பிரசாந்துடன் இணைந்து தன் மகன் விக்ரம் உடன் மோதும் பிரபு

johnny movie prabu prashanthநடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த் நடித்துள்ள படம் ஜானி.

சிவாஜி கணேசனின் பேரனும் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு நடித்துள்ள படம் துப்பாக்கி முனை.

இந்த இரு படங்களும் அடுத்த வாரம் டிசம்பர் 14ல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுப்பற்றிய விவரம் வருமாறு….

ஜானி படத்தில் பிரசாந்த் உடன் சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள இப்படத்தை பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள `துப்பாக்கி முனை’ படத்தில் விக்ரம் பிரபு மற்றும் ஹன்சிகா முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.

60 வயது மாநிறம் படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்துள்ள இந்த படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இளையதிலகம் பிரபு நடித்துள்ள ஜானி படத்துடன் அவரின் மகன் விக்ரம் நடித்துள்ள துப்பாக்கி முனை மோதுவது இங்கே குறிப்பிடத்தக்கது.

Prabhu team up with Prashanth and clash with his son Vikram

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

தமிழ் சினிமா படங்களின் ரிலீஸ் தேதியை…
...Read More
டாப் ஸ்டார் பிரசாந்த் மற்றும் சஞ்சிதா…
...Read More
மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட பல முன்னணி…
...Read More
நீ……..ண்ட இடை வெளிக்குப் பிறகு டாப்…
...Read More

Latest Post