களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்

களவாணி 2 எனக்கு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது – துரை சுதாகர்

New Project (1)தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கதாநாயகனாக நடித்த இவர், தற்போது விமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் வெளியான ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அரசியல்வாதி வேடத்தில் நடித்த துரை சுதாகரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரசிகர்களின் பாராட்டு மழையில் இருக்கும் துரை சுதாகரிடம் இதுகுறித்து கேட்ட போது, ‘களவாணி 2’ படத்தில் காமெடி கலந்த அரசியல்வாதி வேடத்தில் நடித்திருந்தேன். நடிக்கும்போதே இந்த கதாபாத்திரம் என்னை மெருகேற்றியது. இதற்கு காரணம் இயக்குனர் சற்குணம்.

பல படங்களில் கதாநாயகனுக்கே பெயர் கிடைக்கும். ஆனால், இந்த படத்தில் விமல், ஓவியாவுடன் சேர்த்து வில்லனாக நடித்த எனக்கும் பெயர் கிடைத்திருக்கிறது. இது எனக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரத்தை தேடிக்கொண்டிருந்த எனக்கு இப்படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது. மக்களின் ரசனைகளுக்கு ஏற்ப நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இப்போது மேலோங்கி இருக்கிறது. களவாணி 2 திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்ற பத்திரிகைகள், தொலைக்காட்சி, வலைத்தளங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி சொல்ல மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார்.

பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் தற்போது வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

STR 35; விஜய் ரசிகர்களை முந்தி மாஸ் காட்டிய சிம்பு ரசிகர்கள்

STR 35; விஜய் ரசிகர்களை முந்தி மாஸ் காட்டிய சிம்பு ரசிகர்கள்

Simbu fans celebrating STR completed 35 years in Cine Industryஎத்தனையோ குழந்தைகள் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினாலும் அதில் ஒரு சிலரே பெரிய நட்சத்திரங்களாக திகழ்கின்றனர்.

கமல், ஸ்ரீதேவி, விஜய், மீனா வரிசையில் நடிகர் சிம்புக்கும் ஒரு இடம் உண்டு.

சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான ‘உறவை காத்த கிளி’ படத்தில் அறிமுகமானார் சிம்பு.

தற்போது வெள்ளித்திரையில் அவர் கால்பதித்து 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தள்ளாகுளம் செல்லும் சாலை ஓரத்தில் 500 அடி நீள பிரம்மாண்ட போஸ்டரை அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.

தற்போது அந்த போட்டோவும் வீடியோவும் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பு விஜய் ரசிகர்கள் 440 அடியில் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

தற்போது அதை மிஞ்சும் வகையில் 500 அடியில் சிம்புவுக்கு போஸ்டர் ஒட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu fans celebrating STR completed 35 years in Cine Industry

சிம்பு

கார்த்தி-ஜோதிகா-சத்யராஜ் நடித்து வரும் பட தகவல்கள்

கார்த்தி-ஜோதிகா-சத்யராஜ் நடித்து வரும் பட தகவல்கள்

News updates about Karthi Jyothika combo movieகமல், கௌதமி இணைந்து நடித்த ‘பாபநாசம்’ படத்தை இயக்கியவர் ஜீத்து ஜோசப்.

இவர் தற்போது கார்த்தி, ஜோதிகா, நிகிலா விமல், சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் ஜோதிகாவின் தம்பியாக நடிக்கிறார் கார்த்தி.

96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.

அக்டோபர் மாதம் இப்படம் திரைக்கு வர உள்ளது.

News updates about Karthi Jyothika combo movie

15 ஆண்கள் முன்னிலையில் ‘ஆடை’யின்றி நடித்த அமலாபால்

15 ஆண்கள் முன்னிலையில் ‘ஆடை’யின்றி நடித்த அமலாபால்

Amala Paul reacts to doing a nude scene in Aadai movie‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:-

இயக்குநர் மித்ரன் பேசும்போது:-

நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளரை சந்தித்தாலே மகிழ்ச்சி. இப்போதெல்லாம் படம் வெளியானால் தான் மகிழ்ச்சி. இப்படத்தின் டீஸர், ட்ரெய்லரை பார்க்கும்போது நம் சமுதாயத்தில் நம் வீட்டுப் பெண்ணை மட்டும்தான் தெய்வமாக மதிப்பார்கள்.

அடுத்த வீட்டைப் பெண்களை வெறும் உடலாகத்தான் பார்க்கிறோம். ஒவ்வொரு பெண்ணும் வெளியே வந்து மிண்டும் வீட்டுக்குத் திரும்பும் வரை ஒரு பாதுகாப்பற்ற மனநிலையோடும், மனஅழுத்தத்தோடும் தான் இருக்கிறார்கள். ஆடையில்லாமல் ஒரு காட்சியில் கூட ஆபாசமாக இல்லாமல் எடுத்திருக்கிறார். அவர் சிறந்த ஒளிப்பதிவாளர் என்று எனக்குத் தெரியும். இப்படம் வெளியானதும் அனைவருக்கும் தெரியும் என்றார்.

இயக்குநர் ரவிக்குமார் பேசும்போது:-

நான் ஐந்து சந்திப்புக்களிலேயே இயக்குநருடனான சந்திப்பு நெருக்கமாக வந்துவிட்டது. ‘ஆடை’ சுதந்திரம் பெண்களுடைய ஆடையினால் தான் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். இன்னமும் துப்பட்டா அணிவதை வலியுறுத்தி வருகிறார்கள். ஆண்களுக்கு ஆடை கட்டுப்பாடு கிடையாது. பெண்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு அவர்களின் ஆடைகள் தான் காரணம் என்று இன்று இருக்கும் சமுதாயத்தின் கருத்தை மாற்றியமைக்கும் வகையில் இப்படம் இருக்கும் என்றார்.

இயக்குநர் லோகேஷ் பேசும்போது:-

ரத்னம் மிக வலிமையான எழுத்தாளர். அதை இப்படம் மூலம் ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார். ஆடை கருத்தாழமிக்க படமாக மட்டுமில்லாமல் அனைவரும் ரசிக்கும்படியான சினிமாவாகவும் இருக்கும் என்றார். அதற்காக அவர்களின் கடின உழைப்பு தெரிகிறது என்றார்.

இயக்குநர் ஸ்ரீகணேஷ் பேசும்போது:-

மேயாத மான் படத்தின் கதைக்கும், ஆடை படத்தின் கதைக்கும் முற்றிலும் வேறுபாடான கதை. இப்படத்தின் பெயரும், முதல் பார்வை போஸ்டரும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதுபோலவே படமும் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

இயக்குநர் நிதிலன் பேசும்போது:-

‘மேயாத மான்‘ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதல் படம் முடித்துவிட்டு அடுத்த படத்தின் அதன் சாயல் வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் ஒரு இயக்குநருக்கு இருக்கும். அந்த சாயல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் ரத்னகுமார். இப்படத்தைப் பார்த்த பிறகு பெண்களைப் பற்றியும் அவர்களின் ஆடை பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் அனைவருக்கும் தெளிவான புரிதல் வரும் என்றார்.

இசையமைப்பாளர் பிரதீப் பேசும்போது:-

என்னையும் என்னுடைய ‘பாண்ட்’ ஊறுகாயையும் இதில் முன்னிலைப்படுத்தியதற்கு ரத்னகுமாருக்கு நன்றி. இப்படத்தில் இசை சார்பாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் பேசும்போது:-

14 வருட கால நண்பர் ரத்னம். அவர் வலிமையான எழுத்தாளர் என்பது இப்படம் பார்த்தால் அனைவருக்கும் அது தெரியும் என்றார்.

ஆடை வடிவமைப்பாளர் கவிதா.ஜே.

