மீண்டும் மீண்டும் இணையும் விக்ரம், பசுபதி கூட்டணி..

மீண்டும் மீண்டும் இணையும் விக்ரம், பசுபதி கூட்டணி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விக்ரம் மற்றும் பா ரஞ்சித் முதன்முறையாக இணையும் படம் ‘சியான் 61’.

படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

பா.ரஞ்சித் இயக்கிய ‘ சார்பட்டா பரம்பரை’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்ற பசுபதி, இயக்குனரின் அடுத்த படத்திலும் இணைந்துள்ளார்.

மேலும், சியான் விக்ரமுடன் பசுபதி ‘தூள்’, ‘அருள்’, ‘மஜா’ மற்றும் ’10 எண்றதுக்குள்ள’ படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.ஐந்தாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது.

‘சியான் 61’ திரைப்படம் கோலார் தங்கச் சுரங்கத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஆக்ஷன் நாடகம் என்றும் கூறப்படுகிறது.

Pasupathy reunites with Vikram for Chiyaan61

சஞ்சய் ராமசாமி தெரியும்; ராம் ராமசாமி தெரியுமா? ‘பிக் பாஸ்’ முதல் சினிமா ஹீரோ வரை ஒரு பார்வை

சஞ்சய் ராமசாமி தெரியும்; ராம் ராமசாமி தெரியுமா? ‘பிக் பாஸ்’ முதல் சினிமா ஹீரோ வரை ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சஞ்சய் ராமசாமி நமக்கு தெரியும்.. அது கஜினி படத்தில் சூர்யாவோட கேரக்டர் பெயர். இப்ப நாம பார்க்கப் போறது ராம் ராமசாமி. யாருப்பா இவரு அப்படின்னு கேட்டீங்கன்னா…

பிக் பாஸில் என்னதான் 20 பேர் இருந்தாலும் சில பேர் மட்டுமே செம ஹேண்ட்ஸ்ம்மா ஸ்மார்ட்டா யூத்தா இருப்பாங்க.

அந்த மாதிரி ஒரு ஆளு தான் ராம் ராமசாமி.

இவரு பிக் பாஸ் சீசன் 6ல கலந்துகிட்டு ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

இவரோட பூர்வீகம் சேலம்.. சினிமாவுல நானும் சாதிக்கணும் அப்படிங்கறதுக்காக மாடலிங் செஞ்சுட்டு இப்ப சென்னையில இருக்காரு..

அது மட்டும் இல்லாம அஜினோமோட்டோ அப்படிங்கற படத்துல ஹீரோ கேரக்டர் பண்ணிட்டு இருக்காரு..

நிறைய மாடலிங் செஞ்சுக்கிட்டு இருக்காரு.. நிறைய விளம்பர படங்களில் நடிச்சிருக்காரு. அதன் மூலமா தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைச்சிருக்கு.

இவருக்கு பாட்டு பாடறது ரொம்ப பிடிக்குமாம். அதுக்காகவே வீட்டுல ஸ்டூடியோ செட்டப்ல மைக் எல்லாம் வச்சுக்கிட்டு அடிக்கடி பாட்டு பாடி போஸ்ட் பண்ணிட்டு இருக்காரு.

இவருக்கு ஒரே ஒரு பிரதர் இருக்காரு. அவருக்கு மேரேஜ் ஆச்சு. இவருக்கு 27 வயசாகிறது.. இன்னும் மேரேஜ் ஆகல. பையன் சிங்கிள் சொல்றாங்க.

சேலத்துல முடிஞ்ச வரைக்கும் தன்னுடைய சொந்த நிலத்தில் விவசாயமும் பண்ணிட்டு இருக்காரு.

இவரோட பாட்டி கூட சேர்ந்து இன்ஸ்டாகிராமில் நிறைய ரிலீஸ் போஸ்ட் பண்ணி இருக்காரு.

இவருக்கு சின்ன வயசுல ஹார்ட்ல ஒரு பிரச்சனை இருந்திருக்கு. அப்ப டாக்டரால கண்டுபிடிக்க முடியாத பிரச்சனையை இவர் தாத்தா தான் கண்டுபிடிச்சு சொன்னாராம்.
அதனால தாத்தா மேல ரொம்ப பிரியம் இவருக்கு.

இப்ப வயசான காலத்துல தாத்தாவ ரொம்ப கேர் பண்ணி பார்த்துக்கிறாராம். ஸ்போர்ட்ஸ்ல இவருக்கு ரொம்ப புடிச்சது கிரிக்கெட். அதனால எப்போ டைம் கிடைச்சாலும் கிரிக்கெட் விளையாடுவாராம்.

இப்போ இவரு பிக் பாஸில் கலந்துக்கிட்டு இருக்காரு.. பிக் பாஸ் முடிஞ்சு சிங்கிளா தான் வருகிறாரா? அப்படின்னு பார்ப்போம்..

