*துப்பாக்கி முனை* பட வெற்றி விழாவை கொண்டாடிய விக்ரம் பிரபு

*துப்பாக்கி முனை* பட வெற்றி விழாவை கொண்டாடிய விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Prabhu celebrated Thuppakki Munai success party with his teamகலைப்புலி எஸ். தாணு தயாரித்து விக்ரம் பிரபு நடித்து திரையில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் திரைப்படம் ‘துப்பாக்கி முனை’.

இப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த 25-வது நாள் வெற்றி விழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி. மிர்ச்சி ஷா மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்து கொண்டு துப்பாக்கி முனை திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசையமைப்பாளர் எல்.வி.முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Vikram Prabhu celebrated Thuppakki Munai success party with his team

ஒரு நாள் முதல்வராக மறுத்த ரஜினி நிரந்தர முதல்வராகிறார்..?

ஒரு நாள் முதல்வராக மறுத்த ரஜினி நிரந்தர முதல்வராகிறார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth became Chief Minister in his upcoming movie Naarkaliசில வருடங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் முதல்வன்.

இந்த படத்தின் கதையை முதலில் ரஜினிக்காகத்தான் எழுதினார் ஷங்கர். ஆனால் அவர் நடிக்க மறுக்கவே பின்னர் தான் அர்ஜீன் நடித்தார்.

அந்த படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜீன் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் புதிதாக உருவாகவுள்ள ஒரு புதிய படத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வராக ரஜினி நடிக்கவிருக்கிறாராம்.

பேட்ட படத்தை முடித்துவிட்டு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தின் கதைப்படி சாதாரண மனிதராக இருக்கும் ஒருவர், அரசியலில் குதித்து படிப்படியாக முன்னேறி முதல்வர் நாற்காலியைப் பிடிக்கிறாராம்.

மக்களும் அவரின் ஆட்சியை விரும்பி அவரை நிரந்தர முதல்வராக ஆக்குவதாக கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

எனவே படத்திற்கு நாற்காலி என்று தலைப்பிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தபோதிலும் இந்த தலைப்பு வெளியாகிவிட்டதால் இதைவிட சிறந்த ஒரு தலைப்பை தேடி வருகிறதாம் படக்குழு.

ஒருவேளை கிடைக்காத பட்சத்தில் இதையே கூட தலைப்பாக வைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் சூட்டிங் பிப்ரவரி இறுதியில் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

Rajinikanth became Chief Minister in his upcoming movie Naarkali

விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு சிவாவிடம் அஜித் சொன்னது இதுதான்

விஸ்வாசம் படத்தை பார்த்துவிட்டு சிவாவிடம் அஜித் சொன்னது இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith reaction after watching his Viswasam movieசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் நாளை மறுநாள் ஜனவரி 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இதற்கு முன்பே இந்த கூட்டணி 3 முறை இணைந்துள்ளது நாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்தை அஜித் பார்த்துவிட்டு தன் பாராட்டுக்களை சிவாவிடம் கூறினாராம்.

அவர் கூறியதை சிவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில்…

அஜித் சார் ஒரு சீரியஸான மனிதராக காணப்பட்டாலும் அவருக்குள் ஒரு குழந்தைத்தனம் எப்போதும் இருக்கும்.

நான் இதற்கு முன் இயக்கிய 3 படங்களில் அவரின் அந்த குணத்தை காட்டமுடியவில்லை.

முதல்முறையாக வீரமான, வெள்ளந்தியான ஆளாக விஸ்வாசம் படத்தில் வருகிறார். மாஸாக கலக்கியிருக்கிறார்.

விஸ்வாசம் படத்தை அவர் பார்த்தார். பார்த்த பிறகு, நாம் இணைந்த 4 படங்களிலேயே இதுதான் பெஸ்ட் படம் என்று கூறினார். அவர் அப்படி கூறியது எனக்கு ரொம்ப மகிழ்ச்சி” இவ்வாறு கூறினார்.

Ajith reaction after watching his Viswasam movie

நோயாளியை குணமாக்கிய குரூவாயூரப்பன்; குணமானவரே நாயகனாக நடித்த *கிருஷ்ணம்*

நோயாளியை குணமாக்கிய குரூவாயூரப்பன்; குணமானவரே நாயகனாக நடித்த *கிருஷ்ணம்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Krishnam A Devotional Movie Based On True Incidentsகேரளாவில் நடந்த உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம் ‘ என்கிற பெயரில் பக்திப் படமாகியுள்ளது.

கேரளாவில் உள்ள ஒரு கோடீஸ்வரருக்கு மூன்று பிள்ளைகள். அந்தக் குடும்பமே கிருஷ்ண பக்தர்கள் கொண்ட குடும்பம்.

நன்றாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு நாள் புயலடித்தது. கோடீஸ்வரரின் 3வது பையனுக்கு இதயத்தில் ஒரு நோய் .Chronic Constrictive Pericarditis என்பது நோயின் பெயர்.