டீஸர் பார்த்து பலரும் கேட்டார்கள் ஆடை பத்திற்கு எதற்காக ஆடை வடிவமைப்பாளர் என்று. ஆடை என்பது எந்தளவு முக்கியமென்று இல்லாதபோது தான் தெரியும். அதை இயக்குநர் மிக அழகாக கூறியிருக்கிறார் என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது:-

என்னுடைய குருநாதர் ரத்னகுமார். நான் இன்று நடிகனாக இருப்பதற்கு அவர் தான் காரணம். சில கறைகளைத் துடைப்பதற்கு கிழிந்த ஆடையை எடுப்போம். அதுபோல் சமுதாயத்தில் இருக்கும் கறையைத் துடைப்பதற்கு இந்த ‘ஆடை’யை எடுத்திருக்கிறோம். அனைவருக்கும் இப்படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். என்னுடன் நடித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகை ரம்யா பேசும்போது:-

இரண்டு மூன்று படங்களில் நடித்திருந்து நன்றாக நடிப்பு வரும் என்று சிறந்த கதாபாத்திரம் கொடுப்பார்கள். ஆனால் ஒரு தொகுப்பாளினியான என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரத்னகுமாருக்கு நன்றி.

‘மைனா’ படத்திலிருந்தே அமலாபாலுடன் எனக்கு நெருக்கமாக நட்பு இருந்தது. இடையில் சிறிது இடைவெளி இருந்தது. இப்படம் மூலம் மீண்டும் எங்கள் நட்பு தொடர்ந்தது. இப்படத்தில் எனக்கு ‘ஜெனி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

இம்மாதிரியான படத்தில் நடித்திருப்பதில் எனக்கு பெருமை. இந்தியாவிலேயே அமலா பால் மாதிரி தெரியமாக யாராவது இருப்பார்களா என்ற தெரியாது. மகளிரை கொண்டாடும் மாதமிது என்றார்.

அருண்பாண்டியன் பேசும்போது:-

பாதி படம் எடுத்து முடித்திருக்கும் நிலையில் என்னிடம் வந்தார்கள். இக்கதையையும், அமலா பாலின் கதாபாத்திரத்தைக் கேள்விபட்ட பிறகு இப்படம் இயல்பான படம் இல்லை என்று இப்படத்தை வெளியிட முடிவு செய்தேன். இப்படம் இந்தியா முழுவதும் பேசப்படும். தணிக்கைச் சான்றிதழுக்கு செல்லும் முன்பு நான் பார்க்க வேண்டும் என்று கூறினேன். தணிக்கைக் குழுவே இப்படத்தை பாராட்டியிருக்கிறது என்றார்.

இயக்குநர் ரத்னகுமார் பேசும்போது:-

இக்கதையை எழுதி முடித்ததும் எப்படி இயக்கப் போகிறேன் என்று இருந்த நிலையில், தயாரிப்பாளர் சுப்புவிடம் இக்கதையைக் கொடுத்துப் படிக்க கூறினேன். அவர் படித்துவிட்டு உடனே தயாரிக்க ஒப்பபுக் கொண்டார். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். அமலா பாலிடம் கதை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அமலா பாலுக்கு பிடித்திருந்தால் உயிரைக் கொடுத்து நடிப்பார். இப்படம் பெண்களின் அதிகாரத்தைப் பற்றி பேசும் படமாக இருக்காது.

‘மேயாத மான்‘ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பிரதீப் இசையைத் தொகுப்பதில் வல்லவர் என்று கூறினார். பொதுவாக இரண்டாவது படம் தான் இயக்குநருக்கு சவாலாக இருக்கும் என்று கூறுவார்கள்.

பார்த்திபன் எப்போதும் எல்லோரும் போகும் பாதையில் பயணிக்கமாட்டார். அவர் தான் எனக்கு உத்வேகமாக இருந்தார்.

இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் இது ஆபாச படமாக இருக்குமோ? என்று பல தலைப்பு போட்டு எழுதினார்கள். ஆனால் இப்படம் வெளியானதும் அனைவரின் பார்வையும் மாறும் என்று நம்புகிறேன் என்றார்.

