ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால்

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் இயக்கத்தில் மோகன்லால்

Mohan lal and Peter heinதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்.

தமிழில் காக்க காக்க, அந்நியன், சிவாஜி, எந்திரன், 7ஆம் அறிவு, மகாதீரா, பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

அண்மையில் மோகன்லால் நடித்து வெளியான புலி முருகன் படத்திற்காக சண்டை பயிற்சிக்கான தேசிய விருதை பெற்றார் இவர்.

இந்நிலையில் முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஒரு படத்தை இயக்க போகிறாராம்.

இதில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம்.

விஜய்யை கடவுளாக்கி மாலை போட்டு விரதமிருக்கும் ரசிகர்கள் (வீடியோ)

விஜய்யை கடவுளாக்கி மாலை போட்டு விரதமிருக்கும் ரசிகர்கள் (வீடியோ)

Tamilnadu Vijay fans praying Vijay as Godஇந்திய சினிமாவுக்கு எப்படியான ரசிகர்கள் இருந்தாலும், அவர்களை எல்லாம் மிஞ்சிவிடுவார்கள் நம் தமிழக சினிமா ரசிகர்கள்.

நடிகர், நடிகைகளை கடவுளாக பாவித்து, அவர்களுக்கு கோயிலும் கட்டிய ரசிகர்கள் இங்கே உண்டு.

மறைந்த நடிகர்கள், வாழும் நடிகர்கள் ஆகியோரின் போட்டோக்களை வைத்து வணங்கும் வெறியான ரசிகர்கள் இன்றும் உண்டு.

இந்நிலையில் நடிகர் விஜய்யை கடவுளாக்கி அவரது சிலையை வணங்கி, மாலை போட்டு விரதமிருக்கிறார்கள் இளைய தளபதியின் ரசிகர்கள்.

மேலும் தீபாராதனை காட்டி, தளபதியே, விஜய்யே… கடவுளே… அன்பே… அழகே, அமுதே என போற்றி பாடிவருகின்றனர்.

இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Tamilnadu Vijay Fans Praying Vijay as God

அட நீங்களே பாருங்களேன்…

https://www.youtube.com/watch?v=W-ETzEb_6nk

ரஜினி-கமலை பார்த்தாச்சும் விஜய்-அஜித் செய்வார்களா?

ரஜினி-கமலை பார்த்தாச்சும் விஜய்-அஜித் செய்வார்களா?

raiini kamal ajith vijay karthiஅண்மைகாலமாக ரஜினி அந்த படத்தை பார்த்தார். இந்த படத்தை பாராட்டினார்.

கமல் இந்த பட டீசரை வெளியிட்டார். அந்தப் பட விழாவில் கலந்து கொண்டார் என்ற செய்திகளை அடிக்கடி பார்த்து இருப்போம்.

இது புதியவர்களையும் திறமையானவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு அவர்கள் இதை நல்ல மனதுடன் செய்கின்றனர்.

இதனால் பெயரே தெரியாத படங்களுக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்துவிடுகிறது.

இதனால் ரிலீஸின் போது அந்த படங்களின் வியாபாரமும் பெருகிறது.

ஆனால் ரஜினி-கமலை அடுத்து முன்னணி நடிகர்களாக உள்ள விஜய், அஜித் இருவரும் இதுபோன்ற விஷயங்களில் ஈடுப்படுவதில்லை.

ரஜினி-கமலை பார்த்த பிறகாவது, விஜய்-அஜித் செய்வார்களா? என்பதே சிறு தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் அஜித் தன் பட பூஜை, பாடல் வெளியீட்டு விழா மற்றும் விளம்பர நிகழ்ச்சிக்கே வராதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Will Ajith Vijay follows Rajini Kamal way to support low budget movies

விஐபி 2 பட ரிலீஸ் தேதி குறித்த தனுஷின் அறிவிப்பு

விஐபி 2 பட ரிலீஸ் தேதி குறித்த தனுஷின் அறிவிப்பு

Dhanush Soundarya Rajini combo VIP2 release date will be release date will be announced todayதனுஷ் தயாரித்து நடித்த வேலையில்லா பட்டதாரி படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

இதன் முதல் பாகத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார்.

தற்போது இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

தனுஷ் மற்றும் கலைப்புலி தாணு இணைந்து தயாரித்துள்ளனர்.

இதில் அமலாபால் மற்றும் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இதன் சூட்டிங் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை இன்னும் சில மணி நேரங்களில் இன்று வெளியிடவுள்ளதாக தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Dhanush Soundarya Rajini combo VIP2 release date will be release date will be announced today

Dhanush‏Verified account @dhanushkraja
#vip2 release date will be announced shortly today. Super excited. #raghuvaranisback @soundaryaarajni @KajolAtUN @theVcreations

ஏஆர். ரஹ்மானின் இசையில் இன்றுமுதல் சச்சின் ஆன்த்தம்

ஏஆர். ரஹ்மானின் இசையில் இன்றுமுதல் சச்சின் ஆன்த்தம்

AR Rahman and Sachinகிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சினின் வாழ்க்கை வரலாறை ‘சச்சின்: தி பில்லியன் ட்ரீம்ஸ் என்ற திரைப்படமாக இயக்கியுள்ளார் ஜேம்ஸ் எர்ஸ்கின்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகியது.

ரஜினி இதற்கு பாராட்டு தெரிவித்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சச்சின் ஆந்த்தம்’ (Sachin Anthem) என்ற பாடலை இன்று சச்சின் மற்றும் ரஹ்மான் இணைந்து வெளியிடவுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், அர்ஜூன் டெண்டுல்கர் உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை ‘200 நாட்-அவுட் புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

‘கட்டப்பா’வின் அடுத்த சஸ்பென்ஸை உடைத்தார் குஷ்பூ

‘கட்டப்பா’வின் அடுத்த சஸ்பென்ஸை உடைத்தார் குஷ்பூ

Kattappa sathyarajகடந்த ஒரு வருடமாக பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார்..? என்ற கேள்விக்கு விடைத் தெரியாமல் ரசிகர்கள் காத்திருந்தனர்.

அதற்கான விடை கடந்த கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி கிடைத்தது.

இப்படத்தில் பாகுபலி கேரக்டருக்கு கிடைத்த அளவு வரவேற்பு கட்டப்பாவுக்கும் கிடைத்தது.

இந்நிலையில் கட்டப்பா குறித்து நடிகை குஷ்பூ கூறியதாவது…
“கட்டப்பா கேரக்டரில் சத்யராஜை தவிர மற்றொரு நடித்திருந்தால் இந்தளவு ஹிட் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை உள்வாங்கி கேரக்டராகவே மாறிவிடுவார் சத்யராஜ்.

‘பெரியார்’ படத்தில் நடித்தற்கு அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என நினைத்தேன்.

ஆனால் அப்போது கிடைக்காத விருது, இம்முறை கட்டப்பா கேரக்டருக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.

மேலும் அவரைப் பற்றி ஒரு ரகசியத்தை இப்போது சொல்கிறேன். சத்யராஜூக்கு ஜோடியாக அதிக படங்களில் நடித்த ஒரே நாயகி நான்தான்’ என்று தெரிவித்துள்ளார்.

ரிக்சா மாமா’, ‘பெரியார்’, ‘மலபார் போலீஸ்’, ‘நடிகன், ‘புரட்சிக்காரன்’, வீரநடை’, ‘உன்னை கண் தேடுதே’, ‘பிரம்மா’, ‘கல்யாண கலாட்டா’, ‘வெற்றிவேல் சக்திவேல்’, ‘சுயம்வரம் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows