காஞ்சனா-3 பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம்

காஞ்சனா-3 பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய திரைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)சன் பிக்சர்ஸ் மிகுந்த பொருட் செலவில் பிரமாண்டமாய் தயாரிக்க இருக்கும் 3D திரைப்படம்.
இந்தியன் சூப்பர் ஹீரோ கதையில் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார்
என தகவல்கள் வெளியாகியுள்ளன.
படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்? – சினேகன்

இந்த உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்? – சினேகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)ஷமன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பி.மாரிமுத்து இயக்கியுள்ள படம் தொரட்டி. ஷமன் மித்ரு கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சத்யகலா நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அழகு, சுந்தர்ராஜ், முத்துராமன், ஜெயசீலன், ஸ்டெல்லா, ஜானகி ஆகியோரும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தை SDC பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. இப்படம் சர்வதேச அளவில் நான்கு முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளது. இப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் சிலர் மிக மிக அற்புதமாக படம் என்று பாராட்டி இருக்கிறார்கள். நேற்று (22.07.2019) இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் மாரிமுத்து பேசியதாவது,

“ஒரு சிறிய படத்தை பெரிய இடத்துக்கு கொண்டு சேர்க்குற பொறுப்பு உங்களுக்கு உண்டு. அதைச் சரியாகச் செய்து வருகிறீர்கள். எங்கள் படத்தையும் அப்படி கொண்டு சேர்ப்பீங்கன்னு நம்புறேன். தொரட்டி என்பதை ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளுக்கு இலைகளைப் பறிப்பதற்கு பயன்படுத்துவார்கள். மேலும் தொரட்டி ஆடு மேய்ப்பவர்களின் ஆறாவது விரல் போன்றது. இந்தப்படத்தின் பக்கபலம் தயாரிப்பாளர் தான். அடுத்து படத்தின் டெக்னிஷியன்கள். ஒளிப்பதிவாளர் எடிட்டர் இவர்களின் உழைப்பு அபாரமானது. இந்தப்படத்தில் சினேகன் சார் பாடல்களை மிக அழகாக எழுதித் தந்தார். சமீபகாலமாக கலை படைப்புகளுக்கு வர்ணம் பூசும் நிலைமை இருக்கு. இது ஒரு எளிய மனிதனின் வாழ்க்கை. தயவுசெய்து இதற்கு எந்தச் சாதி சாயமும் பூச வேண்டாம் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்

நடிகர் அழகு பேசியதாவது

“1960-ல் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். இந்தப்படம் அந்தக் காலகட்டத்தின் கிராமத்து வாழ்வை கண்முன் காட்டியது. இந்தக்கதையில் ஒரு லவ் இருக்கிறது. இயக்குநர் மாரிமுத்து கதை திரைக்கதை எழுதி அழகாக படத்தை உருவாக்கி விட்டார். அவரின் கதையை தயாரித்த தயாரிப்பாளர் பாராட்டுக்குரியவர். இப்படியான படத்தை தயாரிக்க முன் வந்தது பெருமையாக இருக்கிறது. இப்படத்தின் இசை மிக அருமையாக இருக்கிறது. சினேகன் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் பாடல்களை மண்வாசனை மாறாமல் எழுதி இருக்கிறார். இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னிடம் வந்து நீங்க எத்தனையோ படம் நடித்துள்ளீர்கள். ஆனால் இப்படத்திற்காக உங்களுக்கும் ஒத்திகை பார்க்க வேண்டும் என்றார்கள். அது மிகச் சிறப்பான அனுபவமாக இருந்தது. இந்தப்பட டீம் இன்னும் சாதிக்காமல் இருக்கலாம். ஆனால் இவர்களிடம் சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய இருக்கிறது. இந்தப்படத்தை Sdc பிக்சர்ஸ் வெளியிடுவது பெரிய மகிழ்ச்சி என்றார்”

