ஏஆர். ரஹ்மானின் வாழ்க்கை புத்தகம் ஆகஸ்ட்டில் ரிலீஸ்

ஏஆர். ரஹ்மானின் வாழ்க்கை புத்தகம் ஆகஸ்ட்டில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Penguin Random House to publish AR Rahmans biographyமணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஏஆர். ரஹ்மான்.

தற்போது 25 ஆண்டுகளை கடந்து விட்ட இவர் பாலிவுட் வரை சென்று இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் வென்றுள்ளார்.

மேலும் இசைத்துறை சாதனையாளர்களுக்கு அளிக்கப்படும் ‘கிராமி’ விருதினை இருமுறையும், ‘பாஃப்டா’ மற்றும் கோல்டன் குளோப் விருதை தலா ஒரு முறையும், ஸ்காட்லாந்தின் பாரம்பரியமிக்க இசைக்கல்வி மையமான ‘ராயல் கன்சர்வோடயர் ஆப் ஸ்காட்லாந்து’ வழங்கிய கவுரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட 6 கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

பென்குயின் பதிப்பகத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானின் அதிகாரப்பூர்வ அனுமதியுடன் கிருஷ்ணா திரிலோக் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகத்துக்கு ’நோட்ஸ் ஆப் எ டிரீம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

விளம்பரப் படத்துக்கு இசையமைத்தது முதல் ஆஸ்கர் விருது என்னும் மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரத்தை பெற்றதுவரை தனது இசையுலகப் பயணத்தில் ரஹ்மான் கடந்துவந்த பாதை மற்றும் அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் டேன்னி பாய்லே எழுதியுள்ள அணிந்துரையுடன் இந்த புத்தகத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட பென்குயின் பதிப்பகம் தீர்மானித்துள்ளது.

’இத்தனை ஆண்டுகளாக இசையின் மூலம் என்னை அறிந்திருக்கிறீர்கள். நான் யார்? எங்கே சென்று கொண்டிருக்கிறேன்? என்பதை நீங்கள் வாசிப்பீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்’ என தனது முன்னுரையில் ஏ.ஆர். ரஹ்மான் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Penguin Random House to publish AR Rahmans biography

என் சாவு கட்டிங் வாங்குற கபோதி கையில் இல்லை; டிராஃபிக் ராமசாமி ட்ரைலர் பன்ச்

என் சாவு கட்டிங் வாங்குற கபோதி கையில் இல்லை; டிராஃபிக் ராமசாமி ட்ரைலர் பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SA Chandrasekar hot punch in Traffic Ramasamy movie Trailerசமூக போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி `டிராஃபிக் ராமசாமி’ என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது.

இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருக்கிறார். அவரது மனைவி கதாபாத்திரத்தில் ரோகினி நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இதில், என் சாவு கட்டிங் வாங்குற கபோதி கையில் இல்லை, என் சாவு சொம்பு தூக்குற ஜால்ராங்க கையிலும் இல்லை. கடவுள் என் கூட இருக்கும் வரை எந்த பரதேசியும் என் உயிரை டச் பண்ண முடியாது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் வசனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

விக்கி இயக்கியுள்ள இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகருடன் பிரகாஷ்ராஜ், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ உள்ளிட்டோர் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர்.

SA Chandrasekar hot punch in Traffic Ramasamy movie Trailer

நெசவாளர்களுக்காக கதர் ஆடைகளையே உடுத்திய கடைக்குட்டி சிங்கங்கள்

நெசவாளர்களுக்காக கதர் ஆடைகளையே உடுத்திய கடைக்குட்டி சிங்கங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kadaikutty Singam team used Cotton cloths for their movieசூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “ கடைக்குட்டி சிங்கம் “ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஓரிரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.

நமது கிராமங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தாம்பூல தட்டுகளில் மாமன் சீர் எடுத்து வருவது வழக்கம். அனைவரும் பட்டு வேட்டி, சட்டை மற்றும் பெண்கள் பட்டு சேலை உடுத்தி மகிழ்ச்சியோடு ஊர் சுற்றி வருவார்கள்.