ராம் ராமசாமி

Who is Ram Ramasamy in Bigg Boss Season 6

‘டுலெட்’ ஹீரோ டூ ‘காதலிசம்’ டைரக்டர்.; காமத்திற்காகவே லிவிங் டுகெதர் உறவு.?

‘டுலெட்’ ஹீரோ டூ ‘காதலிசம்’ டைரக்டர்.; காமத்திற்காகவே லிவிங் டுகெதர் உறவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் என்பது எதுவரை, கல்யாணம் என்பது முடிவுரை என்று வாழும் இளைஞர்களின் கதை ‘காதலிசம்’.

தேசிய விருது பெற்ற ‘டுலெட்’ பட கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன் எழுதி தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘காதலிசம்’.

லிவிங் டுகெதர் முறையில் வாழும் காதலர்களுக்கு நேரும் சிக்கல், சமூகத்தில் ஏற்படும் சவால்கள். குடும்ப முறையை உடைக்கும் சேர்ந்து வாழ்ந்தல் என்ற லிவிங் டுகெதர் இதனை பற்றியது தான் இந்த படம் என்கிறார் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன்.

பெருநகரங்களில் ‘ லிவிங் டுகெதர்’ என்பது என்பது இப்போது சாதாரணமாகிவிட்டது! லிவிங் டுகெதர் ஆண்,பெண் இருவருக்கும் சுதந்திரத்தை வழங்குவாதாக எண்ணுகிறார்கள், அந்த சுதந்திரம் எதுவரை? கல்யாணம் பெண்களை அடிமைப்படித்துகிறதா? எல்லோருமே லிவிங் டுகெதர் முறையில் வாழ ஆரம்பித்தால் குடும்ப அமைப்பு என்னவாகும்? சமூகத்தையும் கலாச்சாரத்தையும் குலைக்கிறதா? வெறும் காமத்திற்க்காக லிவிங் டுகெதரில் வாழ ஆரம்பிக்கிறார்களா? அந்த காதல் உண்மையானதா?

பெற்றோர்களுக்கு இந்த சேர்ந்து வாழ்தல் முறைபெரும் கலக்கத்தை கொடுப்பது நிதர்சனம். பெறும்பாலும் லிவிங் டுகெதரில் வாழ்பவர்கள் குழந்தை பேறுவை தள்ளிப்போடுகிறார்கள், மீறி குழந்தை உருவானால் அந்த குழந்தை யார் பொறுப்பு? அந்த குழந்தையின் எதிர்காலம் என்ன? பெற்றோர்கள் இல்லாமல் வளர்ந்தால் அந்த குழந்தையின் மனநலம் எப்படி எல்லம் பாதிக்கப்படும்? இந்த லிவிங் டுகெதர் அடுத்த தலைமுறை உருவாகாமல், சந்ததியினரே இல்லாமல் போகச் செய்கிறது! இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

முழுக்க முழுக்க சிங்கப்பூரில், சிங்கப்பூர் நடிகர்களை கொண்டு உருவாகியிருக்கும் படம். ஹர்மீத் கௌர் என்ற சிங்கப்பூர் பஞ்சாபி பெண் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் மரியா, சரஸ், கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

சிங்கப்பூர் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் நட்சத்திரம் அறிமுகமாகியுள்ளார். இசையமைப்பாளர் காமேஷ் அவர்களின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது. நம்பிராஜன் இண்டர்நேசனல் சினிமாஸ் மற்றும் சிங்காவுட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது! விரைவில் திரைக்கு வருவதற்க்கான ஆயுத்த பணிகள் நடைபெறுகிறது.

#kadhalism #காதலிசம் #சந்தோஷ்நம்பிராஜன் #நம்பி #Santhoshnambirajan #Santhosh_Nambirajan #nambi #Nambirajan_International_cinemas

Kadhalism

கார்களின் ஹாரன் ஒலிகளை வைத்தே இசை.; தீபாவளி ட்ரீட்.; அசத்தும் அனிருத்

கார்களின் ஹாரன் ஒலிகளை வைத்தே இசை.; தீபாவளி ட்ரீட்.; அசத்தும் அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் நடக்கவுள்ள இசையமைப்பாளர் அனிருத்தின் முதல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எல்லா திசையிலும் அதன் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.

சென்னையில் இந்நிகழ்வுக்கு முன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த இசை நிகழ்வை தனித்துவமான வழிகளில் விளம்பரங்கள் செய்து, ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் ராக்ஸ்டார் அனிருத்தின் பல்வேறு விதமான படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ரயிலின் வெளியில் மட்டுமல்லாமல், ரயிலுக்குள் நுழைந்ததும் ரசிகர்களின் கண்களைக் கவரும் வகையில், உள்ளேயும் அனிருத் இசை நிகழ்வு குறித்த படங்கள் அவர்களை வரவேற்றன. இந்த விளம்பரங்களை கண்ட ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

அந்த ரயிலில் பயணித்த ரசிகர்கள் புன்னகையுடன் தங்கள் கைப்பேசிகளில் ‘ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்’ இசை நிகழ்ச்சியின் விளம்பரங்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டாடினர்.

