பரபரப்பான ‘பர்ஹானா’-வை தியேட்டரில் பார்க்கலையா.? அப்போ ஓடிடி-யில பாருங்க.!

பரபரப்பான ‘பர்ஹானா’-வை தியேட்டரில் பார்க்கலையா.? அப்போ ஓடிடி-யில பாருங்க.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மான்ஸ்டர்’, ‘ஒரு நாள் கூத்து’ போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் ‘ஃபர்ஹானா’.

இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, கிட்டி, அனுமோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

கோகுல் பெனாய் ஒளிப்பதிவு மற்றும் VJ சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ஃபர்ஹானா என்ற முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான ‘ஃபர்ஹானா’ திரைப்படம் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘ஃபர்ஹானா’ திரைப்படம் வருகிற ஜூலை 7-ஆம் தேதி முதல் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மேலும், இதனை சோனி லைவ் வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

பர்ஹானா

farhana movie ott release date announcement

50 வயதில் கர்ப்பிணியான நடிகை ரேகா..!? பரபரப்பு போஸ்டர்; ரசிகர்கள் அதிர்ச்சி

50 வயதில் கர்ப்பிணியான நடிகை ரேகா..!? பரபரப்பு போஸ்டர்; ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மிரியம் மா’.

இப்படத்தில் மூத்த நடிகை ரேகா கதையின் நாயகியாக நடிக்கிறார்.

மிரியம் மா

இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஏ.ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சாய் புரொடக்ஷன் எனும் பட நிறுவனம் தயாரித்துள்ளது.

மிரியம் மா

பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குனரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.

இந்நிலையில் ‘மிரியம் மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

‘மிரியம்மா’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ரேகா கர்ப்பிணியாக இடம்பெற்றுள்ள தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மிரியம் மா

இப்படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”பெண்ணாகப் பிறந்து ஒவ்வொருவரும் பூப்பெய்திய பிறகு தாய்மை அடைய வேண்டும் என விரும்புவர். அவர்களின் வாழ்க்கைக்கு பற்றுக்கோடான இவ்விசயத்தில், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்மணி ஒருவர் தாய்மை அடைய விரும்புகிறார். செயற்கை முறை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அவர் சந்திக்கும் சவால்கள் தான் படத்தின் கதை,” என்று கூறினார். வித்தியாசமான திரைக்கதையுடன் கூடிய இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மிரியம் மா

actress rekha’s miriam maa movie first look released

‘சூப்பர் சிங்கர்’ அஜீஸ் இசையில் இணையும் கலையரசன் – விதார்த்

‘சூப்பர் சிங்கர்’ அஜீஸ் இசையில் இணையும் கலையரசன் – விதார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Trending entertainment & White horse studios K. சசிகுமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது.

ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி உலகில் பல அற்புதமான திரைக்கதைகள் உருவாகியுள்ளன.

அந்த வகையில் ஒரு கொலையில் தொடர்புடைய நான்கு பேரின் சூழலை ஹைபர்லிங்க்காக இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படத்தில், தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா ஆகியோர் நடிக்கின்றனர்.

வித்தியாசமான திரைக்கதையில், மாறுபட்ட அனுபவம் தரும் இப்படத்தை, இயக்குநர்கள் P.வாசு, தங்கர் பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சகோ கணேசன் இயக்குகிறார்.

கோடியில் ஒருவன், குரங்கு பொம்மை படப்புகழ் ஒளிப்பதிவாளர் NS. உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அசுரன், விடுதலை படப்புகழ் V.ராமர் இப்படத்தின் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்.

நாய் சேகர், விலங்கு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

யானை, சினம் படப்புகழ் கலை இயக்குநர் மைக்கேல் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்கிறார். இப்டத்தை Trending entertainment & White horse studios நிறுவனங்கள் தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கலையரசன் - விதார்த்

A new fangled Hyperlink Crime Thriller Movie

எந்தவொரு தமிழ் இயக்குநருக்கும் கிடைக்காத கௌரவம்.; மாஸ் காட்டும் மாரி செல்வராஜ்

எந்தவொரு தமிழ் இயக்குநருக்கும் கிடைக்காத கௌரவம்.; மாஸ் காட்டும் மாரி செல்வராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் இதுவே என் கடைசி படம் என அறிவித்த உதயநிதியின் ‘மாமன்னன்’ படம் இன்று ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

உதயநிதி தயாரித்து இருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் மாரி செல்வராஜ் அமைத்த கூட்டணி தான். ஏ ஆர் ரகுமான் இசையில் பகத் ஃபாஸில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் இந்த படத்தில் இணைந்திருந்தனர்.

இதற்கு முன் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘கர்ணன்’ ஆகிய இரு படங்களும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

முக்கியமாக இவரது படத்தில் பேசப்படும் ஜாதி அரசியலும் சமூக நீதியும் பட்டியல் இனத்தவர் மத்தியில் பெரும் எழுச்சியை உருவாக்கியது.. இதனால் மாரி செல்வராஜுக்கும் தனி ரசிகர் வட்டம் உருவானது.

இந்த நிலையில் இன்று ‘மாமன்னன்’ ரிலீஸை முன்னிட்டு நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கில் உதயநிதிக்கு நிகராக மாரி செல்வராஜுக்கும் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்களுக்கு ரசிகர்கள் கட் அவுட் வைப்பதை பார்த்திருக்கிறோம்.

தற்போது தான் முதன்முறையாக ஒரு படத்தின் இயக்குனருக்கு கட் அவுட் வைக்கப்பட்டிருப்பது திரையுலகினர் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

மாரி செல்வராஜ்

Mari Selvaraj fans made huge cut out for Maamannan release

ஹரீஸ் கல்யாண் பிறந்த நாளுக்கு வாழ்த்திய LGM – Diesel – Parking Team

ஹரீஸ் கல்யாண் பிறந்த நாளுக்கு வாழ்த்திய LGM – Diesel – Parking Team

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு ‘பியார் பிரேமா காதல்’, ‘தாராள பிரபு’ போன்ற பல படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண்.

இவர் தற்போது ‘டீசல்’ படத்தில் நடித்து வருகிறார்.

“டீசல்” திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி வருகிறார்.

திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இப்படத்தை ‘எஸ்.பி சினிமாஸ் எண்டெர்டைன்மெண்ட்’ தயாரிக்கிறது.

இப்படத்தில் கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க, வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று (29-06-2023) பிறந்தநாள் கொண்டாடி வரும் ஹரிஷ் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்து ‘டீசல்’ படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், ஹரிஷ் கல்யாண் தற்போது லெட்ஸ் கெட் மேரீட், நூறு கோடி வானவில், லப்பர் பந்து, பார்க்கிங் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

மேற்கண்ட அனைத்து படங்களும் ஹரிஷ் கல்யாணை வாழ்த்தி போஸ்டர்கள் வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LGM Diesel Parking Team said birthday wishes Harish Kalyan

உலகில் எந்த ஹீரோவும் செய்யாததை செய்த ‘மாமன்னன்’.; உதயநிதியின் உயர்ந்த உள்ளம்

உலகில் எந்த ஹீரோவும் செய்யாததை செய்த ‘மாமன்னன்’.; உதயநிதியின் உயர்ந்த உள்ளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதில் உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வெளிய ஆவதற்கு முன்பே சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

மேலும் இந்த படம் வெளியானால் ஜாதி ரீதியான மோதல்கள் வெடிக்கும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இந்த வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.

இந்த நிலையில் இன்று ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ‘மாமன்னன்’.

இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் எந்த நடிகரும் செய்யாத ஒன்றை முதன் முறையாக செய்து காட்டி இருக்கிறார் உதயநிதி.

பொதுவாக ஒரு படத்தின் டைட்டிலை போட்ட பிறகு நாயகன் பெயர்.. நாயகி பெயர்.. முக்கிய நட்சத்திரங்கள் பெயர்கள் டைட்டில் காடுகளில் ஒவ்வொன்றாக வரும்.

இந்த படத்தில் உதயநிதி நாயகனாக நடித்திருந்தாலும் முதலில் வடிவேலு பெயர்.. பின்னர் பகத் பாசில்.. அதன் பின்னர் நாயகி கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரின் பெயர்களை திரையிட்ட பிறகே உதயநிதியின் பெயர் டைட்டில் கார்டில் வந்தது.

ஒரு அறிமுக நடிகரின் புதிய படம் என்றாலும் அதில் பல சீனியர் நடிகர்கள் நடித்திருந்தாலும் நாயகனின் பெயர் தான் முதலில் திரையிடப்படும்.

இந்த நிலையில் உதயநிதி இதுவரை 15 படங்களில் நாயகனாக நடித்திருந்தும் கூட தன்னுடைய பெயரை முதலில் திரையிடாமல் சீனியர்களுக்கு உதயநிதி கொடுத்த மரியாதை பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

இது உதயநிதியின் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Udhayanidhi made title card magic in Maamannan

கூடுதல் தகவல்..

மாரி செல்வராஜ் இந்த டைட்டில் கார்டு விஷயத்தை மறுத்த போதும் அதில் உறுதியாக இருந்து உதயநிதி ஸ்டாலின் தான் இதை செய்ய சொன்னார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி அரசியலில் முழு நேரமாக ஈடுபட உதயநிதி முடிவு செய்திருப்பதால் தற்போதைக்கு இதுதான் அவரது கடைசி படம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More Articles
Follows