தீபாவளிக்கு புதுப்பட வருகை திரையுலகிற்கு புத்துணர்ச்சி..; பப்ளிக் ஸ்டார் பாராட்டு

தீபாவளிக்கு புதுப்பட வருகை திரையுலகிற்கு புத்துணர்ச்சி..; பப்ளிக் ஸ்டார் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

durai sudhakarகொரோனா பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்கங்கள் கடந்த 10 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது.

திரையரங்கங்கள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே இருந்த சிறு பிரச்சினைகளால் புதிய திரைப்படங்கள் வெளிவராத சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே, பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதால், புதிய திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் சில வெளியாகின்றன.

இந்த நிலையில், தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதற்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் நடிகர் பப்ளிக் ஸ்டார், படங்களை ரிலீஸ் செய்யும் தயாரிப்பாளர்களை பாராட்டியிருப்பதோடு, தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

‘களவாணி 2’ மூலம் வில்லன் வேடத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தினார்.

பிறகு விஜய் சேதுபதியின் ‘க/ப ரணசிங்கம்’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தவர், தற்போது முன்னணி இயக்குநர்கள் பலரது படங்களில் நடித்து வருகிறார்.

சினிமா மீது சினிமா தொழில் மீதும் பேரார்வம் கொண்ட நடிகர் பவர் ஸ்டார் துரை சுதாகர், திரையரங்கங்கள் திறக்கப்பட்டு, புது படங்கள் ரிலீஸ் ஆவது குறித்து கூறுகையில்,…

“கடந்த 8 மாதங்களாக முடங்கியிருந்த திரைத்துறை தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

திரையுலகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்றால், மக்களை திரையரங்கங்களுக்கு வர வேண்டும்.

அதற்கு புதிய திரைப்படங்கள் உடனடியாக வெளியாக வேண்டும் என்ற நிலையில், திரையுலகில் ஏற்பட்ட சிறு பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு கண்டு, தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளிவர வழிவகுத்த தயாரிப்பாளர் சங்கத்திற்கு நன்றியையும், தற்போதைய கடினமான காலக்கட்டத்திலும் தங்களது படங்களை திரையரங்கங்களில் வெளியிடும் தயாரிப்பாளர்களுக்கு பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் படங்கள் மூலம் திரையுலகிற்கு புத்துணர்ச்சியும், திரையுலகினர் வாழ்க்கையில் வெற்றி வெளிச்சமும் கிடைக்க வேண்டும், என்று அனைத்து கடவுள்களையும் வேண்டுகிறேன்.” என தெரிவித்தார்.

Public star Durai Sudhakar on new tamil movies releasing on diwali

‘பிக்பாஸ்’ சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு ‘எதிர் வினையாற்று’ படக்குழுவினர் பரிசு

‘பிக்பாஸ்’ சனம் ஷெட்டி பிறந்தநாளுக்கு ‘எதிர் வினையாற்று’ படக்குழுவினர் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanam shettyதமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.

படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.

இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், நாயகி சனம் ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டிரைலரை படக்குழுவினர் (நவம்பர் 12) இன்று வெளியிட்டுள்ளனர்.

இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் கார்த்திக் இசையமைத்துள்ளார். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Ethir Vinaiyaatru team gives special gift to Sanam Shetty on her birthday

‘இரண்டாம் குத்து’ டீசரை யூடிப்பில் இருந்து நீக்க கோர்ட் உத்தரவு

‘இரண்டாம் குத்து’ டீசரை யூடிப்பில் இருந்து நீக்க கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irandam kuthu teaserபிட்டு படம் இயக்குனர் பெயரெடுத்த சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இரண்டாம் குத்து’.

இப்பட பர்ஸ்ட் லுக்கே படு கேவலமாக வாழைப்பழத்தை ஆண்களின் அந்த இடத்தில் வைப்பது போல டிசைன் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் இப்பட டீசரில் ஆபாச காட்சிகள் இருந்தன.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட் கிளையில் லட்சுமி என்பவர் இப்படத்திற்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில் வணிக நோக்கத்தில் ஆபாசமான விஷயங்களை இளைய சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் வகையில் சினிமா படங்கள் எடுக்கின்றனர்.

இரண்டாம் குத்து எனும் பெயரில் உருவாகி உள்ள படத்தின் டீசரில் ஆபாச வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இப்படத்தின் டீசர், போஸ்டர்களை உடனடியாக சமூகவலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும்,

படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்த வழக்கு நேற்று நவம்பர் 11 நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இதுபோன்ற டீசர்கள் பரவுவது நல்லது அல்ல.