சென்னையில் உள்ள மெரினா மாலில் கார்களின் ஹாரன் ஒலிகளை மட்டுமே கொண்டு இசைக்கப்பட்ட அனிருத்தின் “டிப்பம் டப்பம்“ பாடல் அங்கிருந்த அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

கார் ஹாரன் ஒலியில் இசைக்கப்பட்ட பாடலைக் கேட்டு அங்கு வந்திருந்த ரசிகர்கள், தம்பதிகள் மற்றும் குடும்பத்தினர் என அனைத்து பார்வையாளர்கள் பாடியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.

‘ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்’ இசை நிகழ்ச்சி அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் இந்நிகழ்ச்சியின் நேரலையில் பங்குகொள்ளும் அற்புத வாய்ப்பும், கொண்டாட்டமும் ரசிகர்களுக்குக் காத்திருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு விஜய் தேவரகொண்டா.; கார்த்திக்கு நாகார்ஜூனா.!

சிவகார்த்திகேயனுக்கு விஜய் தேவரகொண்டா.; கார்த்திக்கு நாகார்ஜூனா.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் ‘பிரின்ஸ்’.

ஒரே நேரத்தில் தமிழ் & தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.

‘பிரின்ஸ்’ படத்தின் ரிலீசை முன்னிட்டு பட குழுவினர் தமிழகம் மற்றும் ஆந்திராவில் பட புரமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று அக்டோபர் 18ல் ஐதராபாத்தில் PRE RELEASE EVENT நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து
‘சர்தார்’ படத்தின் PRE RELEASE EVENT நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா கலந்து கொள்ள உள்ளார்.

இந்த விழா இன்று அக்டோபர் 19ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

மித்ரன் இயக்கத்தில் கார்த்தி ராஷி கண்ணா, ரஜிஷா, லைலா முனீஸ் காந்த் சங்கி பாண்டே உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘சர்தார்’.

இந்த படமும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.

Prince Pictures தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘தோழா ‘ என்ற படத்தில் கார்த்தி மற்றும் நாகர்ஜுனா இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Vijay Devarakonda at Prince Event and Nagarjuna at Sardar event

தீபாவளிக்கு தியேட்டரில் 2 படங்கள்.; ஓடிடியில் எத்தனை படங்கள் ரிலீஸ் என பார்ப்போமா?

தீபாவளிக்கு தியேட்டரில் 2 படங்கள்.; ஓடிடியில் எத்தனை படங்கள் ரிலீஸ் என பார்ப்போமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி என்றாலே அந்த கொண்டாட்டத்திற்கு தமிழர்களிடையே அளவே இருக்காது.

தீபாவளிக்கு பலகாரம் பட்டாசு.. இத்துடன் புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகியவையும் தமிழர்கள் மனதில் இடம் கொள்ளும்.

இந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி நடித்த சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் ஆகிய இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இவை இல்லாமல் தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் என்னென்ன படங்கள் வெளியாகயுள்ளது என்பதை இங்கே பார்க்கலாம்..

பிரம்மாஸ்திரா: அயன்முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியாபட், அமித்தா பச்சன், நாகர்ஜூனா, ஷாருக்கான் நடித்த படம் ‘பிரம்மாஸ்திரா’.

இப்படம் கடந்த செப்டம்பர் 9-ம் தேதியே திரையரங்குகளில் வெளியாகி உலகளவில் ரூ.400 கோடி வசூலை ஈட்டியது.

இப்படம் அக்டோபர் 23-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

கணம்: ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் ஷர்வானந்த், ரிது வர்மா, அமலா, ரமேஷ் திலக், சதீஷ் உள்ளிட்டோர் நடித்த படம் ‘கணம்’.

செப்டம்பர் 9-ம் தேதி தியேட்டர்களில் வெளியான இப்படம் அக்டோபர் 20ல் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகவுள்ளது..

பேட்டைக்காளி: ஜல்லிக்கட்டு காளைகளின் முக்கியத்துவத்தை அடிப்படையாக கொண்டது இந்த படம்.

கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி, ஷீலா நடிக்க ராஜ்குமார் இயக்கி இருக்கிறார்.

இந்தத் தொடரை இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 21-ம் தேதி வெளியாக உள்ளது.

இத்துடன்…

கிருஷ்ணா விருந்தா விஹாரி (Krishna Vrinda Vihari) என்ற படம் அக்டோபர் 23-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது.

அன்னிஷ் கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் நாகா சௌர்யா, ஷெர்லி நடித்துள்ளனர்.

கூடுதல் தகவல்…

அண்மையில் சிம்பு நடித்து தியேட்டர்களில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெற்றி பெற்றது. எனவே அமேசான் பிரைம் ஓடிடியில்வெளியானது.

இந்த நிலையில் தீபாவளிக்கு தனுஷ் நடித்து அண்மையில் வெளியான ‘நானே வருவேன்’ படம் ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

2022 Diwali release movies in OTT

More Articles
Follows