தயாரிப்பாளர் இந்து கருணாகரன் பேசியதாவது,

“எல்லோரும் வணக்கத்தில் ஆரம்பிப்பார்கள். நான் நன்றியில் துவங்குகிறேன். தொரட்டி பாடல்களுக்கு நீங்கள் நல்ல வரவேற்பைப் கொடுத்தீர்கள். தொரட்டி படம் பார்ப்பவர்களுக்கு இதமான பயணமாக இருக்கும். ஆனால் எங்களுக்கு அது சிரமமான பயணம். ஏன் என்றால் படத்தில் பயன்படுத்துவதற்காக இயக்குநர் கேட்டப் பொருள்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. இருந்தாலும் படம் மிகச்சரியாக வர வேண்டும் என்பதால் எங்கள் குழுவினர் அனைவரும் உழைத்தோம். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருப்பான். அந்தக் கிராமத்த்தானை இப்படம் வெளிக்கொண்டு வரும்.இந்தப்படத்தை பார்த்தவர்கள் ஒரு கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தது போல இருக்கிறது என்றார்கள். இந்த வார்த்தை தான் நாங்கள் படத்திற்காக பட்ட கஷ்டங்களை எல்லாம் மறக்கச் செய்கிறது. நடிப்பிற்கான ட்ரைனிங் மட்டுமே ஆறுமாதம் எடுத்துக் கொண்டார்கள். இப்போது படம் எடுப்பதை விட எடுத்த படத்தை வெளியிடுவது தான் பெரிய போராட்டம். இந்தப்படத்தை நல்லபடியாக வெளியிடும் SDC பிக்சர்ஸ்க்கு என் நன்றி” என்றார்.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது,

“நிறைய பேர்களுக்கு தொரட்டிப் பாடல்கள் பிடித்திருந்தது என்று சொன்னார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படக்குழுவின் அழைப்பை ஏற்று வந்திருக்கும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. இன்னும் கிராமங்களில் சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. இங்கு அதைச் சொல்லத்தான் ஆள்கள் இல்லை. இந்தப்படம் தான் எனக்கு சேரன் அமீர் படங்களுக்குப் பிறகு பாடல்கள் எழுத மனநிறைவாக இருந்த படம். ஊரில் எங்கப்பா நடந்து போகும்போது பின்னால் 40 ஆடுகள் ஒன்றாக நடந்து போகும். இன்றைக்கு 100 மனிதர்களை ஒன்றாக நிற்க வைப்பது கடினம். இந்த உலகில் கிராமத்தானை போல் யாரால் பாசம் காட்ட முடியும்? சென்னையை அண்ணாந்து பர்க்கக் கூட முடியவில்லை. யாராவது காலை வாரி விடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது. விவசாயத்தில் நூற்றுக்கணக்கான தொழில்கள் இருக்கிறது. மண்புழு எடுத்தல், களை பறித்தல், ஆடுமாடு மேய்த்தல் என எத்தனையோ இருக்கின்றன. மண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால் இன்னும் பத்து வருடம் கூட சம்பளம் வாங்காமல் பாட்டு எழுதலாம். இப்படிப்பட்ட பாடல்களுக்கான களம் கிடைப்பது அரிது. இந்த மாதிரி படங்களின் தேவை இப்போது அதிகமாகி இருக்கிறது. ஒரு படைப்பாளன் தயாரிப்பாளாராக மாறுவது பெரிய சிரமம். இந்தப்படத்திற்காக என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வேன். நம் கிராமத்து வாழ்க்கையில் எத்தனையோ கதைகளும் வார்த்தைகளும், வாழ்க்கையும் கொட்டிக் கிடக்கிறது. அவற்றையெல்லாம் படைப்பாக மாற்ற வேண்டும் தொரட்டியைப் போல. ” என்றார்

கதாநாயகன் ஷமன் மித்ரு பேசியதாவது,

“விவேகானந்தர் சொன்ன வார்த்தையைப் போல என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளும் இருந்தது. படம் தயாரிக்கவே கூடாது என்று நினைத்தவன் இந்தப்படத்தை இந்து கருணாகரன் சகோதரியோடு தயாரித்துள்ளேன். இப்படத்தை வெளியிட வேண்டி நிறைய சிரமங்களை சந்தித்தேன். மகாபாரதத்தில் ஒரு விசயத்தைச் சொல்வார்கள். “துரோபதியை துகில் உரியும் போது அவள் இரண்டு கைகளாலும் ஆடையைப் பிடித்துக் கொண்டு கிருஷ்ணா என்று கத்துவாளாம். ஒரு கட்டத்தில் ஆடையை விட்டுவிட்டு கிருஷ்ணா என்று கத்துவாளாம். அப்போது தான் கிருஷ்ணா வந்தானாம். அதுபோல் என் முன்னாடி வந்த கிருஷ்ணன் தான் இந்தப்படத்தை வெளியிடும் SDC பிக்சர்ஸ். அவர்களுக்கு நன்றி. இயக்குநர் என்னிடம் இப்படத்திற்கு நீங்கள் அதிக பயிற்சி எடுக்க வேண்டும் என்றார்..பயிற்சி என்றால் மனிதர்களோடு உள்ள பயிற்சி மட்டும் அல்ல. ஆடு தொரட்டி ஆகியவற்றோடு எல்லாம் பயிற்சி எடுக்க வேண்டும் என்றார் இயக்குநர். நான் பழகிய ஒரு ஆடு நான் போனால் என் பின்னால் ஓடிவரும். அந்தளவிற்கு என்னோடு பழகி விட்டது. நிறையக் காட்சிகளை எடுக்க நினைத்தும் எடுக்க முடியவில்லை. இங்கு அனிமல் போர்டு அனுமதி என்பது அவ்வளவு சிரமம். நிச்சயம் இந்தப்படம் மரப்பாச்சி பொம்மையை அணைத்துக் கொண்டு தூங்கும் உணர்வைத் தரும்.” என்றார்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் பி.மாரிமுத்து. பாடல்களுக்கு வேத்சங்கரும், பின்னணி இசைக்கு ஜித்தன் ரோஷனும் இணைந்து இசை அமைத்துள்ளனர். சினேகன் அனைத்துப் பாடல்களையும் எழுத ஒளிப்பதிவாளர் பொறுப்பை குமார் ஸ்ரீதர் ஏற்றுள்ளார். எடிட்டிங் ராஜாமுகமது.

