JUST IN பறந்து வந்த கமல் – சிம்பு.; நதிகளில் நீராடும் சூரியன் & வெந்து தணிந்தது காடு பற்றி கௌதம் மேனன் மாஸ் அப்டேட்

JUST IN பறந்து வந்த கமல் – சிம்பு.; நதிகளில் நீராடும் சூரியன் & வெந்து தணிந்தது காடு பற்றி கௌதம் மேனன் மாஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன், சிம்பு, ஏ ஆர் ரகுமான், ஐசரி கணேஷ் ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ள கமல்ஹாசன், சிம்பு, ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் ஹெலிகாப்டரில் பறந்து வந்தனர்.

இந்த விழாவில் இயக்குனர் லிங்குசாமி, நடிகர் ஜீவா, ஆர்.ஜே பாலாஜி நடிகை திவ்யதர்ஷினி, ராதிகா, விக்ரம் பிரபு, கூல் சுரேஷ், வருண் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடன குழுவினர் இணைந்து .”லூசு பெண்ணே…” என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது பாடகி ஸ்ரேயா கோஷல் மேடை ஏறி “மன்னிப்பாயா…” என்ற பாடலை பாடினார்.

அதன் பின்னர் கௌதம் மேனன் பேசியதாவது…

“எல்லாருடைய வாழ்க்கையிலும் பெண்கள் இல்லாத பகுதி இருக்காது.

என்னுடைய உண்மையான கேரக்டர் தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கார்த்திக் கேரக்டர்.

சிம்புவுடன் பணிபுரிவது எப்போதுமே எதிர்பார்ப்பாக இருக்கும்.

வெந்து தணிந்தது காடு இந்த கூட்டணி இதோடு முடியாது. இது தொடரும்” என்றார்.

நதிகளில் நீராடும் சூரியன் படத்திற்கு முன்பு ஒரு கேங்ஸ்டர் கதையை இரண்டு மணி நேரம் சிம்புவிடம் சொன்னேன். படம் எப்போ பண்ணலாம்? என்று உடனே கேட்டார்.

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் தலைமையில் ‘தள்ளி போகாதே..’ என்ற பாடலை மேடையில் இசைக் குழுவினர் ஆடினர்.

Kamal and Simbu participated in Vendhu Thanindhadhu Kaadu Audio launch

‘வெந்து தணிந்தது காடு’ படத்தை பார்த்தா பித்து பிடிச்சு போய்டூவீங்க.. – சித்தி இதானி

‘வெந்து தணிந்தது காடு’ படத்தை பார்த்தா பித்து பிடிச்சு போய்டூவீங்க.. – சித்தி இதானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் கலந்துக் கொண்டுள்ளார்.

இப்படத்தின் நாயகி சித்தி இதானி மேடையில் பேசியபோது…

“இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு 200% உழைப்பை கொடுத்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த பிறகு ரசிகர்கள் பித்து (பைத்தியம்) பிடித்துப் போவார்கள்.” என்றார்.

அவர் இந்த பேச்சைக் கேட்டவுடன் சிம்பு ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் கரவொலி எழுப்பினர்.

#VTKAudioLaunch

Siddhi Idnani says All of you may go mad after watching Vendhu Thanindhathu Kaadu

JUST IN எனக்காக இல்லனாலும் என் ரசிகர்களுக்காக செய்வேன்.; RJ பாலாஜியிடம் சிம்பு வாக்குறுதி

JUST IN எனக்காக இல்லனாலும் என் ரசிகர்களுக்காக செய்வேன்.; RJ பாலாஜியிடம் சிம்பு வாக்குறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமலஹாசன் கலந்துக் கொண்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சிலம்பரசன் மற்றும் தயாரிப்பாளர் ஐ சரி கணேசன் ஆகியோர் விழா நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கினர்

ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை வெளியிடுகிறார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி பேசும்போது…

சில வருடங்களுக்கு முன்பு நான் சிம்புவிடம் பேசிக் கொண்டிருந்தபோது….

” நீங்கள் நிறைய படங்கள் செய்ய வேண்டும் என்று கூறினேன். சிம்பு பதில் அளிக்கும் போது.. ‘கண்டிப்பாக எனக்காக இல்லனாலும் என் ரசிகர்களுக்காக செய்வேன்'” என தெரிவித்தார்.

இவ்வாறு ஆர்ஜே பாலாஜி மேடையில் பேசினார்.

RJ Balaji talks about Simbu and his fans in VTK Audio Launch

பாலிவுட் பறக்கும் பேபி.; மானஸ்வி கொட்டாச்சிக்கு ‘மாமனிதன்’ தந்த வாய்ப்பு

பாலிவுட் பறக்கும் பேபி.; மானஸ்வி கொட்டாச்சிக்கு ‘மாமனிதன்’ தந்த வாய்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த நடிகர் விவேக் உடன் நிறைய படங்களில நடித்தவர் காமெடி நடிகர் கொட்டாச்சி.