தயாரிப்பாளர் சுப்பு பேசும்போது:-

இக்கதையைப் படித்ததும் அமலா பால் தான் சரியான தேர்வாக இருக்கும் என்று அவரின் மேலாளர் பிரதீப்பிடம் கூறினோம். 23 நாட்கள் சில சவாலான காட்சிகளில் நடிப்பதற்கு முதல் நாள் தயங்கினார். ஆனால், அடுத்த நாளிலிருந்து ஒரு கேள்வியும் கேட்காமல் நடித்து முடித்தார்.

அதேபோல் ஒரு படத்திற்கு வெற்றி என்பது அப்படத்தில் பணியாற்றும் குழுக்களின் ஒற்றுமை தான். அது இப்படத்தில் அமைந்திருக்கிறது என்றார்.

பார்த்திபன் பேசும்போது:-

ஆண்களைவிட பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள், தைரியமானவர்கள். பெண்களை மையப்படத்தி ஒரு படம் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு நல்ல படம் எடுப்பதற்கு 30 வருட காலமாக தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டே இருக்கிறேன் என்றார்.

நடிகை அமலா பால் பேசும்போது:-

இப்படம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை நீண்ட பயணம் அழகிய பயணமாக இருந்தது. கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படம் படம் அவள் தியரிகியாகவோ, பாதிக்கப்பட்ட பெண்ணாகவோ அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறான் என்ற கருத்தில் உடன்பாடில்லாமல் படம் நடிப்பதையே விட்டுவிட முடிவு செய்திருந்த தருணத்தில் ஆடை படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன்.

இருப்பினும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது ஒரு சிறு தயக்கம் இருந்தது. உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்றினால் தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம்.

ஒரு காட்சியில் நடிக்கும்போது நீங்கள் யாரோ போல நடிக்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று கூறினார்.

பல பேருக்கு தெரியாது ரத்னகுமாருக்கு ‘ஆடை’ படம் தான் முதல் படம் என்று. அவர் பன்முக திறமை வாய்ந்தவர்.

ரம்யா இனிமேல் தொகுப்பாளினி இல்லை. சினிமாத் துறைக்கு மற்றுமொரு நடிகை கிடைத்துவிட்டார். விவேக் படத்திலும் நிஜத்திலும் எனக்கு சகோதரர் மாதிரி தான்.

‘ஊறுகாய்‘ குழுவினரின் பணி சிறப்பாக இருந்தது. முதல் நாள் படப்பிடிப்பில் நான் நினைத்தேன், எனக்கு பாதுகாப்பு இருக்குமா என்று. ஏனென்றால், ஒளிப்பதிவாளர்களையும் சேர்த்து 15 பேர் இருந்தார்கள். ஆனால் அனைவரும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்கள் என்றார்.

இறுதியாக, ‘ஆடை’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது.

Amala Paul reacts to doing a nude scene in Aadai movie

குறட்டைக்கு மருந்து..; ஹேர் கலர் ஷாம்பூ கின்னஸ் சாதனை.. அசத்தும் RK

குறட்டைக்கு மருந்து..; ஹேர் கலர் ஷாம்பூ கின்னஸ் சாதனை.. அசத்தும் RK

 Actor RK going to make Guinness world Record with Hair Color Shampoo எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.

அந்தவகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தினார் ஆர்கே..

‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் விதமாக கின்னஸ் சாதனை நிகழ்த்துதற்கும் தயாராகி விட்டார் ஆர்கே.. அது குறித்த விபரங்களை இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விபரமாக பகிர்ந்துகொண்டார் ஆர்கே.

“தரமான தயாரிப்பாக இருந்தாலும் ‘மேட் இன் இந்தியா’ என்று சொன்னால் அதுவும் தமிழ்நாட்டுக்காரன் தயாரிப்பு என்று சொன்னால் அதை சற்றே மட்டமாக பார்க்கும் மனோபாவமே பல வெளிநாடுகளில் இருக்கிறது..

