குநராக அவரைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன் நன்றி”

ஒளிப்பதிவாளர் பிரியேஷ் பேசுகையில்…

“என்னைப் போன்ற ஒரு புதிய ஒளிப்பதிவாளருக்கு வாய்ப்பளித்த பிருந்தா மாஸ்டருக்கு நன்றி. இந்த சிறந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபு, நடிகர்கள் ஹிருது மற்றும் குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் நன்றி. பாபி சிம்ஹா சார், முனிஷ்காந்த் சார் மற்றும் அனைத்து படக்குழுவினருக்கும் நன்றி.

நான் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்ஸை சந்திப்பது இதுவே முதல் முறை. இந்த படத்திற்கு அவர் மிக அபாரமான இசையை கொடுத்துள்ளார்” இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

நடிகை ரம்யா பேசுகையில்…

“இந்த வாய்ப்பை கொடுத்த கடவுளுக்கும், என் அம்மாவுக்கும், பிருந்தா மாஸ்டருக்கும் நன்றி. என்னை மாடலாக காட்டிய சில விளம்பரங்களுக்கு அவர் தான் நடனம் அமைத்தார். அவர் என்னை இந்தப் படத்தில் நடிக்க வைத்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. படம் அட்டகாசமாக வந்துள்ளது, நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாக இது இருக்கும்”.

தயாரிப்பாளர் ரியா ஷிபு பேசுகையில்…

“இந்த திரைப்படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒட்டு மொத்த டீமும் அபாரமான வேலையைச் செய்திருக்கிறார்கள். தக்ஸ் பெரிய வெற்றியைப் பெறும் எனும் நம்பிக்கை உள்ளது.

தயாரிப்பாளர் தேனப்பன் சார் திரையில் பிரமாதப்படுத்தியுள்ளார். பிருந்தா மாஸ்டர் அனைவரையும் ஊக்குவிப்பார். என் அண்ணன் ஹிருது இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். சாம் சிஎஸ்ஸின் இசை படத்தைப் படத்திற்கு உயிர்ப்பைத் தந்துள்ளது.

முனிஷ்காந்த் சார் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர், இந்த படத்தில் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிரியேஷ் சார் எனக்கு இன்னொரு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தில் அவர் அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தைப் பார்த்து எங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘தக்ஸ்’ திரைப்படம் பிப்ரவரி 24, 2023 வெளியாகுமெனப் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர்கள்:

ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி மற்றும் பலர்

தொழில் நுட்பக் குழுவினர்:
இயக்கம் : பிருந்தா
தயாரிப்பு : HR பிக்சர்ஸ் – ரியா ஷிபு
இசை : சாம் CS
ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசுவாமி
புராஜக்ட் டிசைனர்: ஜோசப் நெல்லிக்கல்
எடிட்டர்: பிரவீன் ஆண்டனி
ஆக்சன்: பியோனிக்ஸ் பிரபு & ராஜசேகர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: முத்து குருப்பையா
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : பரமேஷ்வர் சுபாஷ்
ஆடை: மாலினி கார்த்திகேயன்
நிர்வாக தயாரிப்பாளர் – யுவராஜ்
இணை இயக்குநர்: ஹரிஹர கிருஷ்ணன் ராமலிங்கம்
டிசைனர்: கபிலன்
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் – சிவா (Aim)

PL Thenappan praises director brindha

More Articles
Follows