சூப்பர் ஸ்டாரின் பாராட்டை பெற்ற நானியின் ‘தசரா’

சூப்பர் ஸ்டாரின் பாராட்டை பெற்ற நானியின் ‘தசரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நானியின் ‘தசரா’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் , பிரபலங்கள் தொடர்ந்து அதற்கு நல்ல விமர்சனங்களை அளித்து வருகின்றனர்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கிய இப்படம் தான் மிகவும் பெருமைப்படக்கூடிய படம் என்று தனது பாராட்டை தெரிவித்தார்.

அவர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பையும் பரவலாக பாராட்டினார்.

இதனால் படக்குழு மிகவும் சந்தோசத்தில் உள்ளது.

Super Star praises on Nani’s mass hit ‘Dasara’

CSK வெற்றியை கொண்டாடிய LGM.; சிவகார்த்திகேயன் சதீஷ் & கீர்த்தியும் பார்வையிட்டனர்

CSK வெற்றியை கொண்டாடிய LGM.; சிவகார்த்திகேயன் சதீஷ் & கீர்த்தியும் பார்வையிட்டனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று ஏப்ரல் 3.. சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

இந்த போட்டியை நேரடியாகக் காண தோனி என்டர்டெய்ன்மென்ட் குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு பணிகளுக்கிடையே தோனியின் தயாரிப்பில் உருவாகும் ‘எல். ஜி. எம்’ பட குழுவினர் இன்ப அதிர்ச்சியுடன் இந்த போட்டியை காண வருகை தந்தனர்.

தோனியின் சாதுரியமான அதிரடி ஆட்டத்தால் சென்னை அணியை வெற்றி பெற செய்த தருணத்தை நேரில் கண்டு ரசித்த படக்குழுவினர், தோனியின் மாயாஜால வித்தையை மெய் மறந்து ரசித்து பாராட்டினர்.

எம். எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தனது முதல் தமிழ் திரைப்படமாக ‘எல். ஜி. எம்’ எனும் திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது.

இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். அவரே இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டியை நேரில் கண்டு ரசித்த ‘எல். ஜி. எம்’ பட குழுவினருடன் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் வணிக பிரிவின் தலைவரான விகாஸ் ஹசிஜா மற்றும் கற்பனை திறன்மிகு படைப்பின் தலைவரான பிரியான்சு சோப்ரா உடனிருந்தனர்.

மேலும் நடிகர்கள் சிவகார்த்திகேயன் சதீஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவரும் இந்த போட்டியை கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

LGM celebrating CSK win.; Sivakarthikeyan Satish & Keerthy also visited

24 மணி நேரம் கமல்ஹாசனுடன் இருக்க ஆசைப்படும் இளம் நடிகை

24 மணி நேரம் கமல்ஹாசனுடன் இருக்க ஆசைப்படும் இளம் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1970 – 80-களில் நடிகர் கமல்ஹாசன் மீது கல்லூரி மாணவிகள் பலரும் ஆசை கொண்டனர். அவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்த காரணத்தினால் அவருக்கு ‘காதல் மன்னன்’ என்ற பெயர் அப்போது இருந்தத.

மேலும் கமல் படங்களில் முத்தக் காட்சி தவறாமல் இடம்பெறும். சினிமா மட்டுமில்லாமல் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் காதல் மன்னன் ஆகவே திகழ்ந்தார் கமல்ஹாசன்.

திருமணத்தை தாண்டியும் பல பெண்களுடன் உறவில் இருந்தார் கமல்ஹாசன்.

சிம்ரன் கௌதமி, பூஜா குமார் என பல நடிகைகள் கமலின் காதல் வலையில் சிக்கியவர் தான்.

இந்த நிலையில் கமல் குறித்து ஒரு நடிகை தன் ஆசையை தெரிவித்துள்ளார்.

கோப்ரா மற்றும் வேலன் படங்களில் நடித்தவர் மீனாட்சி கோவிந்தராஜன். இவரின் சமீபத்தில் பேட்டியில்..

“தனக்கு நடிகர் கமல்ஹாசனை மிகவும் பிடிக்கும். அவரின் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும்.

