நடிகை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு.; ‘ஃபர்ஹானா’ பதட்டத்தில் ஐஸ்வர்யா.?!

நடிகை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு.; ‘ஃபர்ஹானா’ பதட்டத்தில் ஐஸ்வர்யா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மே 12ஆம் தேதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ஃபர்ஹானா திரைப்படம் வெளியானது.

இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்க ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்க ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் முக்கிய வேடங்களில் அனுமோள், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா கட்டி செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அண்மையில் தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானதை தொடர்ந்து ஃபர்ஹானா திரைப்படமும் இஸ்லாமியர் சர்ச்சைக்குள்ளான படமா என ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

ஆனால் இது இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றிய படம் அல்ல என்றும் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்ணின் போராட்டங்கள் பற்றிய படம் என பலமுறை படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு தமிழக அரசு சார்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

மேலும் பர்கானா திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் சென்னை பிரசாத் லேப் வளாகத்தினுள் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Police security at the farhana actress’s house

‘இந்தியன் 2’ அப்டேட் : எடிட்டிங்கில் ஷங்கர்.. டப்பிங்கில் கமல்ஹாசன்

‘இந்தியன் 2’ அப்டேட் : எடிட்டிங்கில் ஷங்கர்.. டப்பிங்கில் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது.

இப்படத்திற்கான இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது தற்போது சென்னையில் தொடங்க உள்ளது.

இயக்குனர் ஷங்கர், ‘இந்தியன் 2’ படத்தின் எடிட்டிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தில் தனக்கான போர்ஷனுக்கான டப்பிங்கை கமல்ஹாசன் முடித்துள்ளார்.

இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், ‘இந்தியன்2’ படத்தை முடித்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் அடுத்து ஹச்.வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kamal dubs for his portions in indian 2

அவர்கள் அறிவில் குறைந்தவர்கள் இல்லை.; ‘தி கேரளா ஸ்டோரி’ & “ஃபர்ஹானா’ படங்கள் ஓப்பீடு? அமீர் ஆவேசம்

அவர்கள் அறிவில் குறைந்தவர்கள் இல்லை.; ‘தி கேரளா ஸ்டோரி’ & “ஃபர்ஹானா’ படங்கள் ஓப்பீடு? அமீர் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மே 12 ஆம் தேதி வெளியான ஃபர்ஹானா’ படம் குறித்து நடிகரும் இயக்குனர் அமீர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது…

மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்,

செல்வி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள “ஃபர்ஹானா” திரைப்படம் குறித்து ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களும் அத்திரைப்படத்தை எதிர்ப்பது போல் ஒரு தோற்றம் உருவாகி உள்ளது.

மேலும் இஸ்லாமிய மக்களால் ஐஸ்வர்யா ராஜேஷ் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ.? என்கிற நோக்கில் அவரது இல்லத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும் செய்தி உண்மையிலேயே எனக்கு வருத்தம் தருவதாக இருக்கிறது.

இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தி மத வேற்றுமையை உருவாக்கும் ஒரே நோக்கத்தில் தயாரிக்கப்பட்ட “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தையும், “ஃபர்ஹானா” திரைப்படத்தையும் ஒரே கோணத்தில் பார்க்கும் அளவிற்கு தமிழர்களும் இஸ்லாமியர்களும் அறிவில் குறைந்தவர்கள் இல்லை. இஸ்லாமியர்களை பற்றி இயக்குனரும், தயாரிப்பு நிறுவனமும் அவர்கள் அறிந்து வைத்திருக்கும் விதத்திலேயே ஃபர்ஹானா திரைப்படத்தை எடுத்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை தனிப்பட்ட முறையில் எனக்கு தெரியும் என்பதாலும், அவருக்கு இஸ்லாமியர்கள் மீது அன்பும், மரியாதையும் இருப்பதை நான் உணர்ந்திருப்பதாலும், இஸ்லாமிய கோட்பாடுகளை இழிவுபடுத்தும் உள் நோக்கோடு இத்திரைப்படத்தில் நடித்திருப்பார் என்பதையும், தீய நோக்கத்தோடு இத் திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் எடுத்திருக்கும் என்பதையும் நான் நம்பவில்லை.

எனவே இஸ்லாமிய கதாபாத்திரங்கள் உள்ள எல்லாத் திரைப்படத்துக்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, இஸ்லாமிய சமூகத்தை ஒரு சகிப்பின்மை கொண்ட சமூகமாக சித்தரிக்க வேண்டாம் என்று இந்த அறிக்கையின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மதவேற்றுமையை கடந்து ஒரு அமைதிப் பூங்காவாகவே எப்போதும் திகழ்கிறது. இனியும் அப்படியே தொடரும் என்ற நம்பிக்கையோடு ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு வழங்கப்பட்டிருக்கும் காவல்துறையின் பாதுகாப்பை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
அமீர்

சென்னை
14th MAY 2023

Don’t compare The Kerala story and Farhana says Ameer

பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் ‘விருமாண்டி’ அபிராமி

பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் ‘விருமாண்டி’ அபிராமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அர்ஜூன் நடித்த ‘வானவில்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அபிராமி.

பிறகு கமல்ஹாசன் உடன் ’விருமாண்டி’ திரைப்படத்தில் அன்னக்கிளி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானர் அபிராமி

’மிடில் கிளாஸ் மாதவன்’ ’சமுத்திரம்’ ’சார்லி சாப்ளின்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோதிகா நடித்த ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் பவன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ‘கல்கி’ என்ற பெண் குழந்தையை தத்து வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதன் பின் வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிட்டதாகவும் அபிராமி கூறினார்.

அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து கூறியதாவது ” அன்பு நண்பர்களே, ராகுலும் நானும் இப்போது ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், கல்கி கடந்த ஆண்டு நாங்கள் எங்கள் மகளை தத்தெடுத்தோம், அது எல்லா வகையிலும் வாழ்க்கையை மாற்றிவிட்டது.” என பதிவிட்டுள்ளார்.

மேலும், அனைவருக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

abhirami adopt a baby child world mothers day

‘வாத்தி’ பட இயக்குனர் – தயாரிப்பாளருடன் இணையும் பிரபல நாயகன்

‘வாத்தி’ பட இயக்குனர் – தயாரிப்பாளருடன் இணையும் பிரபல நாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்க சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த நிலையில் ‘வாத்தி’ பட நிறுவனமும் அதன் இயக்குனரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகின்றனர்.

இந்த படத்தில் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கும் எனவும் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான்

venky atluri to direct dulquer salmaan next movie

உதயநிதியின் கடைசி பட விழாவில் கமல் – ரஜினி பங்கேற்பு.!?

உதயநிதியின் கடைசி பட விழாவில் கமல் – ரஜினி பங்கேற்பு.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படம் உதயநிதியின் கடைசி படம் என்று அவரே கூறியுள்ளார்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படத்தின் இசை வெளியீடு குறித்து தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது.

‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 1ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடக்கிறது.

இந்நிலையில், உதயநிதியின் கடைசிப் படமான இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Rajini Kamal participation in maamannan audio launch

More Articles
Follows