‘ஜெயிலர்’ பட வசூலில் பங்கு.; ரஜினியிடம் நேரில் கொடுத்த கலாநிதி மாறன்

‘ஜெயிலர்’ பட வசூலில் பங்கு.; ரஜினியிடம் நேரில் கொடுத்த கலாநிதி மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

இந்த படம் வெளியான முதல் நாளே வசூலில் ரூ 90 கோடியை நெருங்கியது.

தற்போது படம் வெளியாகி 3 வாரங்களை கடந்துள்ளது. இன்றும் பல திரையரங்குகளில் ஜெயிலர் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினியின் ஸ்டைல்.. மோகன்லால் மற்றும் சிவராஜ் குமாரின் மாஸ் ஆக்சன் காட்சிகள்… தமன்னா போட்ட காவலா ஆட்டம்.. விநாயகனின் வில்லத்தனம்.. யோகி பாபுவின் காமெடி என பல்வேறு அம்சங்கள் இந்த படத்தில் நிறைந்திருந்ததால் படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.

மேலும் அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசை நெல்சனின் அருமையான திரைக்கதை ஆகியவையும் இந்த படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்தன.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதிமாறன் JAILER பட வசூலில் ஒரு பங்கை ரஜினிக்கு செக்காக கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த தொகை எவ்வளவு? என்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Kalanithimaran met Rajini and handed over a cheque celebrating historic success of Jailer

சிவராஜ்குமார் உடன் ஒன்று.. மம்மூட்டியுடன் ஒன்று.; பிசியான ஜெயராம்

சிவராஜ்குமார் உடன் ஒன்று.. மம்மூட்டியுடன் ஒன்று.; பிசியான ஜெயராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் மலையாள நடிகர் ஜெயராம்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய படங்களில் ஜெயராமின் நடிப்பு பெரிய அளவில் கவனம் பெற்றது.

தற்போது கன்னட பட உலகிலும் நுழைந்துள்ளார் ஜெயராம்.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் மாஸ் காட்டிய சிவராஜ்குமார் நடித்து வரும் ‘கோஸ்ட்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ஜெயராம்.

மேலும் மலையாளத்தில் ‘ஆப்ரஹாம் ஒஸ்லர்’ என்கிற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார் ஜெயராம்.

இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்தன.

அதன்படி ஒரு புகைப்படத்தில் ‘ஆப்ரஹாம் ஒஸ்லர்’ பட சூட்டிங் கில் மம்முட்டி கலந்து கொண்ட படங்கள் வெளியாகி உள்ளது.

‘அஞ்சாம் பாதிரா’ பட இயக்குநர் மிதுன் மானுவேல் தாமஸ் தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக ஜெயராம் இந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Jayaram acting with Sivarajkumar and Mammotty

JAILER HD PRINT LEAK – மக்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை

JAILER HD PRINT LEAK – மக்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதுவரை உலக அளவில் இப்படம் ரூ.550 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், படம் ஹெச்டி(HD) தரத்தில் இணையத்தில் கசிந்துள்ளது.

இது படக்குழுவினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திரையரங்க உரிமையாளர்கள் பலரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் ஹெச்டி லிங்க்கை (HD Link) யாரும் பகிரவேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Rajini’s ‘Jailer’ movie HD print leaked online

கார்த்தி – கீர்த்தி இணையும் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பு.?

கார்த்தி – கீர்த்தி இணையும் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜப்பான்’.

இப்படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.

இதையடுத்து கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வருகிறது.

கார்த்தியின் 26-வது படமான இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது.

இதில் எம்.ஜி.ஆரின் ரசிகராக கார்த்தி நடிப்பதாக கூறப்படுகிறது.

எனவே படத்துக்கு எம்.ஜி.ஆரை தொடர்புபடுத்திய தலைப்பு வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என்ற பெயரை வைக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வலைத்தளத்தில் கசிந்துள்ளது.

இந்த பெயரை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும், இதுதான் படத்தின் பெயரா? என்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.

Karthi – Kriti Shetty film Karthi26 to have a MGR movie title

நாகர்ஜுனா பிறந்தநாளில் ‘தனுஷ் 51’ பட அப்டேட் கொடுத்த படக்குழு

நாகர்ஜுனா பிறந்தநாளில் ‘தனுஷ் 51’ பட அப்டேட் கொடுத்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் முடித்துவிட்டார்.

இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தை அடுத்து, தனது 50 படத்தை தனுஷ் இயக்கி நடிக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார் . தலைப்பிடப்படாத இப்படம் ‘D 51’ என அழைக்கப்படுகிறது.

இந்தப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் தனுஷூடன் இணைந்து நாகர்ஜூனா நடிக்கிறார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாகர்ஜூனாவின் பிறந்த நாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷ் 51

Actor nagarjuna going to act with dhanush in d51 movie

எங்களைப் பாதுகாத்த காஷ்மீருக்கு நன்றி.; கமல் – சிவகார்த்திகேயன் பட இயக்குநர் பதிவு

எங்களைப் பாதுகாத்த காஷ்மீருக்கு நன்றி.; கமல் – சிவகார்த்திகேயன் பட இயக்குநர் பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்துக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் .

இப்படத்திற்கு ‘எஸ்கே21’ என்று அழைக்கப்படும்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.

சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 75 நாட்களாக ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தற்போது ‘எஸ்கே21’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ‘மீண்டும் சந்திப்போம், காஷ்மீர்! எங்களை பாதுகாத்ததற்கு நன்றி. இந்த 75 நாட்கள் படப்பிடிப்பும் கனவு போல இருக்கிறது. படக்குழு அயராத உழைப்பும், காஷ்மீர் காவல்துறை, கமல்ஹாசன், எங்கள் ஹீரோ சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் ஆகியோரது ஆதரவும்தான் இதனை சாத்தியமாக்கியுள்ளது” என்று
கூறியுள்ளார்.

எஸ்கே21

Sivakarthikeyan’s sk21 movie 75 days kashmir schedule shoot wrapped

More Articles
Follows