ஆகஸ்ட் 2 ம் தேதி வெளியாகும் மயூரன்

ஆகஸ்ட் 2 ம் தேதி வெளியாகும் மயூரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “ மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள்.

வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்(தாரை தப்பட்டை ), அஸ்மிதா ( மிஸ் பெமினா வின்னர் ) மற்றும் பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு – பரமேஷ்வர் (இவர் சந்தோஷ்சிவனிடம் உதவியாளராக பணியாற்றியவர்)

இசை – ஜுபின் ( பழையவண்ணாரப்பேட்டை ) மற்றும் ஜெரார்ட் இருவரும்.

பாடல்கள் – குகை மா.புகழேந்தி

எடிட்டிங் – அஸ்வின்

ஸ்டன்ட் -டான்அசோக்

நடனம் – ஜாய்மதி

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – K.அசோக்குமார்,P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நந்தன் சுப்பராயன் ( இவர் இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் )

படம் பற்றி இயக்குனர் நந்தன்சுப்பராயன் கூறியது…

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் நிர்பந்தத்திற்கு பணி யாதவர்கள் போராளிகள். இங்கு அதிர்ஷ்டசாலி களைவிட போராளிகளே அதிகம். நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவர்க்கும் அதிகாரம் படைத்தவர்களின் பரிசு எப்போதும் உயிர் பயம் காட்டுவது தான், அதற்கு நல்லவர்கள் கொடுக்கும் விலை தனிமை… யார் கண்ணிலும் படாத தலைமறைவு வாழ்க்கை… மற்றும் உனக்கு எதுக்கு வம்பு எனும் அறிவுரைகள் மட்டும்தான்.

சொல்லிக்கொடுக்கப்பட்ட மரபுகளிலிருந்து விலகி நிற்பவனை உலகம் வேறுவிதமாகத்தான் பார்க்கிறது. மயூரன் விரைந்துன்னை காக்க வருபவன் என்று பொருள்படும், இன்னொரு இடத்தில் வெற்றி புனைபவன் என்றும் சொல்லலாம்.

கல்லூரி விடுதி தான் கதைக்களம். என்னால் எதுவும் செய்ய முடியும் என எழுச்சியூட்டும் பருவத்தினர் ஒட்டுமொத்தமாக வசிக்கும் ஒரு சமூகம்… ஒரு தேசம்…

அடர்ந்த வனங்களில் காணப்படும் பல்வேறு தாவரங்கள் போன்றவர்கள். ஒன்று மரம், ஒன்று செடி, ஒன்று கூடி. ஒரே நிலத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். இங்கே சந்திக்கும் முகங்கள் இயல்பாய் பழகும் நட்பையும் உருவாக்குகிறது, எதிரான எண்ணம் கொண்டவர்களிடம் குரோதமும், பகையும் வளர்க்கிறது. என் எண்ணம், என் விருப்பம் என்பதைத் தாண்டி, எது நியாயம் எது தர்மம் அது கொடுக்கும் அடுத்த வினாடி ஆச்சரியம் தான் வாழ்க்கை. முடிந்தவரை நியாய உணர்வுகளை அலங்காரம் இன்றி சொல்லியிருக்கும் படம் தான் மயூரன்.

படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தயாரிப்பாளர் H.முரளி அவர்கள் Banner மூலமாக வெளியிட பட உள்ளது. என்றார் இயக்குனர் நந்தன் சுப்பராயன்.