அதே போல் இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர் கார்த்தி, நாயகி சாயீஷா, ப்ரியா பவானி ஷங்கர், நடிகர்கள் சத்யராஜ், சூரி, விஜி, பானுப்ரியா, ஸ்ரீமன் , இயக்குநர் பாண்டிராஜ் மேலும் படத்தில் நடித்த 25க்கும் மேற்பட்ட நடிகர்கள் இணைந்து பூ, பழங்கள் மற்றும் “ கடைக்குட்டி சிங்கம் “ பாடல் சிடி அடங்கிய தாம்பூல தட்டுகளை எடுத்து வந்தார்கள்.

மதுரையிலிருந்து வந்திருந்த புகழ் பெற்ற நய்யாண்டி மேளகாரர்கள் மற்றும் தப்பாட்டகாரர்கள் முன்னால் அதனை இசைத்துக்கொண்டு வர படக்குழுவினர் பாரம்பரிய முறைப்படி 9 வகையான தாம்பூல தட்டோடு சத்யம் தியேட்டரை சுற்றி மேடைக்கு வருவதை பார்க்கும் போது அது கண்ணுக்கினிய அழகிய காட்சியாகவும், நமது ஊர் மற்றும் கிராமங்களில் நடக்கும் கலர்புல்லான கலாச்சார நிகழ்வு போல் சிறப்பாக இருந்தது. அதன் பிறகு நிகழ்ச்சி ஆரம்பமானது.

கடைக்குட்டி சிங்கம் படமானது அப்பா, அம்மா அக்கா, தங்கை, அத்தை, மாமா, முறைப்பெண்கள், சொந்த ஊர், விவசாயம், ஊர் திருவிழா, ஜல்லிக்கட்டு, சிலம்பம் என்று நமது பாரம்பரியம், வாழ்வியல் பற்றிய உன்னதமான படைப்பாக உருவாகியுள்ளது.

கடைக்குட்டி சிங்கம் போன்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், படத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய அனைவரும் இணைந்து நமது கலாச்சார முறைப்படி ஒரு விழா துவங்கம் மூன் தாம்பூலம் எடுத்துக்கொண்டு பெண்கள், ஆண்கள் என அனைவரும் இனைந்து தமிழ் சமூதாய முறைப்படி ஊர் சுற்றி வருவது போல் படக்குழுவினர் அனைவரும் மங்கள மேளதாளங்களுடன் தாம்பூலத்தில் படத்தின் இசை தட்டை எடுத்துக்கொண்டு தியேட்டரை சுற்றி வந்து மேடை ஏறி விழாவை துவக்கியது நமக்கு ஏதோ கோலாகலமான விழாவுக்கு நாம் வருகைதந்துள்ளது போல் இருந்தது.

தமிழர் கலாச்சாரம், பண்பு என அனைத்தையும் காக்க வேண்டிய நேரமிது. இந்த காலகட்டத்துக்கு கடைக்குட்டி சிங்கம் போல் ஒரு படம் தேவை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நமது சொந்த ஊரையும், உறவுகளையும் நியாபக படுத்தியது மட்டும் அல்லாமல்.

நமது ஊரில் வேட்டி, சட்டையில் ஆண்களும், பட்டு சேலையில் பெண்களும் ஒன்றாக சேர்ந்து குடும்பமாக இனைந்து சந்தோஷத்துடன் ஊரை வலம் வந்து, எதிரே காணும் ஊர்காரர்களை உறவு முறை சொல்லி நலம் விசாரித்து மகிழ்ச்சியுடன் செல்லும் அந்த நிகழ்வை ஞாபகபடுத்தியது என்பது தான் உண்மை.

அதே போல் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நாயகன் கார்த்தி கதர் வேட்டி, சட்டை அணிந்தே நடித்துள்ளார். அவரை போலவே படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் கதராடையே வழங்கப்பட்டுள்ளது.

