மாஸ் நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ பட சூப்பர் அப்டேட்ஸ்

மாஸ் நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ பட சூப்பர் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பகுதிகளாக திரைக்கு வர தயாராகி வருகிறது.

PS-1 செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திர நடிகர்களைக் கொண்ட இந்தப் படம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது.

1950 களில் தொடராக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.

அன்றிலிருந்து இன்று வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

10 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ஒரு சாகச பயணம், பொன்னியின் செல்வன் சோழப் பேரரசிற்குள் நடக்கும் பிரிவு, அதிகாரப் போராட்டங்களைக் கண்காணிக்கிறார். அரசின் எதிரிகள் வினையூக்கிகளாக செயல்படுகிறார்கள்.

பொன்னியின் செல்வன் (காவேரி நதியின் மகன்) ஒரு பொற்காலத்தை கொண்டு வருவதற்காக போராடி – அதாவது, ராஜ ராஜ சோழன் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய பேரரசர்களில் ஒருவராக ஆவதற்கு முன்பு இருந்த கொந்தளிப்பான காலகட்டத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரே, அவர் ராஜ ராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார்.

இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவையும், தோட்ட தரணி தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், பிரபல இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றும் நட்சத்திர தொழில்நுட்ப வல்லுநர்களால் படம் நிரம்பியுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் , வரும் வாரங்களில் படத்தைப் பற்றிய கூடுதல் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை அதிகாரபூர்வமாக வெளியிடுவார்கள்.

Ponniyin Selvan official announcement is here

சத்யஜோதி – தனுஷ் – ஜிவி.பிரகாஷ் கூட்டணியில் 1930 ஸ் பீரியட் ஃபிலிம்

சத்யஜோதி – தனுஷ் – ஜிவி.பிரகாஷ் கூட்டணியில் 1930 ஸ் பீரியட் ஃபிலிம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை (ஜூலை 2, 2022): அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது அடுத்த பிரமாண்ட தயாரிப்பான ‘கேப்டன் மில்லர்’ என்ற தலைப்பினை படக்குழு இன்று அறிவித்துள்ளது.

தென்னிந்திய திரையுலகில் பல கிளாசிக் படைப்புகளை வழங்கியதன் மூலம், பல தசாப்தங்களாக, சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஒரு மதிப்பு மிக்க நிறுவனமாக விளங்கி வருகிறது.

தற்போது இந்நிறுவனம், பாராட்டுக்களைக் குவித்த ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை தந்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்துள்ளது.

பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது.

மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

தயாரிப்பாளர் T.G. தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் கூறும்போது…

“எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில், பிரமாண்டமான அளவில் உருவாகும் நம்பிக்கைக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் இருக்கும், எங்களின் மதிப்புமிக்க திரைப்படமான ‘கேப்டன் மில்லர்’ படத்தை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நடிகர் தனுஷுடன் பணிபுரிவது எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும், ஏனெனில் எங்களின் கூட்டணியில் வெளியான முந்தைய திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எனக்கும், தனுஷுக்கும் ஸ்கிரிப்டை விவரித்தபோது, நாங்கள் இருவரும் உற்சாகமானோம், மேலும் பெரிய அளவில் இதனை உருவாக்க விரும்பினோம்.

இயக்குநர் அருணின் வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் விதிவிலக்கான படைப்புகளை வழங்கும் முயற்சி, மாறுபட்ட அவரது திரைப்படத் தயாரிப்பு முறைகள் என அனைத்தும் எனக்கும் மிகவும் பிடிக்கும், அவர் ஸ்கிரிப்டை விவரித்தபோது, அவரது சிந்தனை மற்றும் அவரது திரைக்கதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தனித்துவமான இசை இந்தப் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும்.

இந்தப் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்பக் கலைஞர்களும் ஏற்கனவே தங்களுக்கென சிறப்பான ஒரு இடத்தைச் செதுக்கியிருக்கிறார்கள்.

மேலும் அவர்களின் பங்களிப்பு ‘கேப்டன் மில்லரை’ பெரிய அளவில் கொண்டு செல்லும்.

