தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா, விதார்த் இணைந்துள்ள படம் குரங்கு பொம்பை.
நித்திலன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார் மலையாள நடிகை டெல்னா டேவிஸ்.
இவர்களுடன் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா உள்ளிட்டோரும் நடிக்க, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
அப்போது பார்த்திபன் பேசியதாவது…
“இந்தப்பட நாயகி, டெல்னா டேவிஸை எல்லோரும் பக்கத்து வீட்டு பெண் போல அழகாக இருக்கிறார் என்றார்கள்.
என் பக்கத்து வீட்டுல யாரும் டெல்னா டேவிஸ் மாதிரி அழகா இல்ல.
எனவே டெல்னா டேவிஸ், நீங்க என் பக்கத்து வீட்டுக்கு வாடகைக்கு வந்தீங்கன்னா, நானும் உங்களை என் பக்கத்து வீட்டு பொண்ணுன்னு சொல்லிப்பேன்” என்றார்.
Parthiban speech about Delna Davis at Kurangu Bommai audio launch