பாலிடிக்ஸிலும் சூப்பர் ஸ்டாராக வருவார் ரஜினி…- துரை சுதாகர் வாழ்த்து

பாலிடிக்ஸிலும் சூப்பர் ஸ்டாராக வருவார் ரஜினி…- துரை சுதாகர் வாழ்த்து

Public Sudhakar wishes Rajinikanth and his political entryசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 12ஆம் தேதி தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு இந்தியாவே வாழ்த்து கூறியது என்னுமளவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்த நிலையில் ‘களவாணி 2’ படத்தில் வில்லனாக நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் அவர்களும் ரஜினிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

அதில்… “இந்திய சினிமாவையும் தாண்டி உலக சினிமா ரசிகர்களையும் ஈர்த்து வைத்திருக்கும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்திய ரஜினிகாந்த், அரசியல் உலகிலும் பல சாதனைகளோடு, சூப்பர் ஸ்டாராக வலம் வர வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

தற்போது வரலட்சுமி நடித்து வரும் ‘டேனி’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார் துரை சுதாகர்.

Public Star Durai Sudhakar wishes Rajini and his political entry

ஏமாலி முதல் கேப்மாரி வரை..; ஆபத்தான ரூட்டில் ‘ஹாட்’ அதுல்யா

ஏமாலி முதல் கேப்மாரி வரை..; ஆபத்தான ரூட்டில் ‘ஹாட்’ அதுல்யா

Capmaari Athulya travels on danger route of Cinemaகோவை பெண் என அடிக்கடி சொல்லிக் கொள்பவர் நடிகை அதுல்யா.

குறும்படங்களில் நடித்து வந்த இவர் காதல் கண் கட்டுதே என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அட்டா.. கொள்ளை அழகே இருக்காளே இந்த பெண் என இளைஞர்களை இவரை கொண்டாடினார். அழகான கண்களும் புருவமும் இவருக்கு ப்ளஸ் பாய்ண்டாக அமைந்தது.

இதனையடுத்து ஒரு சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார்.

சமுத்திரக்கனியின் ஆஸ்தான நாயகியானது போல் அவரது படங்களில் தவறாமல் இடம் பிடித்து வருகிறார். நாடோடிகள் 2 மற்றும் அடுத்த சாட்டை படங்களில் நடித்துள்ளார் அதுல்யா.

கதை இல்லாமல் கூட சமுத்திரக்கனி படம் நடிப்பார் போல ஆனால் அதுல்யா இல்லாமல் அவரின் படம் இருக்காது என்னுமளவுக்கு ஏமாலி படத்திலும் அதுல்யா நடித்திருந்தார்.

அதில் சிகரெட் அடித்து அவரை சூடேற்றி ஆபாச காட்சிகளில் நடித்து இளைஞர்களை சூடேற்றினார். இதனால் ஹோம்லி இமேஜ்ஜில் இருந்த அதுல்யாவுக்கு இது ஆபத்தானது.

அண்மையில் வெளியான கேப்மாரி படம் அதுல்யாவின் இமேஜ்ஜை டோட்டலாக டேமேஜ் செய்துள்ளது.

இப்படி ஆபத்தான ரூட்டில் அதுல்யா பயணிப்பதால் விரைவில் கவர்ச்சி முத்திரை அவர் மீது குத்தப்பட வாய்ப்புள்ளது எனலாம். சுதாரித்துக் கொள்வாரா? அதுல்யா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Capmaari Athulya travels on danger route of Cinema

தலைவர் பிறந்தநாள்; தமிழக தியேட்டர்களில் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து!

தலைவர் பிறந்தநாள்; தமிழக தியேட்டர்களில் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து!

Rajini birthday specialஇன்று 12/12/2019 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அவர் சென்னையில் இல்லை என்றாலும் அவர் வீட்டு முன்பு ரசிகர்கள் திரளாக கூடி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

லதா ரஜினி ரசிகர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிலையில் சென்னையில் பல தியேட்டர்களில் பாட்ஷா உள்ளிட்ட பல படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

மேலும் மதுரை, திருச்சி, திருநெல்வேலி என பல ஊர்களிலும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.

தலைவர் ரஜினி பிறந்தநாள் அன்று அவரின் படத்தை பார்ப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்

கார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்

Thambi stillsஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். சரி அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் ‘தம்பி’ படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். எல்லோரும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற மாட்டார்கள். ஆனால், ஜீத்து ஜோசப் தமிழில் ஒரு படம் இயக்குகிறேன் கார்த்தியின் ஜோடியாக ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. ஆனால் கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும் தான் முக்கியத்துவம் இருக்கும். நீ நடிக்கிறாயா? என்றார். அவர் நேர்மையாக கூறியதும் நான் ஒப்புக் கொண்டேன். மேலும், தொழில்நுட்பம் மற்றும் பெரிய நடிகர்கள் இருப்பதால், ஒரு நல்ல படத்தில் நாமும் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நடிக்க ஒப்புக்கொண்டேன்.

நான் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைக்க, ஜீது ஜோசப் இயக்குகிறார். அதைப்பற்றி கதாபாத்திரமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு ஏற்ப முக்கியத்துவமும், தொடர்பும் கொடுக்கப்பட்டிருக்கும். என்னுடைய கதாபாத்திரமும் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து செல்வது என்றில்லாமல், ஒரு புள்ளியில் கதையோடு தொடர்பு இருக்கும். நடிப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க தான் எனக்கும் விருப்பம். ஐந்து வருடங்கள் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்துவிட்டு, நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள விருப்பமில்லை. காத்திருந்தாலும் நல்ல படம், நல்ல குழுவுடன் இணைந்து நடிப்பதே விருப்பம். என் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அதில் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தால் மட்டுமே நடிப்பேன். அது வரை காத்திருப்பேன்.

‘கிடாரி’க்குப் பிறகு மலையாளத்தில் வாய்ப்பு வந்தது அதில் நான் நடித்த படம் வெற்றி பெற்றவுடன் தொடர்ந்து அதிக படங்கள் அங்கேயே நடிக்கும் படியான சந்தர்ப்பம் அமைந்தது. மேலும், சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. ‘தம்பி’ படம் மூலம் தமிழில் இது மறு பிரவேசம் என்று கூட சொல்லலாம்.

எனக்கு தமிழ் தெரிந்ததால் இப்படத்தில் நடித்தது எளிதாக இருந்தது. சிறந்த இயக்குனரிடம் பணியாற்ற வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தில் நடித்தேன்.

சில நடிகர்களுக்கு ஒரே பணியான படங்கள் மற்றும் அவர்களுக்கென்று ஒரு தனி அடையாளம் வந்து விடும். ஆனால், கார்த்தி எந்தவிதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சரியாக நடிக்கக் கூடிய திறமை வாய்ந்தவர். தனக்கு என்று ஒரு தனி பாணியை வைத்துக்கொள்ளாமல் கமர்சியல் படமாக இருந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருந்தாலும், இல்லை இரண்டும் கலந்து இருந்தாலும் அவர் திறமையான நடித்து வெளிப்படுத்துவார். இதுபோன்ற நடிகருடன் நினைப்பதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். அதேபோல் தன்னுடைய பகுதி மட்டும் முடிந்தால் போதும் என்று நினைக்கக்கூடிய கலைஞர் கிடையாது. தன்னுடன் நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற எண்ணக்கூடிய மனிதர் தான் கார்த்தி. அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் வரும்போது, படப்பிடிப்பு தளத்தில் அலங்காரம் செய்துக் கொண்டிருப்பார். அப்போது நான் உங்களைப் பார்த்துக் கொண்டு வசனம் பேசி ஒத்திகைப் பார்த்துக் கொள்ளட்டுமா? என்று கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். இது போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை.

எல்லோரையும் போல் சூர்யா ஜோதிகா நானும் திரையில் கண்டிருக்கிறேன். இப்படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்தார். பேச்சிலும் மிக மென்மையானவர். ஜோதிகாவும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பார். இது அவர்களின் குடும்ப வழக்கமாகவே இருக்குறது.

ஊட்டி, பாலக்காடு, கோயம்பத்தூர், கோவா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. கோவாவில் கார்த்தியின் பகுதி மட்டும் நடந்தது. சரியான திட்டமிடுதல் இருந்ததால், அட்டவணைப்படி 65 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம். தமிழ் படத்தில் நடித்த அனுபவத்தில் இப்படம் விரைவாகவே முடிவடைந்திருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் நன்றாக அரட்டை அடிப்போம். ஒருத்தருக்கொருத்தர் கலாய்த்துக் கொள்வோம். இதற்கிடையில், சத்யராஜ் குடும்பத்தார்கள் வந்தார்கள், கோயம்பத்தூரில் இருந்து சிவகுமாரின் உறவினர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தாருடனும் பேசுவோம். சூர்யாவும் ஒரு நாள் வந்தார். அவரிடமும் பேசினேன்.

என்னுடைய தோழி அபர்ணா ‘சூரரைப் போற்று’ படத்தில் நடிக்கிறார். அதை நினைத்து இருவரும் உற்சாகமானோம். சிறந்த நடிகருடன் நடிக்கும்போது இதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கும். தங்களுடைய கதாப்பாத்திரத்திற்காக எப்படி மாறுகிறார்கள் என்பதை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆகையால், சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.

பொதுவாக படப்பிடிப்பின் துவக்கத்தில் சில நாட்களுக்கு சிறு சிறு காட்சிகள் தான் கொடுப்பார்கள். ஏனென்றால், அப்போதுதான் அனைவரிடமும் நமக்கு இயல்பான நிலை வரும். ஆனால், இந்த படத்தில் எனக்கு முதல் நாள் படப்பிடிப்பே டூயட் பாடல் தான். அதுவும் உதட்டோடு பதிக்கும் முத்தக் காட்சி என்றதும் சிறிது பதட்டமாக இருந்தது. கார்த்தியைப் பார்த்ததும் இவரைப் பார்த்து நடிக்க வேண்டுமே என்ற பயம் வேறு. ஆனால், கார்த்தி என்னை சமாதானப்படுத்தி இலகுவாக இருக்கும்படி கூறினார். முதலில், பாடலைக் கேட்கும் போது பதட்டமாக இருக்கும். இப்போது நன்றாக இருக்கிறது என்று தோன்றுகிறது. இதுதவிர, விருந்து பாடலும், கோவாவில் கார்த்திக்கு ஒரு பாடலும் இருக்கிறது.