“கேப்டன் மில்லர்” படைப்பு அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே, ரசிகர்களிடம் பெரும் சலசலப்பை உருவாக்கியது.

மேலும் சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தைப் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளுடன் வளர்த்து வருகிறது.

இந்த திரைப்படம் சிறந்த முறையில் வடிவமைக்கப்படுவதை உறுதிசெய்ய, ஒரு குழு ஒரு வருடமாக, முன் தயாரிப்பு பணிகளிலும், ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டது.

இந்த திரைப்படத்திற்கு நட்சத்திர நடிகர்கள் மற்றொரு ஈர்க்கும் அம்சமாக இருப்பார்கள். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் புதியதாகவும் கவர்ச்சிகரமான படைப்பாகவும் இருக்கும்.

உண்மையில், இந்த திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பேனர் மதிப்புக்காக அல்லாமல், அந்தந்த துறையினுள் சாதனை புரிந்த, சிறந்த திறமைகளின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

பாகுபலி படங்கள், ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற மிகப்பெரும் பிளாக்பஸ்டர் படங்களுக்கு அவரது சிறப்பான வசனங்கள் பலமாக இருந்தது போல் கேப்டன் மில்லருக்கும் கூடுதல் ஈர்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களில் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), த.ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (சண்டை காட்சி இயக்கம்), Tuney John 24am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் பணிபுரிகின்றனர்.

கேப்டன் மில்லர் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.

இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

1930s period film with Satya Jyothi – Dhanush – GV Prakash

40 படங்களை இயக்கிய மலையாள இயக்குநருடன் சௌந்தரராஜா & தேவானந்தா கூட்டணி

40 படங்களை இயக்கிய மலையாள இயக்குநருடன் சௌந்தரராஜா & தேவானந்தா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சௌந்தரராஜா மற்றும் தேவானந்தா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள ‘சாயாவனம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதிக்க உள்ளார் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அனில்.

இந்தப் படத்தை தாமோர் சினிமா பேனரில் சந்தோஷ் தாமோதரன் தயாரிக்கிறார்.

40-க்கும் மேற்பட்ட மலையாள படங்களை இயக்கியுள்ள இயக்குநர் அனில், முன்னணி மலையாள ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ளார்.

அவரது சமீபத்திய படம் ‘மையா’ ஹிந்தியில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இயக்குநர் அனில் இயக்கிய ‘பகல் பூரம்’ படத்தின் மூலம் தாமோர் சினிமா தனது தயாரிப்பு பயணத்தைத் தொடங்கியது.

இந்த தயாரிப்பு நிறுவனம் இதுவரை ‘வாழ்கண்ணாடி’, ‘இவர்’, ‘சந்திரோற்சவம்’, ‘குருஷேத்ரா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.

‘கடைக்குட்டி சிங்கம்’, ‘தர்மதுரை’, ‘சுந்தரபாண்டியன்’ புகழ் சௌந்தரராஜா ‘சாயாவனம்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

சௌந்தரராஜா கதாநாயகனாக நடிக்கும் மூன்றாவது படம் இது.

இதற்கு முன் ‘ஒரு கனவு போல’… காமெடி மன்னன்’ கவுண்டமணியுடன் ‘எனக்கு வேறு எங்கும் கிடையாது’ படங்களில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார்.

‘சாயாவனம்’ பற்றி பேசிய இயக்குநர் அனில், தனது தமிழ் திரையுலக என்ட்ரிக்கு வித்தியாசமான ஸ்கிரிப்ட் தேவை என்று கருதியதாக கூறினார்.

“படத்தின் தலைப்பு ‘அடர்ந்த காடு’ என்று பொருள்படும், படத்தில் வரும் கதாபாத்திரங்களின் குணத்தை இது குறிக்கும். தேவானந்தா நடிக்கும் சீதை கதாபாத்திரத்தைச் சுற்றி கதை நகர்கிறது.

கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்துகொண்ட சௌந்தரராஜா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ” என்றார் இயக்குநர் அனில்.

மேலும், படத்தின் பெரும்பகுதி சிரபுஞ்சியில் படமாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

“முழுக்க முழுக்க மூடுபனி, மழை மற்றும் காடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது என்று நான் நம்புகிறேன்.