நெசவாளர்களின் நலன் கருதி படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் நெசவாளர்கள் தயாரித்த கதராடை அவர்களிடம் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் கார்த்தி நெசவாளர்களின் நலன் கருதி தீரன் படத்திலிருந்தே கதராடைகளையே பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kadaikutty Singam team used Cotton cloths for their movie

kadai kutty singam audio event

தனுஷ்-ரஞ்சித்துக்கு காலா கற்றுக் கொடுத்த பாடம்; ரஜினி ரசிகர்கள் கருத்து

தனுஷ்-ரஞ்சித்துக்கு காலா கற்றுக் கொடுத்த பாடம்; ரஜினி ரசிகர்கள் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Dhanush and Director Ranjith must learn from Kaalaரஜினிகாந்த் நடித்த காலா படம் வெளியாகி இன்றோடு ஒரு வாரம் ஆகிவிட்டது.

படத்திற்கு முதல் நாளில் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தாலும், போக போக ரஞ்சித்தின் தாக்கமே அதிகமாக இருந்தது என புகார்கள் வந்தன.

தன் சமூகம் சார்ந்த கருத்துக்களை இயக்குனர் ரஞ்சித் அதிகபட்சமாக திணித்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

இதனால் காலாவின் வசூல் கபாலியை கூட தொடவில்லை என சொல்லப்படுகிறது.

ரஜினியின் படங்களே அவரது முந்தைய படங்களுக்கு சவாலாக அமையும். ஆனால் முதன்முறையாக இது தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இப்படத்தின் தமிழ்நாடு வசூல் 47 கோடி, ஆந்திரா, தெலுங்கானா 12 கோடி எனவும், கர்நாடகா 9 கோடி எனவும், கேரளா 5, வட இந்தியா 4 கோடி, அமெரிக்கா 11 கோடி, சில முக்கிய நாடுகள் 8 கோடி, இதர வெளிநாடுகள் 6 கோடி எனவும் தகவல்கள் வந்துள்ளன.

ஆக மொத்தம் இதுவரை ரூ. 100 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று ரம்ஜானை முன்னிட்டு கோலி சோடா 2 படம் வெளியாவதால் சில திரையரங்குகளில் காலா படம் திரையிடப்படவில்லை.

ரஜினி படங்கள் ரிலீஸ் ஆனால் அதற்கு அடுத்த வாரம் நிச்சயம் பெரிய படங்கள் வெளியாகாது. ஏனென்றால் ரஜினி படங்களே தொடர்ந்து திரையிடப்பட்டு கொண்டிருக்கும்.

ஆனால் இந்த முறை இதுவும் தவறாகிவிட்டது.

காலா பட இசை வெளியீட்டின் போது கபாலி படம் ரஞ்சித்தின் படம். காலா படம் என் படம் என ரஜினியே பேசினார்.

ரஞ்சித் படம் என்றபோதே அப்படம் வசூல் சாதனை புரிந்தது. அதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளரின் விளம்பர யுக்திதான்.

ஆனால் காலா விஷயத்தில் புரோமோசன் பணிகளில் தயாரிப்பாளர் தனுஷ் கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸ் தியேட்டரில் கபாலி பட பேனர் அப்பட ரிலீஸின் போது பல மாதங்களாக வைக்கப்பட்டது. (பார்க்க படம்)

ஆனால் காலா ரிலீசின் போது பெரிய பேனரை கூட தனுஷ் வைக்கவில்லை.

மேலும் விமானம், சாக்லேட், டிவி, ரேடியோ என அனைத்திலும் கபாலி மயம்தான்.

மேலும் கபாலி படத்திற்கு பிரஸ் மீட் வைக்கப்பட்டது. ஆனால் காலா விஷயத்தில் அதுவும் வைக்கவில்லை.

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படம் அப்பட தயாரிப்பாளருக்கு முதல் படம். அதற்கே ஒரு பெரிய பேனரை வைத்திருந்தார்.

தன் கருத்தை மட்டுமே திணிக்காமல் மாஸ் நடிகரை வைத்து படத்தை இயக்கும்போது அவரின் ரசிகர்களையும் மனதில் வைத்து படத்தை இயக்க வேண்டும் என ரஞ்சித் கற்றுக் கொள்ள வேண்டும் என ரஜினி ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

எந்த படத்திலும் ரஜினி இறப்பதாக காட்சிகள் இருக்காது. ஆனால் கபாலி, காலா என இரண்டிலும் ரஜினி இறக்கும் காட்சிகளை வைத்து க்ளைமாக்ஸில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டார் ரஞ்சித்.

