அசத்திட்டீங்க அகோரி; காஞ்சனா 3 சூட்டிங்கில் ஆம்புலன்ஸ் வைத்து நடித்து கொடுத்த சம்பத் ராம்

அசத்திட்டீங்க அகோரி; காஞ்சனா 3 சூட்டிங்கில் ஆம்புலன்ஸ் வைத்து நடித்து கொடுத்த சம்பத் ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் ‘காஞ்சனா 3’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மாபெரும்
வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் இரண்டு பாகங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்ததால்,
‘காஞ்சனா 3’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்க, படமும் மிகப்பெரிய பொருட்ச்செலவில்
பிரம்மாண்டாக தயாரிக்கப்பட்டுள்ளது.

படம் வெளியான மூன்று நாட்களிலேயே ரூ.60 கோடியை வசூலித்து பெரும் சாதனைப் படைத்திருக்கிறது.
இதற்கு காரணம் படத்தின் மீது இருந்த எதிர்ப்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, படத்தில் இடம்பெற்ற
வித்தியாசமான கதாபத்திரங்களும், அவர்களது நடிப்பும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

காஞ்சனா முதல் பாகத்தில் வில்லனாக நடித்த சம்தம் ராம், ‘காஞ்சனா 3’ யில் அகோரியாக
வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த
சம்பத் ராம், தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வர, ’காஞ்சனா
3’ அவர் நடித்திருக்கும் அகோரி கதாபாத்திரம், அவரையே மறைத்துவிட்டு புதிய சம்பத் ராமை பார்க்க
வைக்கிறது.

கூன் வளைந்த முதுகோடு, படம் முழுவதும் குணிந்தபடியே நடித்திருக்கும் சம்பத் ராமின் நடிப்பும், அவரது
அகோரி வேடமும் படத்தில் முக்கிய பங்குபெறுவதோடு, படத்தின் திருப்புமுனையாக அமைந்திருப்பதால்,
அவரது வேடத்திற்கும், அதில் அவர் நடித்த விதத்திற்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

இந்த வேடத்திற்காக பெரிய நடிகர் ஒருவரிடம் முதலில் பேசியிருக்கிறார்கள், சில காரணங்களால் அந்த
நடிகர் நடிக்க முடியாமல் போக, சம்பத் ராமுக்கு அகோரி வேடம் போட்டு மேக்கப் டெஸ்ட்
எடுத்திருக்கிறார்கள். அப்போது அவரை பார்த்த ராகவா லாரன்ஸ், ”இவரே சரியா இருக்கிறாரே, இவரை நடிக்க
வச்சிரலாம்”, என்று கூறி சம்பத் ராமை நடிக்க வைத்திருக்கிறார்.

முதல் முறையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதால், நடிப்பையும் வித்தியாசமாக கொடுக்க
வேண்டும் என்று நினைத்த சம்பத் ராம், அந்த வேடத்திற்காக ரொம்பவே மெனக்கட்டதோடு, அந்த
கதாபாத்திரன் நடை, பாவனை, டயலாக் டெலிவரி உள்ளிட்ட அனைத்திலும் கவனம் செலுத்தி, நிஜ
அகோரியாகவே மாறி லாரன்ஸ் முன்பு நின்று பர்பாமன்ஸ் செய்ய, அவர் அசந்துவிட்டாராம்.

பிறகு சம்பத்
ராமின் போஷன் முடிந்த பிறகு, அவரை லாரன்ஸ் எங்கு பார்த்தாலும், ”அசத்திட்டிங்க, சூப்பரா வந்திருக்கு..”
என்று பாராட்டுவாராம்.

ராகவா லாரான்ஸின் பாராட்டு சந்தோஷத்தை கொடுத்தாலும், ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்குமோ,
என்று பயந்த சம்பத் ராம், படம் வெளியான பிறகு பெரும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். சென்ற
இடமெல்லாம் அவரை அடையாளம் கண்டு ரசிகர்கள் பாராட்டி வருகிறார்களாம்.

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு ‘காஞ்சனா 3’யிலும் அந்த அகோரி வேடத்தில் சம்பத் ராம் தான்
நடித்திருப்பதால், தற்போது தெலுங்கு சினிமாவை அவரது நடிப்பு குறித்து பாராட்டி வருகிறது.

அதேபோல்,
மலையாளத்தில் நேரடியாக தமிழில் வெளியான ‘காஞ்சனா 3’ கிடைத்திருக்கும் வரவேற்பை போல, சம்பத்
ராமின் அகோரி வேடத்திற்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால், விரைவில் தெலுங்கு மற்றும்
மலையாள சினிமாவில் சம்பத் ராம் முக்கிய நடிகராவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடிக்கும் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கும் சம்பத் ராம்,
அப்படத்தின் சண்டைக்காட்சியில் ஈடுபட்ட போது விபத்துக்கு உள்ளாகி உடல் நிலை முடியாமல் போனாலும்,
படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பியவர், திடீர் உடல் நிலை பாதிப்பால்
அவதிப்பட, மருத்துவமனையில் பரிசோதித்த பிறகே அவரது நெஞ்சில் ரத்தம் கட்டியிருப்பது தெரிய
வந்திருக்கிறது.