நான் கோவிந்த் வசந்தாவின் பேண்ட் வாத்தியத்தின் விசிறி. சமீபத்தில், கேரளாவில் அவருடைய இசை ஆல்பம் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. அவருடைய ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ’96’ மற்றும் ‘அசுரவதம்’ படத்தில் அவருடைய பின்னணி இசை பிடிக்கும்.

இப்படம் இரண்டு குடும்ப உறவுகள் கலந்த திரில்லர் படமாக இருக்கும். ஒவ்வொரு காட்சிக்கும் தொடர்பு இருப்பதால் இப்படத்தின் கதையை பற்றி விளக்க முடியாது. படம் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்க டிசம்பர் 20-ம் தேதி வரை நாங்களும் ஆர்வமாக காத்து கொண்டிருக்கிறோம். மேலும், ‘கிடாரி’ படத்தில் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று இன்னமும் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், இந்த படத்திற்கும் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இந்த படத்திற்குப் பிறகு தொடர் தமிழ் படங்கள் இல்லாததால், மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.

இவ்வாறு நடிகை நிகிலா விமல் ‘தம்பி’ படத்தில் நடித்த அனுபங்களைப் பற்றி கூறினார்.

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது சாதாரண ரசிகன் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர் அப்படி ஒரு தீவிர ரஜினி ரசிகர் தான் பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆன S.P.சௌத்ரி இவர் தற்போது நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் டகால்டி என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு,

*ஏறுபவனுக்கு இமயமலை*

*எதிர்ப்பவனுக்கு எரிமலை*

*இந்த அண்ணாமலை*

என்கிற செம பஞ்ச் வசனத்துடன் தனது மனம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்றைய அரசியல் சூழலில், தலைவரை எதிர்க்கும் அரசியல் வாதிகளுக்கு பதிலடி, தலைவர் பாணியில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..

Rajinikanth

பூஜையுடன் தொடங்கிய சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் “பேப்பர் பாய்”

பூஜையுடன் தொடங்கிய சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் “பேப்பர் பாய்”

paper boy stillsசுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் “பேப்பர் பாய்” படத்தின் படப்பிடிப்பு இன்று
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கேரளா ஹவுசில் பூஜையுடன் தொடங்கியது.
இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி
வைத்தார்.

சுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக PSJ பழனிராஜன் தயாரிக்கும் படம் “பேப்பர்
பாய்”. இணை தயாரிப்பு G.C.ராதா

இப்படத்தை, இயக்குனர் விஜய் மில்டனிடம் கடுகு, கோலிசோடா 2 போன்ற
படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய “ஸ்ரீதர் கோவிந்தராஜ்”
இயக்குகிறார். இப்படத்திற்கு கோலி சோடா , சண்டி வீரன் போன்ற படங்களுக்கு
இசையமைத்த அருணகிரி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஜெகதீஷ் V விஸ்வா ,
படத்தொகுப்பு எல்.வி.கே தாஸ், நடனம்- சாண்டி மாஸ்டர்

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில்….

இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற “பேப்பர் பாய்” படத்தின்
ரீமேக் ஆகும். தமிழுக்கு தகுந்தார்போல் அதில் சிறு சிறு மாற்றங்களை
உருவாக்கி உள்ளோம்.

அன்றாடம் பேப்பர் போட்டு வாழ்க்கை நடத்தும் இளைஞனுக்கும் கோடீஸ்வர
நாயகிக்கும் உருவாகும் காதல், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும்
மாற்றங்கள் தான் இப்படத்தின் கதை.

இது முழுவதுமாக எதார்த்தங்கள் நிறைந்த கதையாக இருக்கும். காதல் காட்சிகள்
நிறைந்த படம் என்பதால் இதில் இசைக்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்துள்ளோம். தமிழில் காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை இவ்வரிசையில்
ஒரு எதார்த்த காதல் கதையை நீங்கள் 2020 இல் காணலாம்.

இதில் நாயகனாக சுவாதிஷ் ராஜா, நாயகியாக யாமினி பாஸ்கர், முக்கிய
கதாபத்திரத்தில் வடிவுக்கரசி, தலைவாசல் விஜய், சுஜாதா, கடலோரக் கவிதைகள்
ரேகா, ராட்சசன் பட வில்லன் சரவணன், எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன்,
தாரை தப்பட்டை அக்ஷயா, பாலா, அமுதவாணன் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும்
பல முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது. சென்னை கேரளா மற்றும்
கர்நாடகாவில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

More Articles
Follows