அது 10 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே வரும் நோய். மருத்துவம் உண்டா என்றால் உண்டுதான். ஆனால் அறுவை சிகிச்சைக்கு நீண்ட நேரம் பிடிக்கும்.

இச்சிகிச்சையில் பிழைக்கும் வாய்ப்பும் குறைவுதான். இருந்தாலும் குடும்பத்தினர் குருவாயூர் கிருஷ்ணனைப் பிரார்த்தனை செய்தனர், கிருஷ்ணனை நம்பினர்.

கேரளாவின் பிரபல டாக்டர் சுனில் தலைமையில் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட 2 டாக்டர்கள் துணையுடன் அறுவைச் சிகிச்சைக்குத் தயாரானது மருத்துவக் குழு . என்ன கொடுமை !

அந்த நேரத்தில் டாக்டர் சுனிலுக்கு திடீரென்று மயக்கம் வந்தது மருத்துவ குழு அதிர்ச்சிக்குள்ளானது. நல்ல வேளை சுனில் அரை மணி நேரத்தில் தெளிந்து எழுந்தார்.

ஒரு வழியாக வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையும் முடிந்தது. குடும்பத்தினர் கிருஷ்ணனைப் பிரார்த்தனை செய்தது வீண் போகவில்லை. எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

அறுவை சிகிச்சை நடந்து முடிந்த போது குருவாயூரிலிருந்து ஓர் இளைஞன் மருத்துவமனைக்கு வந்து விசாரித்தானாம். அதே போல வீட்டுக்கும் வந்து நலம் விசாரித்தானாம்.

பிறகு குருவாயூர் போய் விசாரித்த போது அப்படி யாரும் அங்கிருந்து அனுப்பப்படவில்லை என்றார்களாம். அதேபோல் ஹாஸ்பிடலில் இருக்கும்போது குருவாயூரிலிருந்து போன் வந்திருக்கிறது.

பிறகு குருவாயூர் போய் விசாரித்த போது அப்படி யாரும் பேசவில்லை என்றார்களாம். சாட்சாத் கிருஷ்ணன் தான் அந்த போன் பேசியது . சாட்சாத் அந்தக் குருவாயூர் கிருஷ்ணன் தான் அந்த இளைஞனாக வந்தது என்று நம்புகிறார்கள்.

இந்த அற்புதத்தை உணர்ந்த குடும்பம் இந்த அனுபவத்தை உலகுக்குக் காட்ட எண்ணியிருக்கிறது.

இக்கதையைத் திரைப்படமாக்க விரும்பியிருக்கிறது. முடிவும் ஆகிவிட்டது. வேலைகள் தொடங்கி மளமளவென படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்கள். தமிழ், மலையாள மொழிகளில் படம் தயாராகியுள்ளது.

நோயில் பிழைத்த அதே மகன் அக்ஷய் கிருஷ்ணனை நாயகனாக நடிக்க வைத்துள்ளனர். நாயகியாக ஐஸ்வர்யா உல்லாஸ் நடித்துள்ளார்.

மற்றும் சாய்குமார், சாந்தி கிருஷ்ணா, விஜய் பாபு, வினீத், ராஜீவ் பணிக்கர், ஜெயகுமார் , அஞ்சலி உபாசனா ஆகியோரும் நடிக்க படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்தில் நிஜ வாழ்வில் நடந்த குருவாயூர் கிருஷ்ணனின் அற்புதங்கள் இடம் பெறுகின்றன.

கதையைத் தயாரிப்பாளர் பி.என்.பலராம் எழுதியுள்ளார். திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து படத்தை இயக்கியிருப்பவர் தினேஷ் பாபு , இசை – ஹரிபிரசாத், கலை இயக்கம் – போபன், படத்தொகுப்பு – அபிலாஷ் பாலசந்திரன் .

Krishnam A Devotional Movie Based On True Incidents

true incident Krishnam

 

https://www.youtube.com/watch?v=NJL093SPSEw&feature=youtu.be

கனா போதும். இனி வேண்டாம்.; ஐஸ்வர்யாவுக்கு அம்மா அட்வைஸ்

கனா போதும். இனி வேண்டாம்.; ஐஸ்வர்யாவுக்கு அம்மா அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kanaa is enough for your career says Aishwarya Rajesh mother to her daughterசிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா படத்தின் வெற்றி விழாவில் பட நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…

“குறைந்த திரையரங்குகளே கிடைத்தாலும், இந்த திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி. ஒரு படம் தயாரிக்கும் போது நிறைய விஷயங்களை யோசிப்பார்கள்.

அப்படியும் என் மீது நம்பிக்கை வைத்த சிவா சார், கலையரசு, அருண்ராஜாவுக்கு நன்றி. கிரிக்கெட் தெரியாத என்னை நம்பிய அவர்களுக்கு நன்றி. என் அப்பா இல்லாத குறை தெரிந்ததே இல்லை. அப்படி என்னை வளர்த்தார் அம்மா.

