வெற்றி பெற்ற கபடி வீரர்களை கௌரவித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

Public Star Durai Sudhakar honoured Kabadi Playersதப்பாட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து தனக்கான இடத்தை தேடிக் கொண்டிருப்பவர் துரை சுதாகர்.

இவர் பப்ளிக் ஸ்டார் என அன்பாக ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

தற்போது முன்னணி இயக்குனர்களின் படங்களில் முக்கியமான கேரக்டரிலும் நடித்து வருகிறார்.

சினிமா மட்டுமின்றி சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்ற வீரர்களை துரை சுதாகார் கெளரவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆம்பலாப்பட்டு கிராமத்தில் டெல்டா சாம்பியன்ஸ் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான மாபெரும் கபடி தொடர் நடத்தப்பட்டது.

50 க்கும் மேற்பட்ட அணிகள் இந்த தொடரில் கலந்துக் கொண்டது.

இத்தொடரில் சேலத்தை சேர்ந்த சவன்மேன் ஆர்மி அணி முதல் பரிசை வென்றது. இரண்டாவது பரிசை ஸ்போர்ட்ஸ் கிளப் வடுவூர் அணியினர் வென்றனர்.

முதல் பரிசு வென்ற அணியினருக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

நேற்று முன்தினம் 19 ஆம் தேதி நடைபெற்ற இப்போட்டியில், திரைப்பட நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பையை தனது கையால் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கி, அவர்களை கெளதவித்த நடிகர் துரை சுதாகர், டெல்டா சாம்பியன்ஸ் கபடி கழகம் மற்றும் ஆம்பலாப்பட்டு கிராமவாசிகளுடன் இணைந்து விழாவினை சிறப்பித்தார்.

Public Star Durai Sudhakar honoured Kabadi Players

Overall Rating : Not available

Latest Post