His Name is John.; ‘துருவ நட்சத்திரம்’ பட 2வது பாடல் ப்ரோமோ வெளியானது

His Name is John.; ‘துருவ நட்சத்திரம்’ பட 2வது பாடல் ப்ரோமோ வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’.

இப்படத்தில் கதாநாயகியாக ரீத்துவர்மா நடிக்க, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு இப்பட டீசர் வெளியானது. மேலும் இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஒரு மனம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்’ என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது.

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் 2-வது சிங்கிள் பாடல் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ பாடலின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்கள்.

துருவ நட்சத்திரம்

Vikram’s ‘Dhruva Natchathiram’ second single promo released

யாருக்காக.? இது 2K கிட்ஸ்காக.! 50 வருடத்திற்கு பிறகு 100 தியேட்டர்களில் ரீ-ரிலீசாகும் ‘வசந்த மாளிகை’

யாருக்காக.? இது 2K கிட்ஸ்காக.! 50 வருடத்திற்கு பிறகு 100 தியேட்டர்களில் ரீ-ரிலீசாகும் ‘வசந்த மாளிகை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலத்தால் அழியாத காவியப்படமான ‘2’ வெளிவந்து 50 வருடங்களாகிறது. 200 நாட்களை தாண்டி வெற்றி விழா கண்ட இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ கே.பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ், வி.கே.ராமசாமி, மனோரமா, பண்டரிபாய், ரமாபிரபா, ஹெலன், ஏ. சகுந்தலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

சிங்கப்பூர், மலேசியா, நாடுகளிலும் வசூலை அள்ளிய இந்தப்படம் இலங்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அன்றைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கலைமகள் கை பொருளே,
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்…
யாருக்காக இது யாருக்காக ….
இரண்டு மனம் வேண்டும்…..
குடிமகனே பெரும் குடிமகனே…
போன்ற முத்தான பாடல்களை கண்ணதாசன் எழுதி இருந்தார். கே.வி.மகாதேவன் அசத்தலாக இசையமைத்து இன்றளவும் மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படம் வெளிவந்து 50 வருடமாகிறது – இதை முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கி ரசிகர்களுக்கு தருவதற்காக வி.சி. குகநாதன் முயன்றார். அதற்காக ராமு அவர்களின் முழு ஈடுபாட்டில் வசந்தமாளிகை டிஜிட்டல்மயமாகி உள்ளது.

சிவாஜி கணேசன் அவர்களின் தீவிர ரசிகரான வி.நாகராஜன் ஜுலை மாதம் 21 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 100 திரையரங்குகளில் திரையிட முழு முனைப்பில் ஈடுபட்டுள்ளார்.

இன்றைய ரசிகர்களும் பார்த்து பாராட்டும் படமிது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் , வசந்த மாளிகை ” உயிரோட்டமான படமாக இருக்கும் அதனால்தான் நம்பிக்கையோடு ரிலீஸ் செய்கிறேன்” என்று வி. நாகராஜன் கூறுகிறார்.

சினிமா ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத ‘வசந்த மாளிகை’ படத்தை இனி 2K KIDS-கள் திரையில் பார்த்து ரசிக்கலாம்.

Vasantha Maaligai re release in 100 theatres after 50 years

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுடன் இணையும் தனுஷ் தந்தை கஸ்தூரிராஜா

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுடன் இணையும் தனுஷ் தந்தை கஸ்தூரிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் துவங்கியது.

இவ்விழாவினில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் கலந்துக் கொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.

புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

சண்முக பாண்டியன்

“வால்டர்” மற்றும் “ரேக்ளா” பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை” இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில், இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது.

கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் ஒரிசா தாய்லாந்து காடுகளில் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

‘மதுரை வீரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

சண்முக பாண்டியன்

மேலும் இப்படத்தில் நடிக்க, திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இப்படத்தின் தலைப்பை ஆடி 18 ஆம் தேதி நன்நாளில் அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்ப குழு விபரம்
கதை இயக்கம் – U அன்பு
திரைக்கதை வசனம் – பார்த்திபன் தேசிங்கு
ஒளிப்பதிவு – S R சதீஷ்குமார்
படத்தொகுப்பு – இளையராஜா
ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ
கலை இயக்கம் – P ராஜு
ஸ்டில்ஸ் – சக்திபிரியன்
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா AIM
பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்

சண்முக பாண்டியன்

After Madurai Veeran Shanmuga Pandians next project

விஷாலுடன் முதன் முறையாக இணையும் பிரியா பவானி சங்கர்

விஷாலுடன் முதன் முறையாக இணையும் பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள், இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியனுடன் இணைந்து தயாரிக்கும், நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இனிதே துவங்கியது.

‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் மூன்றாவது முறையாக இணையும் இந்த புதிய படத்தினை, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணைந்து பெரும் பொருட்செலவில், பிரமாண்டமாகத் தயாரிக்கின்றனர்.

இது விஷாலின் 34வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில் தற்போதைக்கு “விஷால்-34” என அழைக்கப்பட்டு வருகிறது.

நடிகை ப்ரியா பவானி சங்கர் இப்படத்தில் முதல்முறையாக விஷால் ஜோடியாக இணைகிறார். இதற்கு முன்பு ஹரி இயக்கிய ‘யானை’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த படம் குறித்து நடிகர் விஷால் கூறியதாவது…

“என் திரை வாழ்க்கையில் திருப்புமுனை தந்தவர் இயக்குநர் ஹரி. அவருடன் இணைந்த தாமிரபரணி மற்றும் பூஜை படங்களைப்போல இந்தப்படமும் அழுத்தமான கதை, உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புகளுடன், ஆக்சனும் கலந்து அனைவரும் ரசிக்கும் படி இருக்கும்.

கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இப்படம் அமையும்.
இசையுலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி, புஷ்பா படம் மூலம் 5 மொழிகளிலும் ஹிட் தந்த இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், “ஆறு வேங்கை, சாமி, சிங்கம்1,2, ஆறு படங்களின் தொடர் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஹரியுடன் மீண்டும் இணைகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பையனூரில் உள்ள பெப்ஸிக்கு சொந்தமான அரங்கில், ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயனின் அதிரடி சண்டைக்காட்சிகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் துவங்கியது.

மேலும் சென்னையை அடுத்து, தமிழ்நாட்டின் தென் பகுதிகள் தூத்துக்குடி, காரைக்குடி வேலூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து படமாக்கப்படவுள்ளது.

படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் படம் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

தொழில் நுட்ப குழு விபரம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஹரி
இசை – தேவி ஶ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு – M சுகுமார்
கலை – காளி பிரேம்குமார்
படத்தொகுப்பு – T S ஜெய்
ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன்
பாடல்கள் – விவேகா
இணை தயாரிப்பு – அலங்கார் பாண்டியன் , கல்யாண் சுப்பிரமணியன்
தயாரிப்பு – கார்த்திகேயன் சந்தானம் , ஜீ ஸ்டூடியோஸ்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

விஷால் 34

Priya Bhavani Shankar to pair up with Vishal for the first time

சட்டப் பயிற்சி கல்வி : நடிகர் சூர்யா – நீதியரசர் சந்துருவை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சட்டப் பயிற்சி கல்வி : நடிகர் சூர்யா – நீதியரசர் சந்துருவை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் நீதியரசர் சந்துரு மற்றும் கல்விப் பணிகளின் நடிகர் சூர்யாவின் பங்களிப்பு குறித்து பதிவிட்டுள்ளார்..

அந்த பதிவில்…

சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி #SocialJustice அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம்.

சூர்யா

1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், #Reservation கொண்டு வரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள #SathyadevLawAcademy-யைத் தொடங்கி வைத்தேன்.

இதில், ஏழை – எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி @Suriya_offl அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன்.

சூர்யா

சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது!

எனவே, #நான்_முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

நீதியரசர் திரு.சந்துரு அவர்களோடு, #JaiBhim திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி திரு.சூர்யா, இயக்குநர் திரு. @tjgnan ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள்.

சூர்யா

CM Stalin launched Actor Suriyas Sathyadev Law Academy

ராம்சரண் – சமந்தா இணைந்த ‘ரங்கஸ்தலம்’ ஜப்பானில் படைக்கும் சாதனை

ராம்சரண் – சமந்தா இணைந்த ‘ரங்கஸ்தலம்’ ஜப்பானில் படைக்கும் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜப்பானில் முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய படமாக இது அமைந்தது ‘ரங்கஸ்தலம்’.

அதிக வசூல் செய்த தெலுங்கு படங்களில் ஒன்றான ‘ரங்கஸ்தலம்’- அதன் நடிப்பு, கதை சொல்லல், இயக்கம் மற்றும் இசை ஆகியவற்றிற்காக விமர்சன ரீதியான பாராட்டை பெற்றது.

இந்த திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. அனைத்து காலக்கட்டத்திலும் அதிக வசூலை செய்த தெலுங்கு படங்களில் ஒன்றாகவும் இது அமைந்தது.

மேலும் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களையும் ஈர்த்தது.

ராம்சரணின் திரையுலக பயணத்தில் ‘ரங்கஸ்தலம்’ ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது.

இந்த படத்தில் அவர் சிட்டிபாபு என்ற ஒரு பகுதி காது கேளாத மற்றும் நேர்மையான இளைஞனாக தனது கிராமத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார்.

உணர்வுபூர்வமான நடிப்பு மற்றும் பாத்திரத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக அவர் பாராட்டினை பெற்றார்.

ரங்கஸ்தலம்

இந்த படம் முன்னணி நடிகையான சமந்தாவுக்கும் பாராட்டுகளை பெற்று தந்தது. அவர் தனது கதாபாத்திரத்திற்கு கவர்ச்சியையும், ஆழமான நடிப்பினையும் வெளிப்படுத்தினார்.

ராம் சரண் உடனான அவரது கெமிஸ்ட்ரியும் பார்வையாளர்களிடத்தில் வரவேற்பை பெற்றது.

இந்தத் திரைப்படம் ஜப்பானில் ஜூலை 14-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது. முதல் நாளில் 70 திரைகளில் 2.5 மில்லியன் யென்களை ஈட்டியது.

‘ரங்கஸ்தலம்’ படத்தின் ஜப்பான் வெளியிட்டைப் பற்றி அப்படத்தினை ஜப்பானில் வெளியிட்ட ஸ்பேஸ்பாக்ஸ் ஜப்பான் எனும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசி துரைப்பாண்டியன் பேசுகையில்…

” ஸ்பேஸ்பாக்ஸ் ரங்கஸ்தலம் திரைப்படத்தை ஜப்பானில் சுமார் 50 கிரங்கு திரையரங்குகளில் வெளியிட்டோம். வரும் வாரங்களில் இன்னும் கூடுதலாக பல திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

ஜப்பானியர்களின் இதயத்தில் ராம்சரண் சிறப்பான இடத்தை பிடித்துள்ளார். இதனை இப்படத்தின் வெற்றி நிரூபிக்கிறது. ‘ரங்கஸ்தலம்’ போன்ற படத்தை ஜப்பானில் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதில் எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

இந்த திரைப்படம் உண்மையிலேயே தலை சிறந்த படைப்பு மற்றும் ஸ்பேஸ்பாக்ஸ்க்கு கிடைத்த பெருமை” என்றார்.

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களை விநியோகிப்பதற்கான முன்னணி இந்திய திரைப்பட விநியோக நிறுவனமாக ஸ்பேஸ்பாக்ஸ் ஜப்பானில் உள்ளது.

இந்நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ வெற்றியை பெற்றது.

‘மகதீரா’, :துருவா’, ‘ரங்கஸ்தலம்’, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் மூலம் ராம்சரண் முன்னணி நடிகர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

ரங்கஸ்தலம்

Ram Charans Rangasthalam breaks all records at its Japan Release

More Articles
Follows