மேலும் ஒரு நாள் முழுக்க கமல்ஹாசனின் உதவியாளராக இருந்து அவர் படத்திற்காக என்னென்ன செய்கிறார்? என்பதை பார்க்க வேண்டும் என தன் ஆசையை தெரிவித்துள்ளார் மீனாட்சி.

A young actress who wants to be with Kamal Haasan for 24 hours

இசையை சந்தித்து நன்றி சொன்னேன்..; இளையராஜா படத்தை பகிர்ந்த சூரி

இசையை சந்தித்து நன்றி சொன்னேன்..; இளையராஜா படத்தை பகிர்ந்த சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்து வெளியான படம் ‘விடுதலை’.

எல்ரெட் குமார் தயாரித்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

‘விடுதலை’ படம் மார்ச் 31 இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.குறிப்பாக சூரியின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு, இப்படம் வெற்றிபெற்றதை அடுத்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இருவரும் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூரி தற்போது இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சூரி தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், “இசையை‌ சந்தித்து நன்றி கூறினேன். ஆசி வாங்கினேன். இறைவனுக்கு நன்றி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

soori met to Ilayaraja and thanked him

‘இந்தியன் 2’ படத்தில் ‘விக்ரம்’ பட கூட்டணியை அமைத்த ஷங்கர்

‘இந்தியன் 2’ படத்தில் ‘விக்ரம்’ பட கூட்டணியை அமைத்த ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் கொரோன லாக் டவுன் உள்ளிட்ட பல காரணங்களால் நான்கு வருடங்களுக்கு கமல்ஹாசன் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

இதனால் ஏங்கி இருந்த ரசிகர்களுக்கு மெகா விருந்தளிக்கும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கமல் தயாரித்து நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் உலகமெங்கும் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர. நடிக்க அனிருத் இசை அமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது காளிதாஸ் மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் காளிதாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘இந்தியன் 2’ ஷூட்டிங் தற்போது தைவான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

actor Kalidas Jayaram join to kamal’s indian 2

தமிழ் புத்தாண்டில் யானை முகத்தானாக மாறி வரும் யோகி பாபு

தமிழ் புத்தாண்டில் யானை முகத்தானாக மாறி வரும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தில் ‘லால் பகதூர் ஷாஸ்த்தி’, ‘வரி குழியிலே கொலபாதகம்’, ‘இன்னு முதல்’ என மூன்று ஹிட் படங்கள் டைரக்ட் செய்தவர் ரெஜிஷ் மிதிலா.

இவர் ‘யானை முகத்தான்’ படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

இதில் விநாயகர் வேடத்தில் நடிக்கிறார் யோகி பாபு. இவருடன் ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா ( ‘மருது’ பாட்டி ), நாகவிஷால் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து, இயக்கம் : ரெஜிஷ் மிதிலா
தயாரிப்பாளர்கள்: ரெஜிஷ் மிதிலா, லிஜோ ஜேம்ஸ்:
தயாரிப்பு நிறுவனம்: தி கிரேட் இந்தியன் சினிமாஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக்Sநாயர்
படத்தொகுப்பு : சைலோ
இசையமைப்பாளர்: பரத் சங்கர்
ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய்.S
ஒப்பனை: கோபால்
நிர்வாக தயாரிப்பு : சுனில் ஜோஸ்
தயாரிப்பு மேற்பார்வை : ஜெயபாரதி

ஓரிரு தினங்களுக்கு முன் ‘ஆளா ஏ ஆளா..’ எனத் தொடங்கும் பாடல் மற்றும் பாடலுக்கான காணொளியும் வெளியாகி இருக்கிறது. பாடலாசிரியர் சி. எம். லோகேஷ் எழுதியிருக்கும் இந்த பாடலை பின்னணி பாடகர் அந்தோணி தாசன் பாடியிருக்கிறார்.

சமூக பக்தி பாணியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தி கிரேட் இந்தியன் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ரஜீஷ் மிதிலா மற்றும் லிஜோ ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த படம் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

YannaiMugathaan releasing worldwide on April 14

More Articles
Follows