காலா படத்தை பார்த்த அனைவருமே கபாலி படத்தை விட காலா நன்றாக இருப்பதாகவே கூறினார்கள்.

அப்படியிருக்கையில் காலாவிற்கு இன்னும் புரோமோசனை சரியாக செய்திருந்தால் காலாவும் இன்னும் வசூல் வேட்டையாடி இருக்கும்.

எனவே ஒரு தயாரிப்பாளராக தனுஷ் கலைப்புலி தாணுவிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ளவேண்டும் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆக, ரஜினி என்ற மந்திரத்தை ரஞ்சித்தும் தனுஷும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே பொதுவான கருத்தாக பார்க்கப்படுகிறது.

Producer Dhanush and Director Ranjith must learn from Kaala

kabali Satyam

என்கூட படுக்கலேன்னு சத்தியம் செய்ய முடியுமா.? நானிக்கு ஸ்ரீரெட்டி சவால்

என்கூட படுக்கலேன்னு சத்தியம் செய்ய முடியுமா.? நானிக்கு ஸ்ரீரெட்டி சவால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sri Reddy accused Nani of sexually abusing her and scuttling her chances of being a part of Bigg Boss Teluguவாய்ப்பு கேட்டு வரும் புதுமுகங்கள் சினிமா சான்ஸ்க்காக படுக்கையை தயாரிப்பாளர்களுடன் பகிர்ந்து வருவதாக பல காலமாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஒரு சிலர் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த போதிலும் சிலர் இதனை ஓபனாக ஒப்புக் கொள்கின்றனர்.

அண்மையில் பல தயாரிப்பாளர்கள் தன்னுடன் படுக்கையை பகிர்ந்துக் கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக பகிரங்க குற்றச்சாட்டுகளை அடிக்கினார் நடிகை ஸ்ரீரெட்டி.

இவர் வெளியிட்ட திரை பிரபலங்கள் பட்டியலில் நான் ஈ பட புகழ் நடிகர் நானியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், தெலுங்கு பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியை தற்போது நானி தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் பட்டியலில் நடிகை ஸ்ரீரெட்டியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

ஆனால், ஸ்ரீரெட்டி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் நான் தொகுத்து வழங்க மாட்டேன் என்று நானி கூறியதாகவும், அதனால் இப்போது ஸ்ரீரெட்டியை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் மீண்டும நானி – ஸ்ரீரெட்டி மோதல் மீண்டும் வலுவடைந்துள்ளது.

நானி என்னுடன் உடலுறவு கொண்டார். அவர் படுக்கையை பகிர்ந்து கொண்டது உண்மை.

அப்படி இல்லையென்றால் அவர் தனது குடும்பத்தின் மீதும், சினிமா தொழில் மீதும் சத்தியம் செய்வாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீரெட்டி.

மேலும் தனக்கு வரும் சினிமா வாய்ப்புகளை நானி வர விடாமல் செய்வதாகவும் புகார் அளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் நான் தலையிடவும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் நானி.

தன் மீது அவதூறு பரப்பிய ஸ்ரீரெட்டி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடருவேன் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Sri Reddy accused Nani of sexually abusing her and scuttling her chances of being a part of Bigg Boss Telugu

வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியில் கலக்கிய அக்‌ஷரா ரெட்டி

வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சியில் கலக்கிய அக்‌ஷரா ரெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Akshara Reddy shares her experience in Villa to Village show and her Modelling professionவிஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி வில்லா டூ வில்லேஜ்.

இதில் மாடலான அக்‌ஷரா ரெட்டி பங்கேற்றார். சென்னையை பூர்விமாக கொண்ட இவர் மாடலிங் செய்து வருகிறார்.

நல்ல உயரம், நல்ல உடல்வாகு கொண்ட இவர் பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 13 பெண்கள் கலந்துக் கொண்டுள்ளனர். சிட்டியில் வாழ்ந்த இவர்கள் 40 நாட்கள் கிராமத்தில் தங்க வேண்டும்.