சினிமாவில் நடிகைகளுக்கு குறைந்த காலமே வாய்ப்பு இருக்கும். எனவே எல்லா படங்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். என் அம்மாவும் அப்படிதான் எனக்காக நினைத்தார்.

ஆனால் இந்த படம் நடித்த பிறகு, இனிமே நீ படமே நடிக்கவில்லையென்றால் கூட பரவாயில்லை. இது போதும் உன் சினிமா வாழ்க்கைக்கு என்று என் அம்மா சொன்னாங்க.

எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இது தான். என் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்த கிருத்திகாவுக்கும், மோனாவுக்கும் வாழ்த்துக்கள் என்று பேசினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Kanaa is enough for your career says Aishwarya Rajesh mother to her daughter

கனா-வை சிவகார்த்திகேயன் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை.. : சத்யராஜ்

கனா-வை சிவகார்த்திகேயன் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை.. : சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kanaaநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெளியாகினாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த படம் உருவாக மூலக்காரணமாக இருந்தாலும் அமைதியாக இங்கு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கிரிக்கெட் தெரியாத என்னையும் இந்த 11 பேர் அணியில் சேர்த்துக் கொண்ட சிவா சாருக்கு நன்றி.

எந்த ஹீரோவும் இல்லாமலேயே ஒரு ஸ்டாருக்குண்டான ஓபனிங்கை இந்த படத்துக்கு பெற்று தந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எல்லோரும் சிறப்பாக உழைத்திருந்தாலும் மிகுந்த வருத்தத்தோடு நிறைய காட்சிகளை வெட்டி எறிந்து விட்டேன். அதனால் இந்த படத்துக்கு நான் தான் எல்லோருக்கும் வில்லன் என்றார் எடிட்டர் ரூபன்.

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது போல, கதையில் எனக்கு ஸ்கோப் இருந்ததால் நான் சிறப்பாக வேலை செய்ய முடிந்தது. அருண்ராஜாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

நானே கிராமத்தை சேர்ந்தவன் தான் என்பதால் அது எளிதாக இருந்தது, கால்பந்து விளையாடி இருந்ததாலும் ஸ்டேடியம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஓரளவுக்கு பணிபுரிய முடிந்தது என்றார் கலை இயக்குனர் இளையராஜா.

சிவாவின் தன்னம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும். இந்த படத்துக்கு இவ்வளவு செலவு செய்யலாம் என கணித்து படத்தை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.

படம் துவங்கும் போதே இது வெற்றி விழா காணும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஒரு நடிகர் என்பவர் கதையில் நிறைய விஷயங்களை சேர்த்து அதை மெற்கேற்றுவார். சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் என எல்லோருமே மிகச்சிறப்பாக அதை செய்திருக்கிறார்கள் என்றார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.

நான் நாயகியாக நடித்தபோதே சத்யராஜ் சாருடன் ஜோடியாக நடிக்க ஆசைப்பட்டேன், ஆனால் அது இப்போது நிறைவேறி இருக்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் மிகவும் திறமையான நடிகை, இந்த ஆண்டின் அனைத்து விருதுகளும் அவருக்கு கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் நடிகை ரமா.

சிவா நட்புக்கு மரியாதை கொடுத்து எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சத்யராஜ் சாரின் பாஸிட்டிவிட்டி இந்த குழுவில் இருந்த இளைஞர்கள் எல்லோருக்கும் ஒரு ஊக்கமாக இருந்தது.

தர்ஷன் எனக்கு ஒரு தம்பி. அவர் வெற்றி பெற்றால் நானே வெற்றி பெற்ற மாதிரி. எனக்கு பாடல் எழுத சொல்லிக் கொடுத்த நண்பன், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ். என் முதல் படத்தில் எனக்கு உறுதுணையாக நின்றவர். நான் இயக்கினேன் என்று சொல்வதை விட, என்னை நிறைய பேர் இயக்கினார்கள். அவர்களிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்றார் அருண்ராஜா காமராஜ்.

அந்த காலத்தில் தொடர்ச்சியாக 100 நாட்கள் வெற்றி விழா கொண்டாடிக் கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்தில் இந்த விழாக்கள் எங்களுக்கு சலித்தே விட்டது.

இந்த கட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சியான விழாவை பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நட்பை பற்றி பேசியே ஆக வேண்டும். உதவி செய்யணுமே என்றோ கைமாறு எதிர்பார்த்தோ அவர் செய்யவில்லை. சிவகார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய ஹீரோ. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இந்த மாதிரி படத்தை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஆனால், நாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை தயாரித்து படத்தின் முதுகெலும்பாக இருந்து இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இந்தியில் அமீர்கான் தாரே ஜமீன் பார் படத்தின் மூலம் செய்த விஷயத்தை சிவா இங்கு செய்திருக்கிறார் என்றார் நடிகர் சத்யராஜ்.

More Articles
Follows