உடனே மருத்துவர்கள் அவரை அட்மிட் ஆக சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அன்றைய
தினத்தில் தான் காஞ்சனா 3 படப்பிடிப்பு இருப்பதோடு, சம்பத் ராம் இடம்பெறும் அந்த காட்சியில் கோவை
சரளா, ஸ்ரீமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இருப்பதால், தனக்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்க
கூடாது என்று, அந்த வலியையும் பொருட்படுத்தாமல் நடிக்க கிளம்பியிருக்கிறார். மருத்துவர்கள் எவ்வளவோ
அறிவுறுத்தியும், நடிப்புக்கு முதலிடம் கொடுத்தவர், நெஞ்சு வலியை தாங்கிக் கொண்டு அந்த காட்சியில்
நடித்திருக்கிறார்.

இதை அறிந்த லாரன்ஸ், அவருக்காக ஆம்புலன்ஸ் ஒன்றையும் படப்பிடிப்பில் தயார்
நிலையில் வைத்திருந்தாராம்.

கடவுள் அருளால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல், சம்பத் ராம்,
நல்லபடியாக நடித்து முடித்துவிட்டு பிறகு மருத்துவமனையில் அட்மி ஆகி சிகிச்சை பெற்றிருக்கிறார்.

தற்போது, எப்போதும் போல பூரண உடல் நிலையுடன் ஆக்டிவாக மீண்டும் படப்பிடிப்புகளில்
பிஸியாகியிருக்கும் சம்பத் ராம், பிரபு சாலமன் இயக்கத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில்
உருவாகும் படத்தில் நடித்து வருவதோடு, சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புது படம் ஒன்றிலும் முக்கிய
வேடத்தில் நடித்து வருகிறார். சத்யசிவா இயக்கி வெளியீட்டுக்கு தயராக உள்ள ‘1945’ படத்திலும் சம்பத்
ராம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டயின் ’கொலைகாரன்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

இப்படி முன்னணி இயக்குநர்கள் பலரது படங்களில் பல முக்கியமான வேடங்களில் நடித்து வரும் சம்பத்
ராம், படத்திற்கு படம் தனது நடிப்பு திறமையை நிரூபிப்பதோடு, வில்லனாக மட்டும் இன்றி நல்ல குணச்சித்த
வேடம் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதையும் நிரூபித்து
வருகிறார்.

தளபதி 63 படத்தில் பவர்புல்லான கேரக்டரில் ஷாரூக்கான்.?

தளபதி 63 படத்தில் பவர்புல்லான கேரக்டரில் ஷாரூக்கான்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)சென்னையில் கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்ற போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் வந்திருந்தார்.

அப்போது அவரை மைதானத்திற்கு சென்று சந்தித்தார் டைரக்டர் அட்லீ. அதன்பின்னர் தனியாகவும் சந்தித்து பேசினார்.

தற்போது அட்லி இயக்கி வரும் தளபதி 63 படதில் ஷாரூக்கானை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் விஜய் படத்தில் ஷாரூக்கான் நடிப்பது பற்றிய செய்திகள் வைரலாகி வருகின்றன.

இப்படத்தில் ஒரு பவர்புல்லான நெகட்டிவ் கேரக்டரில் (ஒரு கெஸ்ட் ரோலில்) ஷாரூக்கான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை.

இதற்காக ஷாரூக்கானுக்கு ஒரு பெரும தொகையை ஏஜிஎஸ் நிறுவனம் தர சம்மதம் சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தளபதி63 சூட்டிங்கில் விபத்து; ஆஸ்பத்திரியில் ஆறுதல் சொன்ன விஜய்

தளபதி63 சூட்டிங்கில் விபத்து; ஆஸ்பத்திரியில் ஆறுதல் சொன்ன விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லீ மற்றும் விஜய் இணைந்துள்ள படம் தளபதி 63.

இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்பட வில்லை.

இப்பட படப்பிடிப்பு, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

சூட்டிங் சமயத்தில் எலக்ட்ரீசியன் செல்வராஜ் என்ற நபர் மீது அவரது தலையில் போக்கஸ் லைட் தவறி விழுந்தது.

படுகாயங்களுடன் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நிலை குறித்து, நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்துள்ளார் விஜய்.

தளபதி மருத்துவமனைக்கு சென்று வந்த போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் “எனை சுடும் பனி” சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கிறார்

ராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் “எனை சுடும் பனி” சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “எனை சுடும் பனி” என்று பெயரிட்டுள்ளனர்..

இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்…இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை பெஞ்ச் படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும் “என் காதலி சீன் போடுறா ” படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்த படத்தில் கதா நாயகனாக உயர்வு பெறுகிறார்.

கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்கிறார்…

கதா நாயகிகளாக உபாசனா RC , சுமா பூஜாரி நடிக்கிறார்கள்.

மற்றும் சிங்கம்புலி, மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – வெங்கட்

இசை – அருள்தேவ்

பாடல்கள் – ராம்ஷேவா வசந்த் ,கானா சரண்

கலை – அன்பு

நடனம் – சாண்டி ,சிவசங்கர்,லாரன்ஸ்சிவா

ஸ்டண்ட் – டேஞ்சர் மணி.

தயாரிப்பு மேற்பார்வை – ஜீவா

தயாரிப்பு – எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராம்ஷேவா.

படத்தின் துவக்கவிழா சென்னையில் படப்பிடிப்புடன் துவங்கியது…

படத்தை பற்றி இயக்குனர் ராம்ஷேவாவிடம் கேட்டோம்..

சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள் வெற்றியும் உபாசனாவும்…

உபாசனா தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கிறார்.

வெற்றி சாதாரண நிலையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது.

அவர்களுக்கு நடுவே வில்லனாக ஒருவன்.

அதற்கு பிறகு நடக்கும் சம்ப்வங்கள் என்ன என்பது திரைக்கதை சுவாரஸ்யம்.

இந்த திரைக்கதையில் நடந்த ஒரு கிரைம் சம்பவத்தை பாக்யராஜ் எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதும் படத்தின் சுவாரஸ்யம்.

படப்பிடிப்பு சென்னை, கேரளா, பொள்ளாச்சி, நெல்லியம்பதி மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது என்றார் இயக்குனர்.

மீண்டும் பாலாவுடன் இணையும் ஜிவி. பிரகாஷ்-ஆர்யா-அதர்வா

மீண்டும் பாலாவுடன் இணையும் ஜிவி. பிரகாஷ்-ஆர்யா-அதர்வா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கிய படம் ‘வர்மா’.

இப்படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கும் வேளையில் படம் திருப்தியில்லை என்றும் நஷ்டம் அடைந்தாலும் படத்தை ரிலீஸ் செய்ய விருப்பம் இல்லை என தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது.

இதுகுறித்து இனி பேச விரும்பவில்லை என அறிவித்தார் பாலா.

இதனால் நடிகர் விக்ரம் மீதும் கோபத்தில் இருக்கிறார் பாலா.

இதனையடுத்து தன் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

இப்படத்தில் நாயகர்களாக ஆர்யா மற்றும் அதர்வா இருவரும் நடிப்பார்கள் என தகவல்கள் வந்துள்ளன.

இந்த இருவரையும் வெவ்வெறு படங்களில் இயக்கியுள்ளார் பாலா.

ஆர்யாவை நான் கடவுள் மற்றும் அவன் இவன் ஆகிய 2 படங்களில் இயக்கியுள்ளார். அதர்வாவை பரதேசி படத்திற்காக இயக்கியுள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

நாயகியாக பிந்து மாதவி நடிப்பார் என்றும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.

பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் ஜிவி. பிரகாஷ் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

களவாணி 2 படத்திற்கு கோர்ட் தடை; சற்குணம் உருக்கமான வீடியோ

களவாணி 2 படத்திற்கு கோர்ட் தடை; சற்குணம் உருக்கமான வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கி வெளியான படம் களவாணி.

நசீர் தயாரித்திருந்த இப்படம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.

தற்போது களவாணி 2ம் பாகத்தை இயக்கி, தயாரித்து வருகிறார் சற்குணம்.

இதிலும் முதல் பாகத்தை போல விமல், ஓவியா ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், வருகிற மே 4ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடை குறித்த விவரம் வருமாறு…

களவாணி 2 படத்தை தமிழக திரையரங்க உரிமையை சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பெற்றது.

இந்த உரிமையை மெரினா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்க 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டது.

மெரீனா பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்த விதிகளை மீறி படத்தை விற்றிருப்பதாகவும் இதனால் ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கடுமையான நஷ்டம் ஏற்படும் என்றும், எனவே படத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெளியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஒ.குமரன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 10 ம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டது.

இது தொடர்பாக வீடியோ பதிவொன்றை வெளியிட்டிருக்கும் சற்குணம் வெளியிட்டுள்ளார். அதில்…

“கஷ்டப்பட்டு, கடன் வாங்கி படம் எடுத்தால் அதை தடுப்பதற்கு நிறைய சக்திகள் இருக்கிறது. வழக்கு தொடர்ந்துள்ள குமரன் யார் என்றே தெரியாது.

இருந்தபோதிலும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். எனக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்” என் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows