மீண்டும் RBR பட டைரக்டருக்கு வாய்ப்பளித்த பிரின்ஸ் பிக்சர்ஸ்

மீண்டும் RBR பட டைரக்டருக்கு வாய்ப்பளித்த பிரின்ஸ் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக ஆர்ஜே பாலாஜி – ஐஸ்வர்யா நடிப்பில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான படம் ‘ரன் பேபி ரன்’.

இந்த பாக்ஸ் ஆபிஸில் பாசிட்டிவான விமர்சனங்களையும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கிய இந்த படம் விறுவிறுப்பான கதை, த்ரில் மற்றும் எதிர்பாரா திருப்பங்களுடன் ஒரு முக்கியமான செய்தியையும் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.

எனவே படக்குழு நேற்று ‘ரன் பேபி ரன்’ வெற்றி விழா சந்திப்பையும் நிகழ்த்தினர்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் மீண்டும் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமாருடன் இன்னொரு உற்சாகமான படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தப்படம் குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படாவிட்டாலும், நிச்சயமாக இயக்குனரிடம் இருந்து இன்னொரு உற்சாகமான படைப்பாக அது இருக்கும்.

இயக்குனர்கள் FIR மனு ஆனந்த், ‘வதந்தி’ ஆண்ட்ரூ லூயிஸ் ஆகியோர் இயக்கும் படங்கள் உட்பட மற்றும் சில படங்கள் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வரிசை கட்டி நிற்கின்றன.

எதிர்காலத்தில் நல்ல படைப்புகளை தருவதில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய உறுதியை தெரிவிக்கிறது.

Prince Pictures teams up with Run Baby Run director

சிம்பு – தனுஷ் – சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக பிக் பாஸ் கவின்….

சிம்பு – தனுஷ் – சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக பிக் பாஸ் கவின்….

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் நடிகர் கவின் நடித்திருக்கும் படம் ‘டாடா’.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

‘டாடா’ திரைப்படம் நாளை பிப்ரவரி 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், ‘டாடா’ படத்தை தமிழ்நாட்டில் 400+ திரைகளைப் பெற்றுள்ளது மற்றும் கவின் நடித்து ரிலீசான படங்களில் இதுவே மிகப்பெரிய ரிலீஸ் ஆகும்.

சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களே அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும். அந்த வரிசையில் கவினின் ‘டாடா’ படமும் இணைந்துள்ளது.

Kavin’s ‘Dada’ to release on over 400 screens in Tamil Nadu

படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு காயம்; ஆயுர்வேத முறையில் சிகிச்சை…!

படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு காயம்; ஆயுர்வேத முறையில் சிகிச்சை…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அருண் விஜய், இயக்குநர் விஜய்யுடன் இணைந்து ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் நிமிஷா சஜயனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

அச்சம் என்பது இல்லையே

லண்டனில் தனது ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அருண் விஜய் காயம் அடைந்து சிகிச்சைக்காக இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர் கேரளாவில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அருண் விஜய் “காயம் ஏற்பட்ட என் முழங்காலுக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்து வருகிறேன்.. இது என்னுடைய நான்காவது நாள் சிகிச்சை.. விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அச்சம் என்பது இல்லையே

arun vijay is getting Ayurvedic treatment in kerala

சமூக அக்கறையில் ‘அக்கரன்’..; வெண்பா-வின் தந்தையாக MS பாஸ்கர்

சமூக அக்கறையில் ‘அக்கரன்’..; வெண்பா-வின் தந்தையாக MS பாஸ்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல குணசித்திர நடிகர் எம்எஸ். பாஸ்கர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அக்கரன்’.

அவரே கதையின் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் வெண்பா, ‘கபாலி’ விஸ்வநாத், நமோ நாராயணா, ஆகாஷ் பிரேம்குமார், கார்த்திக் சந்திரசேகர் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

அறிமுக இயக்குநர் அருண் கே.பிரசாத் டைரக்டு செய்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர் நாயகனாக நடிப்பது குறித்து அருண் கே.பிரசாத் கூறியதாவது..,

“எம்.எஸ்.பாஸ்கர் கதையை கேட்டதுமே உடனே ஒப்புக்கொண்டார். அக்கரன் படத்தில் அவர் விவசாயியாக நடித்துள்ளார். அவருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் வெண்பா. மற்றொருவர் பிரியா.

