சினிமாவில் அறிமுகமாகிறார் ஜார்ஜ் மகன்; துரை சுதாகருடன் கூட்டணி

சினிமாவில் அறிமுகமாகிறார் ஜார்ஜ் மகன்; துரை சுதாகருடன் கூட்டணி

George Maryan son Britto debut with Durai Sudhakarசைவம், கைதி, தடம், பிகில் உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஜார்ஜ் மரியான்.

சின்ன வேடம் தான் என்றாலும் அதில் தன் நடிப்பை முத்திரையை நிச்சயம் பதிவு செய்துவிடுவார் இவர்.

இவரை தொடர்ந்து தற்போது இவரது மகன் பிரிட்டோ எனபவரும் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

தூங்கா கண்கள் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார்.

இந்த படம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் கிட்டதட்ட 60 வருடங்களுக்கு முன் நடந்த கதையாம் இது.

த.வினு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் அவரது தந்தை ஜார்ஜ், களவாணி துரை சுதாகர், நிக்கேஷ், கந்தசாமி, காஞ்சனா ரமேஷ், டாக்டர் பிரபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அப்ஷரா, ரேஷ்மா ஆகியோர் ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள்.

இமயவன் ஒளிப்பதிவு செய்ய இளங்கோ கலைவாணன் இசையமைத்துள்ளார்.

George Maryan son Britto debut with Durai Sudhakar

சினிமாவில் நடிக்கிறாரா நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா..?

சினிமாவில் நடிக்கிறாரா நடிகர் ஜெயராம் மகள் மாளவிகா..?

malavika jayaramபிரபல நடிகர் ஜெயராம் அவர்கள் நடிகை பார்வதியை திருமணம் செய்துக கொண்டார்.

தன் பெற்றோரை போலவே இவர்களின மகன் காளிதாஸும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜெயராமின் மகள் மாளவிகாவும் நாயகியாக நடிக்க வந்துள்ளதாக தகவல்கள் வந்தன.

அண்மையில் தன் தந்தை ஜெயராமுடன் இணைந்து ஒரு விளம்பர படத்திலும் மாளவிகா நடித்திருந்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது..

“எனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான முதுகலை படிப்பை வெளிநாட்டில் படித்து வருகிறேன்.

அதில் தான் எனது கவனத்தை செலுத்த போகிறேன்” என கூறியுள்ளார் மாளவிகா ஜெயராம்.

உணவு; மளிகைபொருட்கள்; கொரானா உபகரணங்கள் கொடுக்கும் ஷாரூக்கான்

உணவு; மளிகைபொருட்கள்; கொரானா உபகரணங்கள் கொடுக்கும் ஷாரூக்கான்

actor shah rukh khanகொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதன் தடுப்பு பணிகளுக்காக கோடிக்கணக்கான தொகையை மத்திய மாநில அரசுகள் செலவிட்டு வருகின்றன.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவரின் நிவாரண நிதி மற்றும் உதவி குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும்.

நானும், எனது மனைவி கவுரிகான் உரிமையாளர்களாக இருக்கும் ரெட் சில்லிஸ் நிறுவனம் சார்பில் மராட்டிய மாநில முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கப்படும்.

மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய மாநிலத்துக்கு 50 ஆயிரம் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.

மும்பையில் உள்ள 5 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.

2 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வீட்டு வேலை செய்பவர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்படும்.

மேலும் மும்பையில் உள்ள ஏழைகளுக்கு உணவு வழங்கப்படும்.

இவ்வாறு ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

நாங்க அப்பவே விளக்கு வச்சுட்டோம்.; மோடியை கலாய்க்கிறாரா கஸ்தூரி.?

நாங்க அப்பவே விளக்கு வச்சுட்டோம்.; மோடியை கலாய்க்கிறாரா கஸ்தூரி.?

actress kasthuriநாளை ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்றி நமது தேசத்தின் ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும் என மோடி தெரிவித்திருந்தார்.

அதாவது நம் வாழ்வில் கொரோனா ஏற்றியுள்ள இருளை அகற்றுவோம் என அவர் நேற்று வீடியோவில் கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசியிருந்தார்.

பிரதமரின் இந்த கருத்துக்கு பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று நடிகர் கமல் கூறியிருந்த கருத்தை ப்ரேக்கிங் செய்தியாக பதிவிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரியும் தன் கருத்தை பதிவிட்டு இருந்தார்.

விளக்கு வைப்போம் இந்த கருத்தை நாங்கள் எப்போதோ கூறி விட்டோம் என்று கூறி கஸ்தூரி நடித்த ’ஆத்மா’ படத்தில் இடம்பெற்ற ’விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்’ என்ற பாடலின் யூடியூப் லிங்க்கை பதிவு செய்துள்ளார்.

இது மோடியை கலாய்க்கிறாரா அல்லது அப்பவே வச்சிட்டோம் இனிமே வைக்க மாட்டோம் என்கிறாரா? என்பதுதான் தெரியவில்லை.

நீச்சலில் ஜெயித்து விஜய்க்காக வைத்திருந்த தொகையை கொரோனா நிதியாக கொடுத்த சிறுவன்

நீச்சலில் ஜெயித்து விஜய்க்காக வைத்திருந்த தொகையை கொரோனா நிதியாக கொடுத்த சிறுவன்

8th Std studying Vijay fan donates for CM Corona relief fund திருப்பூர் அவினாசி நகரைச் சேர்ந்த தம்பதியர் ரவிக்குமார் – ஜோதிமணி,

இவர்களுடைய மகன் உபநிசாந்த் என்பவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நீச்சல் போட்டியில் அதிக ஆர்வம் கொண்ட இந்த சிறுவன் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்திருக்கறிர்.

அதில் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல் பரிசையும் பெற்றிருக்கிறான்.

தற்போது அவன் பெற்ற தொகை 3,000 ரூபாயை, கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்குக் கொடுத்துள்ளான்.

இது குறித்து அவனது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

நடிகர் விஜய்யோட தீவிர ரசிகன் உபநிசாந்த்.

எப்படியாவது விஜய்யைப் பார்க்கணும்ப்பா’ன்னு என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பான்.

ஏதாச்சும் சாதனை செய் உன்ன கூட்டிட்டுப் போறேன்னு சொன்னேன்.

அவரைப் பார்க்கப் போக காசு வேணும்ல என சொல்லிட்டு நீச்சல் போட்டியில கிடைச்ச பணத்தை பத்திரமா வச்சிருந்தான்.

அந்த பணத்தை தான் தற்போது முதலமைச்சர் நிதியாக கொடுத்திருக்கிறான் என்றார் அவனது தந்தை.

8th Std studying Vijay fan donates for CM Corona relief fund

20 லட்சம் கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.; யாருக்கு தெரியுமா?

20 லட்சம் கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.; யாருக்கு தெரியுமா?

Actress Nayanthara donates Rs 20 lakhs to Fefsiகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 3000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளியே செல்ல முடியாத சூழ்நிலையால் ஒட்டு மொத்த மக்களின் வாழ்வதாரம் முடங்கியுள்ளது.

வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.

சினிமா சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஃபெஃப்சி தொழிலாளர்களின் நலனுக்காக நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் ஆர்கே. செல்வமணியின் வேண்டுகோளை ஏற்று நடிகை நயன்தாரா நிதியுதவி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Nayanthara donates Rs 20 lakhs to Fefsi

More Articles
Follows