ஒவ்வொரு வெள்ளியும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆனா ஃபர்ஹானா வேற மாதிரி – மனுஷ்ய புத்ரன்

ஒவ்வொரு வெள்ளியும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆனா ஃபர்ஹானா வேற மாதிரி – மனுஷ்ய புத்ரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, அடுத்த வாரம் 12ம் தேதி வெளியாகும் #ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படக்குழுவினர் பேசியதாவது..

எழுத்தாளர் மனுஷ்ய புத்ரன் பேசும்போது..

கிட்டதட்ட 5, 6 வாரங்களாக ஒவ்வொருவரும் என்னைத் தொடர்பு கொண்டு.. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படத்தில் தானே நீங்கள் வசனம் எழுதுனீர்கள். அப்படம் வெளியாகிவிட்டது என்பார்கள். நெல்சன் எனக்கு சொல்லவே இல்லையே என்று பார்த்தால், அது வேறு படமாக இருக்கும்.

இப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று ஒவ்வொரு ஐஸ்வர்யா ராஜேஷ் படம் வெளியாகும். அதுதான் நான் எழுதிய படம் என்று நினைத்து பலபேர் போன் பண்ணுவார்கள்.

ஆனால், இந்த மே 12ம் தேதி வெள்ளிக்கிழமை புதிய நாளாக இருக்கும். இப்படம் வேறு மாதிரி இருக்கும். ஐஸ்வர்யா ராஜேஷை அனைவரும் வேறு மாதிரி பார்ப்பார்கள்.

நான் நிறைய சிறு கதைகள் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக படைத்திருந்தார் நெல்சன்.

சில நாட்களுக்கு முன்பு இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பெரும்பாலான படங்களில் பெரிய வசனகர்த்தாக்கள் எழுதி கொடுத்த பெரும்பாலான வசனம் படத்தில் இடம் பெறாமலேயே போய்விடும்.

ஆனால், இப்படத்தில் 90 சதவீதம் நான் எழுதிய வசனம் இருந்தது பார்த்து மகிழ்ச்சி.
படத்தை முழுவதும் பார்த்ததும், இப்படி ஓர் அற்புதமான படமா என்று உணர்ச்சி வசப்பட்டேன்.

இப்படத்தில் என்னுடைய எழுத்து வேறு இடத்திற்கு என்னை கொண்டு செல்லும்.

இப்போது இருக்கும் பெண்களுக்கு நிறைய சேலஞ்சஸ் இருக்கு. எந்த பெண்ணும் சந்திக்காத பிரச்னையை இப்பெண் சந்திக்கிறாள். இப்படத்திற்கு பிறகு பொது வெளியில் வரும் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடன் இப்படத்தை தொடர்பு படுத்திக் கொள்வாள்.

Manushya Puthren speech at Farhana press meet

பிரசாந்த் இயக்கிய ‘ஹனு- மேன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு.; இதான் காரணம்…

பிரசாந்த் இயக்கிய ‘ஹனு- மேன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு.; இதான் காரணம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் ‘ஹனு- மேன்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ளதைப் போல் ‘ ஹனு-மேன்’ படத்தின் காட்சிகள் பிரம்மாண்டமானதாக இருக்கும்.

இந்த திரைப்படம் மே மாதம் 12ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி வி எஃப் எக்ஸ் பணிகள் நிறைவடையாததால் படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் ஒத்தி வைத்திருக்கிறது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பார்வையாளர்களுக்கு ஹாலிவுட் தரத்தில் புதிய அனுபவத்தை அளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தின் டீசரில் சில காட்சிகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதன் வி எஃப் எக்ஸ் ஹாலிவுட் தரங்களுக்கு இணையாக இருந்தது. மேலும் ஹனுமான் சாலிசா என்ற பாடலுக்கும் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் இது தொடர்பாக தெரிவிக்கையில்…

” ஹனு- மேன் படத்தின் டீசருக்கு நீங்கள் வழங்கிய அளப்பரிய வரவேற்பு எங்களது இதயத்தை தொட்டது. மேலும் முழுமையான சிறந்த படைப்பை வழங்குவதற்கான எங்களுடைய பொறுப்பையும் உயர்த்தி இருக்கிறது.