ராங்கா பேசிய ராஷ்மிகா மந்தனா..; கடுப்பான கன்னட ரசிகர்கள்

ராங்கா பேசிய ராஷ்மிகா மந்தனா..; கடுப்பான கன்னட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kannada fans Boycott Dear Comrade movieகீதா கோவிந்தம் என்ற படத்தில் நடித்து ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர்.

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட்ஸ் என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளார் ராஷ்மிகா..
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதன் புரோமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது ராஷ்மிகாவிடம் சில கேள்விகளை கேட்டனர்.

கன்னட மொழியில் பேசுவது உங்களுக்கு ரொம்ப சுலபமாக இருந்திருக்குமே என ராஷ்மிகாவிடம் கேட்டனர்.

“கன்னடத்தில் டப்பிங் பேசுவது எனக்கு கஷ்டமாக இருந்தது” என்றார்.

கர்நாடகாவிலேயே பிறந்து, வளர்ந்தவரான ராஷ்மிகா இப்படிக் கூறியது கன்னட மொழி ஆதரவாளர்களிடம் கோபத்தை கிளப்பி உள்ளது.

எனவே ‘பாய்காட் டியர் காம்ரேட்’ என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ரசிகர்கள் படத்தை பார்க்க கூடாது என கூறி வருகின்றனர்.

Kannada fans Boycott Dear Comrade movie

ரஜினியின் 2.0 படத்தை அடுத்து சீனா செல்லும் அஜித் படம்

ரஜினியின் 2.0 படத்தை அடுத்து சீனா செல்லும் அஜித் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajiths Nerkonda Paarvai release plans in Chinaலைகா, ரஜினிகாந்த், ஷங்கர் ஆகியோரது கூட்டணியில் உருவாகி இந்தியாவில் மாபெரும் வெற்றிப் பெற்ற படம் 2.0.

ரூ. 500 கோடியில் உருவான இப்படம் அனைவரிடத்திலும் நல்ல பாராட்டைப் பெற்றது.

படம் வெளியாகி 1 வருடத்தை நெருங்கும் வேளையில் விரைவில் சீனாவில் படத்தை வெளியிட லைகா முயற்சித்து வருகிறது.

இப்படத்த தொடர்ந்து அஜித் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படத்தையும் சீனாவில் வெளியிட முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

வினோத் இயக்கியுள்ள இப்படத்தை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.

இதற்குமுன் போனிகபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவிலும் வெளியாகி 16 மில்லியன் டாலர் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajiths Nerkonda Paarvai release plans in China

உன்ன பொம்பள பொறுக்கினு சொல்லிடுவாங்க… ரஜினிக்கு சிவகுமார் அட்வைஸ்

உன்ன பொம்பள பொறுக்கினு சொல்லிடுவாங்க… ரஜினிக்கு சிவகுமார் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini talks about Sivakumar on Kaappaan audio launchசூர்யா நடித்துள்ள காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துக கொண்டார். அப்போது அவர் சிவகுமாருடன் தனது நட்பு குறித்து பேசினார்.

“கவிக்குயில்’ பட சூட்டிங்ல சமயத்துல ஸ்ரீதேவி, படாபட் ஜெயலட்சுமி கிட்ட பேசிக்கிட்டே இருப்பேன். அப்போ சிவகுமார், எப்பப் பார்த்தாலும் பொன்னுங்க கிட்டயே பேசுறியே.. ஏதாவது புக்ஸ் படிக்கலாமில்லையான்னு திட்டுவாரு.

அதே மாதிரி ‘புவனா ஒரு கேள்விக்குறி’ பட ஷுட்டிங்ல சுமித்ராகிட்ட பேசிட்டிருப்பேன்.

அப்போ உதவி இயக்குனர் வந்து இரண்டு பக்கத்துக்கு வசனம் கொடுத்து, படிக்க சொன்னாரு.

நானும் மனப்பாடம் பண்ணிட்டிருந்தேன்.

ஆனா சிவகுமார் வந்து படத்துல அந்த டயலாக் சீன் இல்லை. நீ ரொம்ப நேரமா சுமித்ரா கூட பேசிட்டிருந்த, யாராச்சும் பார்த்தால் உன்னை பொம்பள பொறுக்கினு சொல்லிடக் கூடாது இல்லையா, அதான் இப்படி பண்ணேன் என்கிட்ட சொன்னாரு.

எனக்கு கெட்ட பெயர் வந்துடக் கூடாதுன்னு என்னைப் பார்த்துக்கிட்டவரு சிவக்குமாரு,” என ரஜினிகாந்த் பேசினார்.

இதனைக் கேட்டதும் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்து போனது.

Rajini talks about Sivakumar on Kaappaan audio launch

More Articles
Follows