எனவே இப்படத்தின் டீசரை உடனடியாக நீக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Madras HC orders removal of Irandam Kuthu teaser from internet

வரலட்சுமி-சோனாவின் ‘சேஸிங்’..; பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாரதிராஜா

வரலட்சுமி-சோனாவின் ‘சேஸிங்’..; பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீரக்குமார் எழுதி இயக்கத்தில வரலட்சுமி கதை நாயகியாக நடித்துள்ள சேஸிங்.

சண்டை காட்சியில், ‘டூப்’ போடாமல் அசத்தியிருக்கிறாராம் வரலட்சுமி.

இதில், சோனா, பாலசரவணன், இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மலேஷியாவில், 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

மதியழகன் முனியாண்டி என்பவர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் போஸ்டரை, பாரதிராஜா வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

Bharathi Raja released Vara laxmi in Chasing first look

chasing first look

ராஜமவுலி & விவசாயிகளை அசிங்கப்படுத்திய ராம் கோபால் வர்மா

ராஜமவுலி & விவசாயிகளை அசிங்கப்படுத்திய ராம் கோபால் வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ram gopal varma rajamouliக்ரீன் இந்தியா சேலஞ்ச் திட்டப்படி அண்மையில் நடிகர் மகேஷ் பாபு மரக்கன்றை நட்டு விஜய்க்கு சேலஞ்ச் செய்தார்.

அதன்படி விஜய்யும் சேலன்ச்சை நிறைவேற்றினார்.

தற்போது பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவினர் மரக்கன்றுகளை நட்டு ராம் சரண், இயக்குனர்கள் ராம்கோபால் வர்மா, வினாயக், பூரி ஜெகன் ஆகியோரை ‘நாமினேட்’ செய்தனர்.

இதற்கு விவசாயிகளை அவமதிக்கும் வகையில் சர்ச்சையாக பதிவிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.

“ராஜமவுலி சார், நான் பசுமைக்குள்ளும் போவதில்லை, சவால்களுக்குள்ளும் போவதில்லை. நான் சேற்றைத் தொடுவதை வெறுக்கிறேன்.

மரக்கன்றுகள் ஒரு சிறந்த மனிதனுக்குத்தான் தகுதியானவை, என்னைப் போன்ற சுயநலவாதிகளுக்குத் தகுதியானதல்ல. உங்களுக்கும், உங்கள் மரக்கன்றுகளுக்கும் வாழ்த்துகள்,” என தன் ட்விட்டரில் பதிவிட்டுளளார்.

சேற்றை கை கால்களை வைத்து தான் விவசாயம் செய்கின்றனர்.

அதில் விளையும் உணவுகளை தான நாம் உட்கொள்கிறோம்.

இப்படியிருக்கையில் சேற்றை தொடுவதை வெறுக்கிறேன் என ராம் கோபால் வர்மா பதிவிட்டு இருப்பது அனைவரையும் அசிங்கப்படுத்தியிருப்பது சரியா?

Sir @ssrajamouli I am neither into green nor into challenges and I hate touching mud ..The plants deserve a much better person and not a selfish B like me .. Wish u and ur plants all the best

https://twitter.com/RGVzoomin/status/1326437179871014912

My team and I took up the #GreenIndiaChallenge as nominated by @alwaysramcharan … I would like @rgvzoomin , Vinayak garu, @purijagan to take this forward…:)

Ram Gopal Varma rejects Rajamouli’s Green India Challenge

சுசீந்திரன் இயக்கத்தில் இசையமைப்பாளராகும் நடிகர் ஜெய்

சுசீந்திரன் இயக்கத்தில் இசையமைப்பாளராகும் நடிகர் ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jai suseenthiranபத்ரி படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்தவர் ஜெய்.

இதன்பின்னர் அவரே நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.

சென்னை 28, சென்னை 28 பார்ட் 2, ராஜா ராணி, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் ஜெய்க்கு வெற்றி படங்களாக அமைந்தன.

தற்போது தன் நடிப்பில் உருவாகவுள்ள தன் 30வது படத்தில் இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார்.

சுசீந்திரன் இயக்க இந்த படத்தை ‘லெண்டி ஸ்டூடியோ’ நிறுவனம் சார்பாக ஐஸ்வர்யா தயாரிக்கிறார்.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Jai turns music director for his next film

More Articles
Follows