பலரும் உங்களுடைய தொழிற்சாலையை, சிங்கப்பூர், துபாய் போன்ற ஏதோ ஒரு நாட்டில் துவங்கினால் பிசினஸ் பெரிய அளவில் நடக்குமே என கூறினார்கள்..

ஆனால் நான் ஆரம்பத்திலிருந்தே அனைத்திற்கும் போராடியே பழக்கப்பட்டவன் என்பதால் அவர்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை மாற்றவேண்டும் என முடிவெடுத்தேன்.

உலகத்தில் தங்கல் தலைமுடிக்கு டை அடிக்கும் யாராவது வெறும் கையால் ஹேர் டையை தொட முடியுமா என்று கேட்டு, அதை வைத்தே கின்னஸ் சாதனை செய்து எங்களுடைய விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை உலக அளவில் நிரூபிக்க முடிவு செய்தேன்.

சரியாக 1005 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அவர்களை பயன்படுத்த செய்வது, அதன்மூலம் இதன் தரத்தை உறுதி செய்வது என்பதுதான் இந்த சாதனையின் நோக்கம்.

இதற்கான நடைமுறைகள் அனைத்தையும் முடித்துவிட்டோம்.. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பூந்தமல்லி அருகில் உள்ள EVP பிலிம் சிட்டியில் இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை வெறும் கையால் தொட்டு பயன்படுத்திவரும் 1005 பயன்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர்.. அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துசெல்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கலந்துகொண்ட 1௦௦5 பேருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்..

இந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு பயன்பாட்டாளராக பங்கேற்க இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை மேற்பார்வை செய்ய இருக்கும் ஆறு நடுவர்களில் இரண்டு பேர் லண்டனில் இருந்து வருகின்றனர்.. மீதி நான்கு நடுவர்களும் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பிரபலங்கள்..

தற்போது தமிழ்நாட்டில் நிலவு தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக இந்த கின்னஸ் சாதனையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆணுக்கும் வெறும் நான்கு லிட்டர் தண்ணீர் என்கிற குறைந்த அளவே பயன்படுத்த இருக்கிறோம்.

இந்த சாதனைக்காக விண்ணப்பிக்கும்போது இத்தனை நபர்களை வைத்து உங்களால் சமாளிக்க முடியுமா..? இங்கே லண்டனில் இருந்து நடுவர்கள் வேறு வருவார்கள்.. சரியாக செய்யமுடியுமா என கேள்வி மேல் கேள்விகளாக கேட்டார்கள்.. ஒரு தயாரிப்பாளராக இத்தனை படங்கள் தயாரித்திருக்கிறேன் என்கிற ஒரே ஒரு விபரத்தை மட்டும் நான் சொன்னேன்.. அதன்பின் வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒப்புக்கொண்டார்கள்..

அவர்களை ஒப்புக் கொள்ளச்செய்தது ஆர்கே என்கிற பிசினஸ் மேன் அல்ல.. ஆர்கே என்கிற சினிமாக்காரன்.. எல்லாம் அவன் செயல் என்கிற படம் மூலம் எனக்கு கிடைத்த சினிமாக்காரன் என்கிற அந்தஸ்து தான் இந்த சாதனைக்கு என்னை தயார்படுத்தியது.. போட்டி நடத்துபவர்களையும் ஒப்புக்கொள்ள வைத்தது. சினிமா மூலம் நான் சம்பாதித்தது இதைத்தான்.

1991ல் காசு தங்க காசு என்கிற படம் மூலம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் நுழைந்தேன். ஆனால் என் வீட்டையே அடமானம் வைத்து தான் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது.