படத்தில் வரும் கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் விதமாக இயற்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கதாபாத்திரங்கள் காடுகளைப் போல அடர்த்தி மிக்கவை, அவர்களிடம் பல ரகசியங்கள் உள்ளன,” என்று அவர் கூறினார்.

தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவை எல் ராமச்சந்திரன் கையாள்கிறார். மோகன வீணை நிபுணரான போலி வர்கீஸ் இசையமைத்துள்ளார். படத்திற்கு எடிட்டிங்கை அருள் சித்தார்த் மேற்கொள்கிறார்.

Soundararaja & Devananda team up with Malayalam director

‘செஞ்சி கோட்டை’-யில் நாயகனாக களமிறங்கும் ஆதேஷ் பாலா

‘செஞ்சி கோட்டை’-யில் நாயகனாக களமிறங்கும் ஆதேஷ் பாலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளம் இயக்குனர் சந்தோஷ் நவீனின் இயக்கத்தில் பேட்டை, முண்டாசு பட்டி, ஆறு போன்ற வெற்றி படங்களில் நடித்த பிரபல நடிகர் ஆதேஷ் பாலா முதல் முதலாக கதாநாயகனாக களமிறங்குகிறார்.

இப்படத்தில் இரட்டை நாயகிகளாக அறிமுகமாகின்றனர் சொஹாணி விருபாக்‌ஷா மற்றும் நடிகை பிரியங்கா.

இப்படத்திற்கு செஞ்சி கோட்டை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

காதல், பாசம், போராட்டம் என பல அம்சங்களை தழுவிய குடும்ப படம், பார்த்தால் பசு பாய்ந்தால் புலி கதாபாத்திர வேடம் ஏற்று அன்பை பொழிபவராகவும், அதே நேரத்தில் ஆக்ரோஷமும் ஆதங்கமும் வெளிப்படுத்தும் மனிதராகவும் ஆதேஷ் பாலா சிறப்பாக நடித்துள்ளார்.

கில்லி புகழ் அரிவாள் வீச்சு வில்லன் கராத்தே ராஜாவும் அதேஷ் பாலாவுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும், பாசமிக்க தந்தையாக அறம் திரைப்பட புகழ் மகிமை ராஜும், வில்லியாக கவிதா விருபாக்‌ஷாவும், அறிமுக வில்லனாக ஷியாம் ஜீவாவும் நடித்துள்ளார்கள்.

இதில் வில்லி கவிதா விருபாக்‌ஷாவும் நாயகி சொஹாணி விருபாக்‌ஷாவும், நிஜ வாழ்க்கையில் தாயும் மகளும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பிற அறிமுக நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து திறம்பட இயக்கியுள்ளார் இயக்குனர் சந்தோஷ் நவின்..

நிச்சயமாக இந்த படம் எந்தவொரு ஆபாசமின்றி குடும்பத்துடன் சென்று பார்க்கும்படி யதார்த்தமான நிகழ்வுகளை கொண்டு இப்படம் உருவாகி வருகிறது என்கிறார் இயக்குனர். செஞ்சி கோட்டை திரைப்படத்தில் நடிக்கும் அனைவருக்கும் நிச்சயம் சிறந்த எதிர்காலத்தையும் வாய்ப்பையும் அள்ளித்தரும் வெற்றிபடமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் வெளிப்புற படக்காட்சிகள் செஞ்சியை அடுத்துள்ள பழைய சுரத்தூர் கிராமத்து மலைகளிலும், திருவண்ணாமலையில் நந்தி தீர்த்தம் மலை அடிவாரத்திலும் இதுவரை கண்டிராத கோணங்களில் கேமிரா கண்ணுக்கு விருந்து படைத்துள்ளது.

சண்டைக்காட்சிகள் நிச்சயம் பேசப்படும் விதமாக அமைந்துள்ளது. படத்தில் 3 பாடல்கள் உள்ளது. இசையமைப்பாளர் யார் என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருக்கிறது.

