கேரளாவில் நுழையும் லைக்கா.; மோகன்லாலின் ‘லூசிபர் 2’ படத்தை தயாரிக்கிறது

கேரளாவில் நுழையும் லைக்கா.; மோகன்லாலின் ‘லூசிபர் 2’ படத்தை தயாரிக்கிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் பொருட் செலவில் ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் ஆகியோர் இணைந்து ‘எம்புரான்’ எனும் பெயரில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் நடிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிபர்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் அடுத்த பாகம் குறித்த எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் இருந்தது.

இந்நிலையில் இந்திய திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம்- மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் ‘ எம்புரான் ‘ எனும் புதிய திரைப்படத்தை மலையாள திரையுலகின் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. ‘எம்புரான்’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜி.கே.எம் தமிழ் குமரன் லைக்காவின் தலைமை பொறுப்பு வகிக்க இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார்.
சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள்.

இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.

ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் – லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் – மோகன் லால் ‌- பிருத்விராஜ் என முன்னணி திரை ஆளுமைகளின் கூட்டணியில் தயாராகும் ‘எம்புரான்’ திரைப்படத்திற்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Lyca Productions steps into Mollywood with a blockbuster franchise

‘லால் சலாம்’ ரிலீஸ்.; பாட்ஷா பாய் இடத்தை பிடிப்பாரா மொய்தின் பாய்.?

‘லால் சலாம்’ ரிலீஸ்.; பாட்ஷா பாய் இடத்தை பிடிப்பாரா மொய்தின் பாய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், அவர் மீண்டும் மீண்டும் பிரமாண்டம் மற்றும் தரமான படங்களைத் தயாரித்துள்ளார்.

அவர்களின் சமீபத்திய வெளியீடுகளின் தொடர்ச்சியான வெற்றியைத் தொடர்ந்து, லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு ‘லால் சலாம்’ திரைப்படம் தயாராகி வருகிறது.

‘லால் சலாம்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இயக்குனர் பொறுப்பேற்றுகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’..

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இருந்து ‘மொய்தீன் பாய்’அவரது கேரக்டர் போஸ்டர் பார்வையாளர்களிடமிருந்து வரவேற்பைப் பெற்றது மற்றும் ஊடகங்களில் மிகவும் சலசலப்பை உருவாக்கியது.

படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவின் பிரபாகர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு படத்தின் படப்பிடிப்பு துவங்கி திருவண்ணாமலையில் முதல் ஷெட்யூலை முடித்தது.

தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது பகுதிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார்.

ஜி.கே.எம். லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் தமிழ் குமரன் மற்றும் குழு தற்போது லால் சலாம் படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் நடிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான லால் சலாம்
திரைப்படம் 2024 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

கூடுதல் தகவல்…

ரஜினிகாந்த் பல படங்களில் ஹிந்துவாக நடித்திருந்தாலும் அவர் ஏற்று நடித்த இஸ்லாமிய கேரக்டர் பாட்ஷா பாய் என்பது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

1995 ஆம் ஆண்டில் பொங்கல் சமயத்தில் வெளியான படம் தான் ‘பாட்ஷா’ தற்போது கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு மொய்தீன் பாய் பொங்கலுக்கு வருகிறார்.

எனவே அவர் பாட்ஷா பாய் இடத்தைப் பிடிப்பார்ரா?என்பதை பார்ப்போம்..

Lal Salaam movie set to release Pongal 2024

பிரபாஸ் நடிக்கும் ‘கண்ணப்பா’ படத்தில் இணைந்த ‘ஜெயிலர்’ நடிகர்

பிரபாஸ் நடிக்கும் ‘கண்ணப்பா’ படத்தில் இணைந்த ‘ஜெயிலர்’ நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’கண்ணப்பா’ படத்தில் இணைந்த மேலும் ஒரு முன்னணி நடிகர்! – மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய தகவல், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்த ‘கண்ணப்பா’.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவு திரைப்படமான ‘கண்ணப்பா’ மிகப்பெரிய பொருட்ச் செலவில் மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாக உள்ளது.

இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் இந்திய அளவில் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பான் இந்தியா ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிக்கும் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.

மேலும், படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்து நாட்டில் நடைபெற இருப்பதாகவும், அதற்காக விஷ்ணு மஞ்சு தனது குழுவினருடன் நியூசிலாந்து நாட்டில் முகாமிட்டுள்ள தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்ககு அதிகரிக்க செய்தது.

இந்த நிலையில், படத்தின் புதிய தகவல் ஒன்றால் ரசிகர்களை பரபரப்பின் உச்சத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது ‘கண்ணப்பா’ திரைப்படம். ஆம், இந்திய சினிமாவில் ’தி கம்ப்ளீட் ஆக்டர்’ என்று அழைக்கப்படும் நடிகர் மோகன்லால் இப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சமீபத்தில் ரஜினியுடன் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்து நடித்திருந்தார் மோகன்லால் என்பது குறிப்பிடத்தக்கது

எதிர்பார்க்காத இந்த தகவலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டதை தொடர்ந்து ‘கண்ணப்பா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பும், ஆர்வமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஸ்டார் ப்ளஷ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரை இயக்கி பாராட்டு பெற்ற இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கும் இப்படம், இந்திய சினிமா வரலாற்றில் நிலைத்து நிற்கும் ஒரு தலைசிறந்த திரை படைப்பாக உருவாகும் என்ற எதிரபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணி சர்மா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸி இரைட்டையர்கள் இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.

