தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக சினிமாவை கலக்கிய பாகுபலி படத்தை தொடர்ந்து ‘ஆர்ஆர்ஆர்’ என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி.
தற்போது கொரோனா தொற்று ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.்
இந்த ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி படத்தை வெளியிடயிருந்த நிலையில் கொரோனா பிரச்னையால் அடுத்த ஆண்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தை முடித்து விட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கவுள்ள ஒரு படத்தை ராஜமௌலி இயக்கவிருக்கிறாராம்.
இந்த படத்திற்கான திரைக்கதை பணியை ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது்
தற்போது நடித்து வரும் சர்காரு வாரிபாட்டா என்ற படத்தையும் திரிவிக்ரம் இயக்கும் படத்தையும் முடித்துவிட்டு தான் ராஜமௌலி படத்தில் நடிக்கவுள்ளாராம் மகேஷ் பாபு.
இவர்கள் இருவரும் முதன்முறையாக இணையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajamouli to direct Super Star Mahesh Babu’s next film