அப்போதுதான் சினிமா எடுப்பதற்கு ஒரு வலுவான பொருளாதார பின்னணி இருக்க வேண்டும், வந்தால் நூறு கோடியுடன் படம் எடுக்க வரவேண்டும், அதற்கு மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கவேண்டும் என்று நினைத்து தொழிலில் இறங்கி சாதித்து அதன் பின்பு எனது வீட்டை மீட்டு, மீண்டும் சினிமாவிற்குள் மிகவும் அழுத்தமாக அடி எடுத்து வைத்தேன்.

திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டு இருக்கிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. சினிமா ஒரு சூதாட்டம் போன்று ஆகிவிட்டது.. இதனை தெளிவாக தெரிந்துகொண்டு நான் மீண்டு(ம்) வந்ததால்தான் இதுவரை வெளியான எனது படங்கள் எதுவுமே எந்த ஒரு கடன் பிரச்சனையையும் கடைசிநேர ரிலீஸ் பிரச்சினைகளையும் சந்தித்ததில்லை. அதற்கு எனக்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது என்னுடைய பிசினஸ்.

லைக்கா நிறுவனம் பல கோடி முதலீட்டில் படம் எடுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.. எங்கிருந்து வருகிறது இந்த பணம்..? இதுபோன்ற பிசினஸ் மூலமாகத்தான்.. அங்கே சம்பாதித்து இங்கே கொண்டுவந்து செலவு செய்கிறோம்..

சினிமாவில் சம்பாதித்து பிசினஸ் செய்ய முடியாது.. பிசினஸில் சம்பாதித்துதான் சினிமாவில் முதலீடு செய்கிறோம் என்பது இதிலிருந்தே நன்றாக தெரியும்.. இந்த வருடத்தில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன்

இதேபோல இதுவரை உலகம் முழுவதும் தீர்க்கப்படாமலேயே உள்ள முக்கிய பிரச்சனை அல்லது நோய் என்று சொன்னால் அது குறட்டை விடுவதுதான்.. குறட்டை விடுபவர்களும் அதனால் பாதிப்புக்கு ஆளானவர்களும் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான சங்கடங்களை சந்திக்கின்றனர்.

உலகத்திலேயே இதற்கும் முதன்முதலாக விஐபி ஸ்மோக் ஹேர் ஆயில் என்கிற ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளேன்.. சுமார் 2000 பேரிடம் இதை பயன்படுத்த சொல்லி இதன் வெற்றிகரமான செயல்பாட்டை உறுதி செய்துள்ளேன்.

கூடிய விரைவில் உங்கள் ஆதரவுடன் இந்த தயாரிப்பையும் பொது மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறேன்” என்றார் ஆர்.கே.

Actor RK going to make Guinness world Record with Hair Color Shampoo

பாராட்டு மழையில் நனையும் ஓவியா அப்பா ராஜ்மோகன்குமார்

பாராட்டு மழையில் நனையும் ஓவியா அப்பா ராஜ்மோகன்குமார்

Tamilnadu peoples praises Kalavani2 Villain actor RajMohankumar2010 ஆம் ஆண்டில் விமல், ஓவியாவின் யதார்த்த நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் தான் ‘களவாணி’.

இப்படத்தினை சற்குணம் இயக்கியிருந்தார். மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

மீண்டும் அதே எதிர்பார்ப்பில் விமல்,ஓவியா நடிப்பில் உருவாகியுள்ளது ‘களவாணி 2’.இப்படத்தையும் சற்குணமே இயக்கியிருக்கிறார்.

நேற்று வெள்ளி அன்று வெளியான இப்படம், நல்லதொரு வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது…

இப்படத்தில், ஓவியாவின் தந்தையாக நடித்திருப்பவர் ராஜ்மோகன்குமார்.

செல்லத்துரை என்ற கதாபாத்திரத்தில், பஞ்சாயத்து தலைவராக நடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.

கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்து, அனைவரின் பாராட்டினையும் பெற்றிருக்கிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு கதாபாத்திர நடிகர் கிடைத்துவிட்டார்.

Tamilnadu peoples praises Kalavani2 Villain actor RajMohankumar

More Articles
Follows