அந்த 40 நாட்கள் முழுவதும் பணம், செல்போன், டிவி, பேன், ஏசி ஆகியவற்றை இவர்கள் பயன்படுத்தக் கூடாது.

அந்த நாட்களில் இவர்களை அங்கு ஏதாவது வேலை செய்து பணம் சம்பாதித்து தங்கள் உணவு மற்றும் இதர தேவைகளை பூர்த்திக் செய்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தன் வில்லா டூ வில்லேஜ் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது…

என் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான காலம் இதுதான் என்பேன். எங்களுக்கு சிறைய சேலஞ்சிங் டாஸ்ட்க்குகள் கொடுக்கப்பட்டு இருந்தது.

ஏர் உழுதுதல், தென்னை மரம் ஏறுதல், சேற்று மணலில் சண்டை இடுதல், தென்னை மரத்தில் தொங்க வேண்டும் ஆகியவற்றை செய்ய வேண்டும்.

இந்த போட்டியில் வெற்றிப் பெற்றால் அவர்தான் அந்த வீட்டின் மஹாலட்சுமி என்பார்கள்.

ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் தொங்கி வெற்றிப் பெற்று நான்தான் அந்த வீட்டின் முதல் மஹாலட்சுமி ஆனேன்.

நான் தினமும் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வேன்.

எனவே என்னால் அவர்கள் கொடுத்த அனைத்து டாஸ்க்கையும் எளிதாக செய்ய முடிந்தது.

மீதமுள்ள 12 பேரும் என்னை கடுமையான போட்டியாளர் என்றார்கள்.

ஒரே வீட்டில் 12 பேருடன் வாழ்வது புதிய அனுபவமாக இருந்தது. அங்கே உள்ளவர்களுடன் நாமே எல்லாம் வேலைகளை பகிர்ந்து செய்ய வேண்டும்.

இதில் மிகவும் என்னை பாதித்த விஷயம் என்னவென்றால், என் குடும்பத்தை இத்தனை நாட்கள் நான் பிரிந்ததே இல்லை. அவர்களிடம் பேசாமல் இருந்ததும் வருத்தமாக இருந்தது.

மொத்தத்தில் கிராமத்தில் வாழ்ந்த அந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. என்னை நானே பார்த்துக் கொள்ள அந்த வீடு எனக்கு கற்பித்து கொடுத்தது. எந்த சூழ்நிலையிலும் தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் வில்லா டூ வில்லேஜ் நிகழ்ச்சி எனக்கு கற்றுக் கொடுத்துவிட்டது.

இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் விஜய் டிவிக்கும் என் நன்றிகள் என தெரிவித்தார் இந்த மஹாலட்சுமி என்ற அக்ஷரா ரெட்டி.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பே 150க்கும் மேற்பட்ட ரேம்ப் வாக் மற்றும் பேஷன் ஷோக்களில் கலந்துக் கொண்டுள்ளார்.

இதில் பிரபலமான பாலிவுட் நடிகைகள் மாதுரி தீட்ஷித் மற்றும் ஜீகி சாவ்லாவுடனும் இவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரபல நடன கலைஞர்கள் மற்றும் டிசைனர்களுடன் இவர் பணிபுரிந்துள்ளார்.

இவை தவிர குமரன் சில்க்ஸ், யுனிவர்சல் செல், பிஎஸ்என்எல், சௌபாக்கிய வெட் கிரைண்டர், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட பல விளம்பரங்களில் இவர் நடித்திருக்கிறார்.

மேலும் அழகு சம்பந்தமான பல நிகழ்ச்சிகளில் இவர் நடுவராக இருந்துள்ளார்.

தற்போது சப்தம் விஷன் தயாரித்து வரும் ஒரு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இது ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

காசு மேல காசு என்ற இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.

விஜித் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ப்ரான்சிஸ் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார்.

இவை தவிர 2 வெப் சீரிஸ் படங்களிலும் இவர் ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர் நடித்துள்ள ஹாப்பி நியூ இயர் என்ற குறும்பட பர்ஸ்ட் லுக்கை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்.

ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் இவர் பேச அறிந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Akshara Reddy shares her experience in Villa to Village show and her Modelling profession

akshara reddy

More Articles
Follows