இவரின் மகள் மானஷ்ஸ்ரீ தற்போது குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாராவுடன் :இமைக்கா நொடிகள்’ – ரஜினியுடன் ‘தர்பார்’ – விஜய்சேதுபதியுடன் ‘மாமனிதன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போதும் இவரது கைவசம் பத்து தல, சதுரங்க வேட்டை 2.. கும்கி 2.. உள்ளிட்ட நிறைய படங்கள் உள்ளன. நிறைய டிவி விளம்பரங்களிலும் இவரை காணலாம்.

இந்த நிலையில் இவருக்கு தற்போது ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

#மாமனிதன்
டெல்லி சர்வதேச திரைப்படவிழா
திரையிடல் காரணமாக
படத்தில் சிறப்பாக நடித்த
பேபி #மானஸ்வி -க்கு
ஹிந்திப் படத்தில் உடனே
நடிக்க அழைப்பு வந்தது,மகிழ்ச்சி.

வாழ்த்துக்கள்
?

@Actor_Kottachi @Kottachi4 #Manasvi

#maamanithan @VijaySethuOffl
@ahatamil
@onlynikil @Riyaz_Ctc https://t.co/LMNRjULdxr

மானஷ்ஸ்ரீ

Child Artist Manashvi will debut in Bollywood movie

ரோப் இல்லாமல் டூப் இல்லாமல் பறந்த ராஜநாயகம்.; கிர்ர்ர்ர்ரான கிஷோர்

ரோப் இல்லாமல் டூப் இல்லாமல் பறந்த ராஜநாயகம்.; கிர்ர்ர்ர்ரான கிஷோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரிக்கும் ‘மஞ்சக்குருவி’ படத்திற்காக செங்கல் சூளையில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது.

அப்பொழுது, ரோப் இல்லாமல் டூப் இல்லாமல் தன்னுடன் ஒரு நடிகர் மோதுவதை பார்த்த நடிகர் கிஷோர், ஆச்சரியத்தில் ஆழ்ந்து, இயக்குனர் அரங்கன் சின்னதம்பியிடம் விசாரிக்கும் போதுதான், அந்த நடிகர் ராஜநாயகம் குங்ஃபூ மாஸ்டர் என்பதும், இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குங்ஃபூ கலைஞர்களை உருவாக்கியவர் என்றும் தெரியவந்தது.

ராஜநாயகம்

உடனே ராஜநாயகத்தை கட்டிப்பிடித்து பாராட்டினார் கிஷோர்.

கிஷோர் கதையின் நாயகனாக நடிக்க, புதுமுகம் விஷ்வா, நீரஜா நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி போன்றவர்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில், அகில இந்திய குங்ஃபூ தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடித்துள்ளார்.

ராஜநாயகம்

வேல் ஒளிப்பதிவில், ராஜா முகமது எடிட்டிங் செய்ய, கே.எம்.நந்தகுமார் கலையை கவனிக்க, மிரட்டல் செல்வா சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.

சௌந்தர்யன் இசையமைத்திருக்கும் “மஞ்சக்குருவி” படத்தை, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அரங்கன் சின்னதம்பி இயக்கியுள்ளார்.

ராஜநாயகம்

Manjakuruvi movie shooting spot updates

இனி அரசு பள்ளிகளில் சினிமா பார்க்கலாம் : மாணவர்களுடன் மிங்கிளானார் மிஷ்கின்

இனி அரசு பள்ளிகளில் சினிமா பார்க்கலாம் : மாணவர்களுடன் மிங்கிளானார் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசின் சமீபத்திய முன்னெடுப்பு ‘அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம்’. அதன்படி முதலாவதாக சாப்ளினின் The Kid திரையிடப்பட்டது.

இந்த செப்டம்பர் மாதத்திற்கான படம் Children of Heaven.

நேற்று (செப்டம்பர் 1) இயக்குனர் மிஷ்கின் வாலாஜாபாத் அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் அப்படத்தைப் பார்த்து பின்பு பேசினார்.

மிஷ்கின்

மிஷ்கினிடம் குழந்தைகள் மாணவர்கள் கேள்விகள் கேட்க, நீண்ட கலந்துரையாடல் நடந்தது.

உரையாடலின் இடையில் ஆரம்பித்தது மழை.

தொடர்ந்து ஓயாமல் மழை பெய்தது.

“இந்த உன்னதமான படத்தைப் பார்த்த மாணவர்கள் நீங்கள் அனைவரும் சொர்க்கத்தின் குழந்தைகள் தான்” என்று உரையை முடித்தார் இயக்குனர் நடிகருமான மிஷ்கின்.

மிஷ்கின்

TN Govt announces Students can watch cinema in School

More Articles
Follows