நாங்கள் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையிலான திரைப்படத்தை வழங்குவோம் என வாக்களிக்கிறோம்.

பகவான் ஹனுமானுக்கு சரியான ஒரு பாடலாக இருக்கும். அது நேசத்திற்குரியது. நீங்கள் பெரிய திரைகளில் அனுமானை அனுபவிக்க புதிய வெளியீட்டு திகதியை விரைவில் அறிவிக்க அறிவிக்கிறோம் ஜெய் ஸ்ரீ ராம்” என குறிப்பிட்டனர்.

இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் ‘ஹனு-மேன்’ பான் வேர்ல்ட் வெளியீடாக இருக்கும்.

‘ஹனு-மேன்’ அடிப்படையில் அஞ்சனாத்திரி என்ற கற்பனையான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கதாநாயகன் ஹனுமானின் சக்திகளை பெற்று அஞ்சனாத்திரிக்காக எப்படி போராடுகிறான் என்பதுதான் படத்தின் கதை.

இந்த படத்தின் உள்ளடக்கம் உலகளாவியதாக இருப்பதால் உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கிறோம்.

இந்தத் திரைப்படத்தின் தேஜா சஜ்ஜா நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர்களுடன் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சௌரப் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.

ஸ்ரீ நாகேந்திர தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கு அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

Hanuman movie release postponed

ரஜினியுடன் மோத விரும்பாத சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு.; நல்லவேளை விஜய் – அஜித் போல இல்ல.!

ரஜினியுடன் மோத விரும்பாத சிவகார்த்திகேயன் எடுத்த திடீர் முடிவு.; நல்லவேளை விஜய் – அஜித் போல இல்ல.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள படம் ‘மாவீரன்’.

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. எனவே தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயரிட்டுள்ளனர்.

அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்க இஙர்களுடன் சரிதா, சுனில், இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது ‘மாவீரன்’ படம் ஜூலை 14-ம் தேதி வெளியாகும் என புதிய தகவலை வீடியோவுடன் படக்குழு வெளியிட்டு உள்ளது.

இதற்குக் காரணம் ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் தான். ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர்’ படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு அடுத்த நாள் ‘மாவீரன்’ படம் வந்தால் ரஜினியுடன் மோதுவதாக இருக்கும் என சிவகார்த்திகேயன் தரப்பில் நினைக்கப்பட்டதால் இந்த புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும் அவரது படங்களில் நிறைய ரஜினி ரெபரன்ஸ் காட்சிகள் இருக்கும்.

தங்களுடைய ஆரம்ப காலகட்டங்களில் அஜித் & விஜய் நடித்து வரும் போது தங்களை ஒரு ரஜினி ரசிகராகவே அடையாளப்படுத்திக் கொண்டனர்.

அவர்களது படங்களில் நிறைய ரஜினி காட்சிகள் இருக்கும். வான்மதி படத்தில் தன்னை ரஜினி ரசிகராகவே காட்டி இருப்பார் அஜித்.

பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்ப்பா.. நீ மனசு வச்ச நானும் ஹீரோன்தாப்பா” என ரஜினி பட போஸ்டரை பார்த்து பாடுவதாக காட்சிகள் இருக்கும்.

அதுபோல விஜய்யின் பல படங்கள் ரஜினி ரெஃபரன்ஸ் காட்சிகள் இருக்கும். இவன் பார்த்த சின்ன ரஜினிடா என்ற பாடல் வரிகள் கூட இருந்தன.

இந்த நிலையில் தான் ரஜினியின் ‘சந்திரமுகி’ திரைப்படம் திரைக்கு வந்த அதே நாளில் தன்னுடைய ‘சச்சின்’ படத்தை ரிலீஸ் செய்து மோதினார் விஜய்.

அதுபோல ரஜினியின் ‘பேட்ட’ படம் வெளியான நாளில் தன்னுடைய ‘விஸ்வாசம்’ படத்தை ரிலீஸ் செய்து மோத செய்தார் அஜித்.

