தெலுங்கு மொழி பேசப்போகும் குரங்கு பொம்மை

kurangu bommaiஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் நித்திலன் இயக்கிய குரங்கு பொம்மை மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதில் வித்தார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ், குமரவேல், பிஎல்.தேனப்பன் கஞ்சா கருப்பு, கல்கி, பாலா சிங், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடிக்க,
அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கிலும் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது.

இதன் தெலுங்கு உரிமையை எஸ் போக்கஸ் நிறுவனம் சார்பில் சரவணன் கைப்பற்றியிருக்கிறார்.

இதுகுறித்து சரவணன் கூறியதாவது…

”திறமையான கலைஞர்களுக்கும் தரமான படங்களுக்கும் ஆதரவு தருவதே எங்களது நோக்கம்.

இயக்குனர் நித்திலன் ஒரு பெரும் திறன் கொண்ட படைப்பாளி. ‘குரங்கு பொம்மை’ படம் ஒரு அற்புத படைப்பு.

நல்ல படங்களுக்கு மொழி எல்லைகளே கிடையாது. தெலுங்கு ரசிகர்களும் இப்படத்திற்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன்” எனக் கூறினார்.

Overall Rating : Not available

Related News

தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்…
...Read More
நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்க்கும்…
...Read More

Latest Post