ஒலி, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய படமாக உருவாக உள்ள ‘கண்ணப்பா’ சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் மிக பிரமாண்டமான திரைப்படமாக உருவாக இருப்பதோடு, மக்கள் மனதில் நீங்கா இருக்கும் மிகப்பெரிய காவியமாகவும் உருவாகிறது.

Mohanlal and Prabhas starrer Kannappa

சத்யராஜ் நடித்த ‘வெப்பன்’ பட ஷூட்டிங் டப்பிங் ட்ரைலர் அப்டேட்

சத்யராஜ் நடித்த ‘வெப்பன்’ பட ஷூட்டிங் டப்பிங் ட்ரைலர் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் தயாரிப்பில், குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ‘வெப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

மறக்க முடியாத மற்றும் சிறந்த அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் கொடுக்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெப்பன்

இவர்கள் தவிர, நடிகர்கள் யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையத் சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலு பிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரீம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

விரைவில் படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதி இவற்றை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

வெப்பன்

*தொழில்நுட்பக் குழு:*

தயாரிப்பு: மில்லியன் ஸ்டுடியோ,
இயக்கம்: குகன் சென்னியப்பன்,
இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: பிரபு ராகவ்,
படத்தொகுப்பு: நாஷ்,
கலை: சுபேந்தர் பி.எல்.,
ஆக்‌ஷன்: சுதேஷ்,
ஆடை வடிவமைப்பாளர்கள்: லேகா மோகன்
ஒலி கலவை & வடிவமைப்பு: எம்.ஆர்.ராஜகிருஷ்ணன்,
கலரிஸ்ட்: ஸ்ரீ,
டிஐ லேப்: புரோமோ வொர்க்ஸ்,
விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர்: கோகுல்,
ஒப்பனை: மோகன்,
ஸ்டில்ஸ்: விஜய்,
விளம்பர வடிவமைப்பு: தினேஷ் அசோக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா,
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: காந்தன்,
நிர்வாக தயாரிப்பாளர்: ரிஸ்வான்.ஏ

வெப்பன்

Sathyaraj starrer Weapon shoot update

‘சந்திரமுகி 2’ படத்தை ரசித்து பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்

‘சந்திரமுகி 2’ படத்தை ரசித்து பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்து செப்டம்பர் 28ஆம் தேதியான நேற்று வெளியான திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இந்தத் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்தார்.

அத்துடன் இயக்குநர் பி. வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்தார். இதனால் படக் குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் தயாராகி உலகம் முழுவதும் 450 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ‘சந்திரமுகி 2’ வெளியானது.

இந்த திரைப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றிருக்கிறது.‌ படத்தைப் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாவதால் படத்தை பார்ப்பதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

இதற்காக அவர்கள் முன் பதிவு செய்து படத்தை ரசிக்க காத்திருக்கிறார்கள்.‌

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ரசிக்கும் வகையில் வடிவேலுவின் காமெடி, ராகவா லாரன்ஸின் நடிப்பு, சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கணா ரனாவத்தின் பேய் அவதாரம்… ஆகியவற்றால் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இப்படத்தில் ராகவா லாரன்ஸின் வேட்டையன் கதாபாத்திரத்திற்கும் ரசிகர்களிடம் பேராதரவு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த ‘சந்திரமுகி 2’ திரைப்படத்தை பிரத்யேகமாக பார்வையிட்டு, பட குழுவினரை உற்சாகப்படுத்தும் வகையில் வாழ்த்தும், ஆதரவும் தெரிவித்திருப்பது திரையுலகினத்தினரிடமும், ரசிகர்களிடமும் பெரும் பாராட்டை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக தற்போது இப்படத்தின் வசூல் அதிகரித்துள்ளது.

சந்திரமுகி 2

Rajinikanth praises Chandramukhi 2 movie

‘அரண்மனை 4’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.; பொங்கலுக்கு வெளியிடும் சுந்தர்.சி

‘அரண்மனை 4’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.; பொங்கலுக்கு வெளியிடும் சுந்தர்.சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகமெங்கும் குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது.

Benzz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. ரசிகர்களுக்காக மட்டுமே படம் என்பதில் உறுதியாக இருக்கும் சுந்தர் சி இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும் படி இருக்கும்.

அந்த வகையில் அவர் உருவாக்கிய அரண்மனை படம், தமிழில் பேய் படங்களைக் குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றிய படமாகும். முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திர கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.

முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். இயக்குநர் சுந்தர் சி. 2024 பொங்கல் அன்று வெளியாகவள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்பக்குழு..

தயாரிப்பு – Benz Media Pvt Ltd (A.C.S அருண்குமார்) and Avni Cinemax (P) Ltd (குஷ்பு சுந்தர்)
எழுத்து – இயக்கம் – சுந்தர் சி
வசனம் – வேங்கட் ராகவன்
இசை : ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவு – இசக்கி கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் – பொன்ராஜ்
சண்டைப்பயிற்சி – ராஜசேகர் K
ஸ்டில்ஸ் – V.ராஜன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Sundar C Aranmanai 4 first look released

More Articles
Follows