இளையராஜா இசையமைத்த பாடலை வெளியிட்ட கௌதம் வாசுதேவ் & ஐஸ்வர்யா

இளையராஜா இசையமைத்த பாடலை வெளியிட்ட கௌதம் வாசுதேவ் & ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.

லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு, சிலந்தி, ரணதந்த்ரா, சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட “அருவா சண்ட” படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கியிருக்கிறார்.

பள்ளிப் பருவத்தில் உருவாகும் முதல் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு இதயம் வருடும் 5 பாடல்களை இசைத்துக் கொடுத்திருக்கிறார் இசைஞானி.

அந்த பாடல்களை ஆதிராஜன் மிகுந்த ரசனையுடன் படமாக்கி இருக்கிறார்.

பாடல் காட்சிகளை பார்த்து ரசித்த ஜீ மியூசிக் நிறுவனம் பாடல்களின் தரத்தையும் எடுக்கப்பட்ட விதத்தையும் பாராட்டியதுடன் இசை உரிமையையும் வாங்கி இருக்கிறது.

பழனி பாரதியின் வார்த்தை ஜாலங்களில் கார்த்திக்கின் மயக்கும் குரலில் உருவான “மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…” என்ற முதல் பாடல் ஜீ மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. பிரபல இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன், பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிலீஸ் செய்தனர். நன்றி அவர்களுக்கு. பாடல் எல்லோராலும் விரும்பப்படுகிறது என்பதை பின்னூட்டங்களில் பார்க்க முடிகிறது. அருமையான ஒரு மெலடியாக அப்பாடல் அமைந்து இணையத்தைக் கலக்கி வருகிறது.

தீனா நடன வடிவமைப்பில் உருவான இந்த பாடல் காட்சியில் ரோகித், யுவலட்சுமி ஜோடி நடித்துள்ளனர். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரஜன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார்.

முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, அபிநட்சத்திரா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

Gautham vasudev and Aishwarya launched song from ilaiyaraaja music

தீபாவளிக்கு விசிலடித்து மூச்சுத் திணற சத்தமிடுவீர்கள்.. அதான் 1% கூட காட்டல.; ‘டைகர் 3’ குறித்து மனீஷ் சர்மா

தீபாவளிக்கு விசிலடித்து மூச்சுத் திணற சத்தமிடுவீர்கள்.. அதான் 1% கூட காட்டல.; ‘டைகர் 3’ குறித்து மனீஷ் சர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டைகர் 3’யின் டீசர் மற்றும் டிரைலரின் நம்பமுடியாத வெற்றி, அதை பார்த்து ரசிப்பதற்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் கண்கவர் ஆக்சன் படமாக மாற்றியுள்ளது என்கிற இயக்குநர் மனீஷ் சர்மா, யஷ்ராஜ் பிலிம்ஸ் ‘டைகர் 3’யின் ஒவ்வொரு விஷயத்தையும் ரகசியமாக அதேசமயம் புத்திசாலித்தனமாக நடத்தி வருகிறது” என்கிறார்..

மனீஷ் கூறும்போது…

“டைகரின் கதை எப்படி நகரும் என்பதை காட்டும் விதமாக’டைகர் 3’யின் டீசரையும் டிரைலரையும் நாங்கள் உருவாக்கினாலும், அதனுள்ளே பெரிய திரையில் மிகச்சிறந்ததாக காட்டுவதற்காக என்ன வைத்திருக்கிறோம் என்பதில் 1 % கூட நீங்கள் பார்த்திருக்க முடியாது” என்கிறார்.

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸில் இருந்து லேட்டஸ்ட்டாக வெளியான ‘டைகர் 3’யின் டீசர் மற்றும் டிரைலர் இரண்டுமே, இந்த பண்டிகை காலத்தில் திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகர்களின் அட்ரிலினை அதிகம் சுரக்கவைக்கும் ஆக்சன் கொண்டாட்டமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்திய சினிமாவின் மெகா ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் இருவரும் தங்களது சூப்பர் உளவாளி கதாபாத்திரங்களான டைகர் மற்றும் சோயா என்கிற அடையாள கதாபாத்திரங்களுக்கு திரும்பியுள்ளனர்.

மனீஷ் மேலும் கூறுகையில்,…

“படத்தின் 50 முதல் 60 சதவீதம் வரை மிக பிரமாண்டமான ஆக்சன் காட்சிகளை கொண்டதாக இருக்கும். மேலும் நீங்கள் இதில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான ஒரு சிறிய பார்வையை உங்களுக்கு தருவதற்கு நாங்கள் விரும்பினோம்..

நீங்கள் இந்தப்படத்தை பார்க்கும்போது உணரும் ஆச்சரியமும் பரவசமும் நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராததாக இருக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

டைகர் 3 போல ஒரு படத்தை பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் பொறுமையாக இருப்பதுடன் எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்வதும் ரொம்பவே முக்கியமானது.

எல்லாவற்றையும் முன்கூட்டியே கொடுத்துவிட்டோம் என்றால்.. ? நீங்களே கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.. அதனால் தான் மிகுந்த உற்சாகம் தரும் எங்கள் படத்தின் சில காட்சிகளை ‘டைகர் 3’யின் டிரைலரில் கூட காட்டவில்லை.

எனவே தியேட்டரில் ரசிகர்கள் படத்தை பார்க்கும்போது விசிலடித்தும் மூச்சுத்திணறும் அளவுக்கு சத்தமிட்டும் உற்சாகத்துடன் படத்தை பார்க்க முடியும்” என்கிறார்.

