திமுக தலைவரான சின்னக் கலைஞர் ஸ்டாலின்; பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து

திமுக தலைவரான சின்னக் கலைஞர் ஸ்டாலின்; பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Public Star Durai Sudhakar wishes DMK Leader MK Stalinதிமுக-வின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

நாம் வாழும் இந்த மாநிலத்திற்கே ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டிய பெருமை திமுக என்ற கட்சிக்குத்தான் உண்டு. அத்துடன் நம் தாய்மொழியை பின்னுக்கு தள்ள வந்த இந்தியை ஓட ஓட விரட்டிய வீரமும் திமுகவிடம்தான் இருந்தது.

மேலும் கைம்பெண் மறுமணம் தொடங்கி சுய மரியாதையும், சீர்திருத்தமும் கொண்ட சிந்தனையும், செயல்களும் திமுகவிடம்தான் இருந்தது. இது மட்டுமின்றி எத்தனையோ புரட்சிகளும், சாதனைகளும் படைத்த திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தமிழர்களின் கலங்கரை விளக்கின் தலைமை பொறுப்புக்கு வரும் ”சின்னக் கலைஞர்” தளபதி மு.க. ஸ்டாலினுக்கு இந்த எளியோன் பப்ளிக் ஸ்டார் துரை.

சுதாகர் தன் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக இருந்த கலைஞரின் மகன் என்பதால் இந்த உயர்ந்த பொறுப்பு அவருக்கு கிடைத்திடவில்லை.

தற்போது உள்ளங்கையில் வந்து விட்ட இணைய உலகில் சஞ்சரிக்கும் இளைய தலைமுறையினர் பலருக்கு இந்த சின்ன கலைஞர் கடந்து வந்த போராட்டங்கள், நெருப்பாறு, பிரச்னைகள் பலவும் தெரியாது என்பதால் அவற்றை இச்சுழலில் நினைவுப்படுத்தி பெருமைப்பட ஆசை கொள்கிறேன்.

1953ம் ஆண்டு கருணாநிதி-தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஸ்டாலின்.3வது மகனாக பிறந்த இவருக்கு ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவாகவே கலைஞர் கருணாநிதி ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார். தலைவர் மு.க.ஸ்டாலினின் போராட்ட வாழ்க்கை பள்ளிப் பருவத்திலிருந்தே தொடங்கி விட்டது.

சென்னை அண்ணா சாலையிலுள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் அவரைச் சேர்க்க விரும்பியபோது, பள்ளி அதிகாரிகள் புரட்சியாளரின் பெயரைக் கண்டு நடுக்கமுற்று அப்பள்ளியில் பையனைச் சேர்க்க வேண்டுமெனில் அவனுடைய பெயரை மாற்ற வேண்டுமென்று வலியுறுத்தினர்.

இந்த நிபந்தனையைக் கேள்விப்பட்ட கலைஞர் அவரகள்,ஹூம்.. இனி பள்ளியைத் தான் மாற்ற வேண்டுமே தவிர ஸ்டாலினின் பெயரை மாற்றவே முடியாது என்று கூறி சென்று விட்டார். இதையடுத்து சேத்துப்பட்டிலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரி பள்ளியில் சேர்ந்தார்.

தந்தை கலைஞரின் அரசியல் பணிகள் காரணமாக இளம் வயதிலேயே ஸ்டாலினுக்கும் அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

1967-1968ம் ஆண்டுகள் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தினார்.

கோபாலபுரம் இளைஞர் திமுக அமைப்பின் மூலமாக அந்த பகுதியில் இருக்கக் கூடிய மக்களுக்கு பொதுக் காரியங்களை ஆற்றினார்கள்.

இதை படிப்படியாக இளைஞரணி என்ற பெயரிலான அமைப்பாக வளர்த்து அதை அமைப்புரீதியாகவும் 1980ம் ஆண்டு இளைஞரணி மதுரையிலே ஜான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டு அதற்குப்பிறகு 1980ம் ஆண்டு திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது.

அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது. மு.க.ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

1975ம் ஆண்டு மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு பயங்கர அடி உதை விழுந்து இப்போதும் தழும்புகள் உள்ளது.

சென்னை அண்ணா சாலையில் 28.1.1964ல் திமுகவுக்கென ஒரு இடம் வாங்கப்பட்டது. 15.6.1964 அன்று அது திமுக தலைமையகமாக அன்பகம் என்ற பெயரில் திறக்கப்பட்டது.

நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் அண்ணா அதனை திறந்து வைத்தார். தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அறிவாலயத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், இளைஞர் அணியின் அலுவலகம் செயல்பட ஒரு இடம் தேவைப்பட்டது. அறிவகத்தை ஒதுக்கித் தரும்படி தலைமைக் கழகத்திடம் இளைஞரணி கோரியது.

இதுபோல திமுக தொழிலாளர் அணியும் தனது அலுவலகத்திற்காக அன்பகத்தைக் கோரியது. அப்போது பொதுச் செயலாளர் அன்பழகன் ஒரு போட்டி வைத்தார்.

அதாவது புராணத்தில் ஒரு பழத்திற்காக போட்டியிட்ட பிள்ளையார் முருகனைப் போல ஒரு அலுவலகத்துக்கு இரண்டு அணிகளும் போட்டியிட்டதால் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், யார் முதலில் 10 லட்சம் ரூபாய் கட்சிக்கு நிதி தருகிறார்களோ அவர்களுக்குத்தான் அன்பகம் என ஒரு போட்டி வைத்தார்.

இதையடுத்து திமுக இளைஞரணிச் செயலாளரான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.

காலை, மாலை கொடி கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிகளிலும், இரவில் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு 100 ரூபாய், 200 ரூபாய் என வசூல் செய்து அதன் மூலம் 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்.

கட்சி மேலிடம் கேட்ட 10 லட்சத்திற்கும் மேலாக 1 லட்சத்தை வசூலித்து அதனை தலைமைக் கழகத்திடம் ஒப்படைத்து அன்பகத்தை இளைஞரணிக்கு பெற்றார்.

02.6.1988 அன்று அன்பகத்தில் இளைஞரணியின் தலைமை அலுவலகத்தை பேராசிரியர் அன்பழகன் தலைமையில் தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்.

1990ல் நடந்த ஐம்பெரும்விழா பேரணியில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் ஒரு ராணுவம் போல் நடைபோட்டு வந்ததைக் கண்ட அன்றைய பிரதமர் வி.பி.சிங், இந்த இளைஞரனின் தலைமையில் இவ்வளவு பேர் கட்டுக்கோப்புடன் நடை போட்டு வருகிறார்களே என அருகிலிருந்த கருணாநிதியிடம் கேட்க, திமுக இளைஞரணி செயலாளர்-என் மகன் ஸ்டாலின் என கலைஞர் கருணாநிதி பதிலளித்தார்.

இப்படி அரசியலில் பல காலமாக ஈடுபட்டு வந்த போதிலும் கூட எடுத்த எடுப்பிலேயே பெரிய பதவி ஸ்டாலினைத் தேடி வந்து விடவில்லை. இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு ‘ஆசிட் டெஸ்ட்’ வைப்பது போல சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை வழங்கினார் தலைவர் கலைஞர்.

அதிலும் ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. கவுன்சிலர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.

ஆனால் முதல் முறையாக 1996ம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார். மேயர் பதவியில் இருந்தபோது ஸ்டாலினுக்கு சென்னை மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது.

துப்புரவுப் பணிக்கு முன்னுரிமை அளித்தார். சிங்கப்பூரில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள பிரெஞ்சு நிறுவனமான ஓனிக்ஸ் நவீன முறைகளைப் பயன்படுத்தி குப்பைகளை அகற்றி வந்தது. சென்னையில் மூன்று மண்டலங்களில் துப்புரவுப் பணியை மேற்கொள்வதற்காக பகிரங்க ஒப்பந்த புள்ளி மூலம் இந்நிறுவனம் தெரிந்தெடுக்கப்பட்டது.
இவ்வாறு சென்னை மாநகராட்சியே குப்பைகளை அகற்றுவதில் நவீன முறைகளைப் பயன்படுத்திய முதல் மாநகராட்சியாகும்.

மேயராக இருந்து ஸ்டாலின் செய்த மிகப் பெரிய சாதனை சென்னை நகரில் சிறு சிறு மேம்பாலங்களைக் கட்டியதுதான். பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையாகத் திட்டமிட்ட பின்னர் தமிழ்நாடு அரசிடமிருந்து அனுமதி பெற்று 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

இதுதவிர 18 முக்கிய சந்திப்புகளில் பூங்காக்களும், நீரூற்றுகளும் அமைக்கப்பட்டன. 81 பூங்காக்கள் சுத்தப்படுத்தப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டன. ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய கடற்கரையான சென்னை மெரீனாவில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

பெரம்பூரிலுள்ள ஆடு-மாடு இறைச்சிக்கூடம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் நவீன முறையில் பராமரிக்கப்பட்டது. இத்தகைய சாதனைகளின் பலனாக 2001ம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் சின்னக் கலைஞர் ஸ்டாலினின் வளர்ச்சியை பொறுக்காத அப்போதைய அரசு 2002ம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தது.

ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்று அந்த சட்டத் திருத்தம் கூறியது. இதன் காரணமாக, தனது எம்.எல்.ஏ. பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்.

பின்னர் கலைஞர் கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார் மு.க.ஸ்டாலின். இதுதான் முதன் முதலாக ஸ்டாலின் ஏற்ற அமைச்சர் பதவி. ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வந்தார் ஸ்டாலின்.

இந்தத் தொகுதியை அதிமுகவிடமிருந்து தட்டிப் பறித்தவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984ம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.

தந்தை கலைஞரைப் போலவே ஸ்டாலினுக்கும் ஆரம்ப காலத்தில் நாடகங்களின் மீது ஈடுபாடு பிறந்தது. இதனால் நாடகத்திலும் நடித்தார். ஸ்டாலின் நடித்த முதல் நாடகம் திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய “முரசே முழங்கு” என்ற நாடகமாகும்.

இந்நாடகம் கலைஞர் முன்னிலையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. இந்நாடகம் பல இடங்களிலும் நடத்தப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து அதன் வெற்றிவிழா திருவல்லிக்கேணியில் அதே மேடையில் நடத்தப்பட்டது.

இதேபோல, திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே என பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின். அத்தனையும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்க நாடங்கள் ஆகும். இந்த அனுபவமே சின்னக் கலைஞரைப் பின்னாளில் குறிஞ்சி மலர், சூர்யா என டிவி நாடங்களிலும், ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் என இரு திரைப்படங்களிலும் நடிக்க தூண்டியது.

1993ம் ஆண்டில் இளைய சூரியன் என்ற தமிழ் வார இதழைத் தொடங்கி ஆசிரியருமானார். பல்வேறு தலைப்புகளில் அரசியல், திரைப்படச் செய்திகள், கதைகள் , கவிதைகள், வினா விடைகள் என அனைத்தும் அதில் இடம் பெற்றிருந்தன.

1994 ம் ஆண்டு வரை இளைய சூரியன் வெளிவந்தது. தந்தையைப் போலவே எழுத்திலும் ஆர்வம் கொண்டவர் ஸ்டாலின். இதன் பயனாக முரசொலியில் ‘உங்களில் ஒருவன்’ எனும் தலைப்பில் கட்டுரைகளை எழுதி வந்தார். நெல்லையில் இளைஞரணி யின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதுதான் ஸ்டாலினின் அரசியல் மணி மகுடத்திற்கான முதல் அடிக்கல் எனலாம்.

ஆக, சாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், செயல் தலைவர் என்று உயர்ந்த ஸ்டாலின் அவர்கள் தற்போது திமுக தலைவராக பொறுப்பேற்பதை மனதார வாழ்த்தி அவர் நினைப்பது நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actor Public Star Durai Sudhakar wishes DMK Leader MK Stalin

மிக மிக அவசரம் படத்திற்கு யு சர்ட்டிபிகேட்; ஸ்ரீபிரியங்காவை பாராட்டிய சென்சார்

மிக மிக அவசரம் படத்திற்கு யு சர்ட்டிபிகேட்; ஸ்ரீபிரியங்காவை பாராட்டிய சென்சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suresh Kamatchis Miga Miga Avasaram movie censored Uவிஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள 3-வது படம் ‘மிக மிக அவசரம்’.

இப்படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குனர் ஆகியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி.

நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். ஹரீஷ்குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல்துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளனர்.

முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், அரவிந்த், லிங்கா, சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி கே சுந்தர், குணசீலன், மாஸ்டர் சாமுண்டி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இன்று சமூகத்தில் பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இப்படி சூழல் மாறினாலும், வேலைக்கு செல்லும் பெண்களின் அவல நிலை மட்டும் மாறவே இல்லை. ஆம். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது.

அந்தவகையில் ‘மிக மிக அவசரம்’ படத்தில் காவல்துறையில் சாதாரண பொறுப்பில் பணியாற்றும் ஒரு இளம் பெண் போலீஸ், அந்த துறையில் சந்திக்கும் மிக நுட்பமான பிரச்சனைகளை இப்படத்தில் விரிவாகவும் பட்டவர்த்தனமாகவும் அலசியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் காமாட்சி.

இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று சென்சார் அதிகாரிகளுக்கு இந்தப்படம் திரையிடப்பட்டது.

படத்தை பார்த்த அதிகாரிகள் படத்தில் எந்தவித திருத்தங்களும் சொல்லாமல் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

மேலும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ரீபிரியங்காவின் அற்புதமான நடிப்பிற்கு தங்களது தனிப்பட்ட பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

Suresh Kamatchis Miga Miga Avasaram movie censored U

தனி ஒருவன்-2 பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா-ஜெயம் ரவி

தனி ஒருவன்-2 பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா-ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thani oruvan stillsரீமேக் படங்களை மட்டுமே இயக்குவார் என ஒரு கருத்து நிலவி வந்த நிலையில் தனி ஒருவன் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்து தன் தனித் திறமையை நிரூபித்தவர் மோகன் ராஜா.

இப்படத்தில் இவரது தம்பி ஜெயம் ரவி நாயகனாக நடிக்க, நாயகியாக நயன்தாரா, வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருந்தனர்.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.

இப்படம் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி ஓணம் திருநாளில் வெளியானது.

மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முக்கிய அறிவிப்பை தற்போது மோகன் ராஜா வெளியிட்டுள்ளார்.

மீண்டும் ஜெயம் ரவியை வைத்து ‘தனி ஒருவன் 2’ படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

படத்தின் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை அவர்கள் வெளியிடவில்லை.

Thani Oruvan 2 officially announced by Mohan Raja and Jayam Ravi

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மஹத்தை அறைந்த சிம்பு

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மஹத்தை அறைந்த சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Simbu Welcome Bigg Boss 2 Mahat video goes viralபிரபலமான நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிரபலமானவர் மஹத்.

அஜித்துடன் ‘மங்காத்தா’, விஜய்யுடன் ‘ஜில்லா’, சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இவர் கலந்துக் கொண்டார்.

சுமார் 70 நாட்கள் கடந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து தற்போது மஹத் வெளியேறினார்.

அதன்பின்னர் நடிகரும் இவருடைய நண்பருமான சிம்புவை சந்தித்துள்ளார்.

அப்போது சிம்பு அடித்து வரவேற்று இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனிடையில் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை 8 மாதங்களாக காதலித்து வந்தார் மஹத்.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்தபின் அங்கிருந்த இருட்டு அறையில் முரட்டு குத்து பட புகழ் நடிகை யாஷிகா மீது காதல் கொண்டதால், அவரது முன்னாள் காதலிக்கும் மஹத்துக்கும் பிரச்சினை உருவானது.

இதனால் அவர்களின் காதல் முறிந்து போனதாக கூறப்படுகிறது. இனி என்ன நடக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Actor Simbu Welcome Bigg Boss 2 Mahat video goes viral

செப்டம்பர் 3வது வாரத்தில் *சர்கார்* சிங்கிள் ட்ராக் வெளியீடு

செப்டம்பர் 3வது வாரத்தில் *சர்கார்* சிங்கிள் ட்ராக் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar movie single track willbe released on 19th September 2018ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சர்கார் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

முழுக்க அரசியல் சாயத்துடன் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

தற்போது சர்கார் படத்தின் ஒர்க்கிங் ஸ்டில்களை ஒவ்வொரு போட்டோக்களாக வெளியிட்டு வருகிறார்கள்.

இதன் இசை அக்டோபர் 2-ந்தேதி வெளியாகிகவுள்ள நிலையில் செப்டம்பர் 19-ந் தேதி சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகயிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Sarkar movie single track willbe released on 19th September 2018

செல்ல குழந்தைகள் வாங்கிய வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சூரி

செல்ல குழந்தைகள் வாங்கிய வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedian Soori celebrated his birthday in his Childrens new homeகவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் ஆகிய காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாகி விட்டதால், காமெடி நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே சூரி மற்றும் யோகி பாபு படங்களுக்கு நல்ல மார்கெட் உள்ளது.

முக்கியமாக சூரியின் காமெடிக்கும் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர் அவர் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு சிவகார்த்திகயேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

ஆனால், சூரியோ, மகள் வெண்ணிலா, மகன் சர்வான் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன் முறையாக ஆடம்பரமாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

அந்த வீடியோவை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Actor Soori‏ @sooriofficial
என் மகள் வெண்ணிலாவும் மகன் சர்வானும் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன்முறையாக ஆடம்பரமாக என் பிறந்த நாளை கொண்டாடினேன்… வீடு வாங்கிக் கொடுத்த செல்லங்களுக்கு நன்றி!

அவரது குழந்தைகள் பத்து வயதுக்கு உட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comedian Soori celebrated his birthday in his Childrens new home

அந்த லிங்க் இதோ…

https://twitter.com/sooriofficial/status/1033985543447568384

More Articles
Follows