ஒரு மகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட. தந்தை எப்படி பழிவாங்குகிறார் என்பதே கதை.” என தெரிவித்துள்ளார்.

வில்லனுடன் எம்.எஸ்.பாஸ்கர் மோதும் சண்டைக் காட்சியும் படத்தில் உள்ளது என்பது கூடுதல் தகவல்..

MS Baskar Venba Viswanth Starrer Akkaran updates

‘வாரிசு’க்கு பிறகு வரிசை கட்டும் படங்கள்.; பாவனாவுடன் இணையும் கணேஷ் வெங்கட் ராம்

‘வாரிசு’க்கு பிறகு வரிசை கட்டும் படங்கள்.; பாவனாவுடன் இணையும் கணேஷ் வெங்கட் ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் ‘வாரிசு’ திரைப்பட புகழ் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார்.

அபியும் நானும் படம் மூலம் அறிமுகமாகி, உலகநாயகன் கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், பிக்பாஸ் நிகழ்ச்சி என மக்கள் மனங்களை வென்றவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.

தற்போது விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில் வில்லனாக கலக்கியிருக்கிறார். தமிழில் முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் அவரது பாத்திரம் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது நீண்ட இடைவேளைக்கு நடிகை பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார், நடிகர் கணேஷ் வெங்கட்ராம்

கணேஷ் வெங்கட்ராம்

இது குறித்து நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கூறியதாவது…

“வாரிசு படத்தின் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. தெலுங்கு, இந்தி, மலையாளம் சினிமாவில் பலவிதமான கதாப்பாத்திரங்கள் நடித்துள்ளேன்.. தமிழில் நமக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம் கிடைப்பதில்லையே என நினைத்திருக்கிறேன்.

ஆனால் அது வாரிசு மூலம் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி. அதிலும் இப்படத்தில் எனது கேரக்டரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அட்டகாசமாக இருந்ததாக அனைவரும் பாராட்டினார்கள். இது மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்போது வாரிசை தொடர்ந்து, பல வித்தியாசமான கதபாத்திரங்கள் தமிழில் வர ஆரம்பித்திருக்கிறது.

சில படங்களில் முழுக்க என் லுக்கை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன். வாரிசுக்கு பிறகு இப்போது இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில் ஒரு ஹாரர் திரில்லர் படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் நடிகை பாவனா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நடிக்கிறார். கொடைக்கானல் சென்னை பகுதியில் நடக்கும் கதை.

அன்னபெல்லா சேதுபதி படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக இருக்கும். அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான படைப்புகள் எனது நடிப்பில் வரவுள்ளது. விரைவில் அது பற்றிய அறிவிப்புகளும் வரும் என்றார்.

கணேஷ் வெங்கட்ராம்

Varisu Actor Ganesh Venkatram pair with Bhavana

‘குக் வித் கோமாளி’ அஸ்வினை இயக்கும் ‘தேஜாவு’ இயக்குநர்

‘குக் வித் கோமாளி’ அஸ்வினை இயக்கும் ‘தேஜாவு’ இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்திரிகையாளரும் அறிமுக இயக்குனருமான அரவிந்த் சீனிவாசன் இயக்கிய படம் ‘தேஜாவு’. தெலுங்கில் ‘ரிப்பீட்டு’ என்ற பெயரில் வெளியானது.

இதில் அருள்நிதி, வித்யா பிரதீப், மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்ற நிலையில் அரவிந்தின் அடுத்த படம் என்ன என்பது கேள்வியாக இருந்தது.

தற்போது அவரின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ‘குக் வித் கோமாளி’ மற்றும் ‘செம்பி’ படப் புகழ் அஸ்வின் குமார் நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார் அரவிந்த்.

ஷென் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக புகழ் என்பவர் தயாரிக்கிறார்.

CWC fame Ashwins next with Dejavu director

More Articles
Follows