தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
(இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார் ரஜினிகாந்த்.)
ரஜினியின் ஸ்டைல்.. சூப்பர் ஹிட் பாடல்கள்.. நெல்சனின் பிளாக் காமெடி.. மோகன்லால் மற்றும் சிவராஜ் குமாரின் ஆக்ஷன்.. வில்லன் விநாயகனின் வெறித்தனமான நடிப்பு என அனைத்தையும் கலந்து இந்த படத்தை ரசிகர்களுக்கு படக்குழு வழங்கியிருந்தனர்.
இந்த படத்திற்கு பெரிய பிரமோஷன் இல்லை.. ரிலீஸ் நாளில் விடுமுறை இல்லை.. பண்டிகை தினம் இல்லை ஆனாலும் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது ‘ஜெயிலர்’.
வார நாட்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
உலகளவில் இதுவரை ரூ. 525 கோடியை ‘ஜெயிலர்’ வசூல் செய்துள்ளது என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ரஜினிகாந்த் ரெக்கார்ட் மேக்கர் எனவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் சென்னையில் ஜெய்லர் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய இயக்குனர் நெல்சன்.. “ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துவிட்டு திரும்பி உடன் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 25ஆம் தேதி *தலைவர் நிரந்தரம் ஜெயிலர்..* என்ற டிசைன் செய்யப்பட்ட கேக்கை ரஜினிகாந்த் வெட்டினார். இவருடன் நெல்சன் அனிருத் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jailer success celebrated by Rajini Nelson and Anirudh