மனீஷ் மேலும் கூறும்போது…

“’டைகர் 3’ பெரிய திரைக்கான கண்கவர் காட்சி என்பதால் மக்கள் திரையரங்கின் உள்ளே அமர்ந்து ஆச்சர்யத்துடன் பார்த்து ரசிக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

திரையரங்குளில் உறுமலுடன் வரப்போகும் ‘டைகர் 3’ அவர்களுக்கான இந்த வருடத்தின் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கவேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். அதை நாங்கள் செய்யமுடியும் என்றால் ‘டைகர் 3’ குழுவினருக்கு அதுதான் மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும்” என்கிறார்.

வரும் நவ-12ல் தீபவாளி வெளியீடாக ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ‘டைகர் 3’ வெளியாகிறது.

டைகர் 3

You never seen even 1% in Tiger 3 says Maneesh sharma

‘சீயான் 62’ பட அறிவிப்பு.; விக்ரமை அடுத்து இயக்கப் போகும் இயக்குனர் இவரே.!

‘சீயான் 62’ பட அறிவிப்பு.; விக்ரமை அடுத்து இயக்கப் போகும் இயக்குனர் இவரே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களாகவே நடிகர் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அதற்கு காரணம் அவரது படங்களின் தொடர் அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டிரைலர் வெளியானது. இந்த படம் அடுத்த மாதம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கௌதம் மேனன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

இதனை அடுத்து நேற்று விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் இரண்டு அறிவிப்புகள் வெளியானது.

ஒன்று ‘தங்கலான்’ டீசர் நவம்பர் 1ம் தேதி வெளியாகும் எனவும் ‘தங்கலான்’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு சியான் 62 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடிக்க உள்ள #Chiyaan62 படத்தை சமீபத்தில் வெளியான ‘சித்தா’ பட இயக்குனர் அருண்குமார் இயக்க உள்ளார் இந்த செய்தியை நாம் ஏற்கனவே நம் FILMISTREET தளத்தில் தெரிவித்து இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண்குமார்

Chiyaan 62 will be directed by Chithha fame Arunkumar

ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியின் காதலை சொல்லும் ‘போகாதே…’

ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியின் காதலை சொல்லும் ‘போகாதே…’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அனிமல்’ படத்திலிருந்து வெளியான ‘நீ வாடி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தமிழ் ரசிகர்கள் கொண்டாட மீண்டும் ஒரு அருமையான பாடல் தற்போது அனிமல் படத்திலிருந்து வெளியாகியுள்ளது.

இந்த ‘போகாதே…’ பாடல் திருமணத்திற்கு பிறகான உறவின் சிக்கல்களை அழுத்தமாகப் பிரதிபலிக்கிறது.

பாடகர் கார்த்திக் குரலில் வெளிவந்திருக்கும் ‘போகாதே’ பாடல், அனிமல் படத்தில் நடித்திருக்கும் அட்டகாசமான ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியின் காதலை, அதன் வலியை, சிக்கல்களை ஆழமாக வெளிப்படுத்துகிறது.

ஸ்ரேயாஸ் பூரணிக் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள ‘போகாதே’, காதலின் சிக்கலான அம்சங்களை அழகாக வெளிப்படுத்துகிறது.

அனிமல்

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘அனிமல்’ ஒரு க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ளது.

பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து அனிமல் படத்தைத் தயாரிக்கின்றன.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் அனிமல் திரைப்படம் 1 டிசம்பர் 2023 அன்று வெளியாகிறது.

Animals hard hitting Tamil track Pogaadhe is out now

INDIAN 2 UPDATE – Received copy சேனாபதி..; அறிவிப்பு வெளியிட்ட படக்குழு

INDIAN 2 UPDATE – Received copy சேனாபதி..; அறிவிப்பு வெளியிட்ட படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 1996 இல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த ‘இந்தியன்’ படம் வெளியானது.

தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன் 2’ படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்திலும் ஷங்கர் மற்றும் கமல் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

லைகா தயாரிக்க அனிருத் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தில் கமலுடன் சித்தார்த், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

மேலும் விவேக், நெடுமுடி வேணு, மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆனால் கடந்த சில வருடங்களில் இந்த மூவரும் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில ‘இந்தியன் 2’ படத்தின் புதிய அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

அந்த போஸ்டரில் ‘Received copy சேனாபதி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியன் 2

Kamal starrer Indian 2 movie updates

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா & தம்பி ராமையா மகன் உமாபதி திருமண நிச்சயதார்த்தம்

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா & தம்பி ராமையா மகன் உமாபதி திருமண நிச்சயதார்த்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆக்ஷன் என்றால் பல நடிகர்களை நம் நினைவிற்கு கொண்டுவரும். ஆனால் ஆக்ஷன் கிங் என்று சொன்னால் அது நடிகர் அர்ஜுனை மட்டுமே நினைவுப்படுத்தும்.

நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நாயகன் அர்ஜுன் தற்போது முன்னணி நடிகரின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

அஜித்தின் ‘மங்காத்தா’, விஷாலின் ‘இரும்புத்திரை’, மற்றும் விஜய் ‘லியோ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் அர்ஜுன்.

இவரது மகள் ஐஸ்வர்யாவும் தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா.

இந்த நிலையில் பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதியை ஐஸ்வர்யா காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க தற்போது உமாபதி மற்றும் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ராஜகிளி’ என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா-உமாபதி

Arjun daughter Aishwarya and Thambi Ramaiya son Umapathi got engaged

More Articles
Follows