தங்களை ரஜினி ரசிகராக அடையாளம் காட்டிக் கொண்ட விஜய் அஜித் மத்தியில் சிவகார்த்திகேயன் தன் தலைவர் ரஜினியுடனான மோதலை தவிர்த்தது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.

Sivakarthikeyan to avoid clash with Rajinikanth

உண்மையை தழுவிய ‘கூடு’.; நட்சத்திரங்கள் இல்லாமல் முட்டைகளுடன் பர்ஸ்ட் லுக்

உண்மையை தழுவிய ‘கூடு’.; நட்சத்திரங்கள் இல்லாமல் முட்டைகளுடன் பர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் மக்களின் ஆதரவு உண்டு. அந்த வகையில் ஸ்கைமூண் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘கூடு’ என்ற பெயரில் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது.

இதன் டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

உண்மை சம்பவத்தை தழுவி தயாராகும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் இயக்குகிறார்.

இந்தத் திரைப்படத்தை M கணேஷ் மற்றும் கண்ணன் P ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் நட்சத்திரங்களின் முகங்கள் எதுவுமின்றி ‘கூடு’ என்ற டைட்டில் மட்டும் வித்தியாசமாக இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Koodu movie first look poster goes viral

‘சொப்பன சுந்தரி’-யை இனிமே கனவுல பார்க்காதீங்க.; ஓடிடி-யில பாருங்க..

‘சொப்பன சுந்தரி’-யை இனிமே கனவுல பார்க்காதீங்க.; ஓடிடி-யில பாருங்க..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா சந்திரமௌலி, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், சதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு அஜ்மல் தஹ்சீன் மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளனர்.

‘சொப்பன சுந்தரி’ படம் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

இப்படம் மக்களிடம் சராசரியான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், ‘சொப்பன சுந்தரி’ திரைப்படம் மே 12ம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

‘soppana sundari’ released on disney plus hotstar

JUST IN ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ.? ‘கஸ்டடி’ பிரஸ்மீட்டில் கஷ்டப்படுத்திய பவுன்சர்ஸ்

JUST IN ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ.? ‘கஸ்டடி’ பிரஸ்மீட்டில் கஷ்டப்படுத்திய பவுன்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இது அவரது இயக்கத்தில் உருவாகும் 11 வது படமாகும்.

இதில் நாகசைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ளனர்.

முக்கிய வேடங்களில் அரவிந்த்சாமி பிரேம்ஜி நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர்

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படக்குழுவினர் இன்று மே 5ம் தேதி மாலை செய்தியாளர்களை சென்னையில் உள்ள பிரசாத் லேபில் சந்தித்தனர்.

இது பொது விழாவோ.. அல்லது ரசிகர்கள் கூடும் இடமோ அல்ல.. முழுக்க முழுக்க செய்தியாளர்கள் கலந்துக் கொள்ளும் இடமாகும். அப்படி இருக்கையில் 10க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வருகை தந்திருந்தனர்.

அவர்கள் செய்தியாளர்களை நாகசைதன்யா மற்றும் கீர்த்தியிடம் நெருங்க விடாமல் தள்ளிக் கொண்டே வந்தனர்.

பிரஸ்மீட்டில் எதற்கு பவுன்சர்ஸ்.? என்ற கேள்வி அனைவரிடம் இருந்தது. மேலும் கூட்டமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துற? என்ற சிரிப்பலையும் எழுந்தது.

பத்திரிக்கையாளர்களை சந்திக்க வரும் நட்சத்திரங்கள் எதற்கு பவுன்சர்களை அழைத்து வருகிறார்கள்.? ரசிகர்கள் கூடினால் பிரச்சனை ஏற்படும்.. தள்ளுமுள்ளு ஏற்படும் என கருதலாம். ஆனால் பிரஸ்மீட்டில் எதற்கு பவுன்சர்?

இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் இதை சரி செய்வார்களா என்பதை காத்திருந்து பார்ப்போம்.!

Bouncers atrocity at custody press meet

More Articles
Follows