கதாநாயகனும் ஊர் பஞ்சாயத்து தலைவரும் மோதிக் கொள்ளும் காட்சியில் ஊர் மக்களும் மிக இயல்பாக நடித்து ஒரே டேக்கில் ஒகே ஆன காட்சி நிச்சயம் மக்களின் பாராட்டை பெறும் என்கிறது படக்குழு.

செஞ்சி கோட்டை திரைப்படத்தில் மைனா வெற்றி திரைப்படத்தில் நடித்த பழம்பெரும் நடிகர் கும்பிடுகுரு சாமியின் தீபாவளி வாழ்த்துக்கள் வெங்கைய்யா பாலனும் நட்புக்காக இணைந்துள்ளார்.

மேலும் மாஸ்டர் படத்தில் சீர்திருத்தப்பள்ளியில் சிறுவனாக நடித்த ஆஜய்யும் மற்றும் அறிமுக நடிகைகள், பவுனம்பாள், ஸ்ரீஜோதி,மீனா ஜெயந்தாரா, நடிகர்கள் எஸ்.ரமேஷ் மற்றும் கேசவ் நடித்துள்ளார்கள்.. திரையுலகில் செஞ்சி கோட்டை நிச்சயம் தனது தனித்துவ முத்திரையை பதிக்கும்.

Adesh Bala to play the lead role in ‘Senji Kottai’

‘வின்னர் 2’ படத்தின் அப்டேட் கொடுத்த ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த்

‘வின்னர் 2’ படத்தின் அப்டேட் கொடுத்த ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் கொடி கட்டிப் பறந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த்.

முன்னணி நடிகைகள் இவருடன் ஜோடியாக நடிக்க காத்திருந்தனர்.

ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் பிரசாந்த்துடன் நடித்திருந்தார்.

தமிழ், வின்னர், சாக்லேட், விரும்புகிறேன் உள்ளிட்ட தரமான படங்களை கொடுத்திருக்கிறார்.

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தன் தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் நடித்துள்ளார் பிரசாந்த்.

இந்த படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்டோர் பிரசாந்துடன் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் சூப்பர் ஹிட்டான வின்னர் திரைப்படத்தை பிரசாந்த் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு நடிகர் பிரசாந்த் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது பிரசாந்த் கூறுகையில், “அந்தகன் விரைவில் வெளியாகும். வின்னர் 2-ஆம் பாகம் முதல் பாகத்தை விட மிக பிரமாண்டமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கிய வின்னர் படத்தில் பிரசாந்த், கிரண், வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் காமெடி காட்சிகள் படுபிரபலம்.

‘Top Star’ Prashanth gave an update on ‘Winner 2’

லாட்டரி கதையை கையிலெடுக்கும் ‘பம்பர்’ டீம்..; துப்பாக்கி பாண்டியனாக ஜி.பி.முத்து

லாட்டரி கதையை கையிலெடுக்கும் ‘பம்பர்’ டீம்..; துப்பாக்கி பாண்டியனாக ஜி.பி.முத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட ‘பம்பர்’ என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.

வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம். செல்வக்குமார் இயக்குகிறார்.

பம்பர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

இப்பணிகளும் விரைவில் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்று இயக்குநர் தெரிவித்தார்.

தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் பம்பர் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் மிகவும் சுவாரசியமான முறையில் தயாராகி உள்ளது என்று குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இப்படத்தில் துப்பாக்கி பாண்டியன் எனும் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் சமூக வலைதளங்களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஜி பி முத்து நடிக்கிறார்.

அவர் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

‘பம்பர்’ படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது நினைவிருக்கலாம்.

‘பம்பர்’ படத்தின் கதாநாயகியாக ஷிவானி நாராயணன் நடிக்கிறார். சுவாரசியமான கதாபாத்திரம் ஒன்றை தங்கதுரை ஏற்றுள்ளார்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வக்குமார்…

“கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கின்றனர்,” என்றார்.

படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை, எம்ஜிஆர் மகன், ஆலம்பனா மற்றும் கடமையை செய் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி நடிக்கும் ‘பம்பர்’ திரைப்படத்தை சு. தியாகராஜா தயாரிக்க எம். செல்வக்குமார் இயக்குகிறார்.

Vetri-Shivani starrer ‘Bumper’ in final post-production stage, to release soon

More Articles
Follows