கமல், விக்ரம், அஜித், விஜய் வழியில் தனுஷ்..!

A M Rathnam to Produce Dhanush New Filmதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘வடசென்னை’.

இப்படம் பாகுபலியை போன்று இரண்டு பாகங்களாக தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

கமல் நடித்த இந்தியன், விக்ரம் நடித்த தூள், பீமா, விஜய் நடித்த குஷி, கில்லி, மற்றும் அஜித் நடித்த ஆரம்பம், வேதாளம் உள்ளிட்ட பல படங்களை இவர் தயாரித்துள்ளார்.

தனுஷ் படத்தை ஏம்எம்ரத்னம் தயாரிக்கவிருப்பது இதுவே முதன் முறையாகும்.

நாயகியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Overall Rating : Not available

Latest Post