குரங்கு பொம்மை பட நன்றி கூறும் விழாவில் குமுறிய விதார்த்

குரங்கு பொம்மை பட நன்றி கூறும் விழாவில் குமுறிய விதார்த்

Actor Vidharth emotional speech at Kurangu Bommai Thanks Giving meetநித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த், டெல்னாடேவிஸ், குமரவேல், பி.எல்.தேனப்பன், கல்கி உள்ளிட்டோர் நடித்த படம் குரங்கு பொம்மை.

கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

இதற்காக பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சற்றுமுன் சென்னையில் நடைபெற்றது.

இதில் படத்தின் நாயகி தவிர மற்றவர்கள் கலந்துக் கொண்டனர்.

அப்போது பட நாயகன் விதார்த் பேசியதாவது…

படத்தின் வெற்றி எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

இதற்கு முன் வெளியான என்னுடைய குற்றமே தண்டனை படம் நன்றாக இருந்தாலும், அதற்கு விளம்பரங்கள் என்னால் செய்ய முடியவில்லை.

ஆனால் இந்த குரங்கு பொம்மை படத்திற்கு நல்ல ப்ரோமோசன் இருந்தது.

படம் நன்றாக உள்ளது என பாராட்டுக்கள் தொடர்ந்தாலும் நாளை நிறைய படங்கள் வெளியாகவுள்ளதால் இந்தப்படம் தியேட்டரில் ஓடாது. அதான் வருத்தமாக உள்ளது.

நல்ல படங்களுக்கு தியேட்டர்காரர்களும் ஆதரவு தர வேண்டும். அதை பத்திரிகையாளர்கள் நீங்களும் வலியுறுத்த வேண்டும்” என்று பேசினார்.

Actor Vidharth emotional speech at Kurangu Bommai Thanks Giving meet

kurangu bommai team

கரு.பழனியப்பன்-அருள்நிதி இணையும் படத்தலைப்பு வெளியானது

கரு.பழனியப்பன்-அருள்நிதி இணையும் படத்தலைப்பு வெளியானது

Karu Pazhaniappan Arulnithi movie titled Pugazhendhi Enum Naanகரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தை ஆக்ஸஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்றைய அரசியலை நையாண்டு செய்யும் விதமாக இப்படம் உருவாகவுள்ளது என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்திற்கு புகழேந்தி எனும் நான் எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இப்படத்தலைப்பின் கீழ் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு என இயக்குனர் பெயர் வருமாறு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இதன் டைட்டில் போஸ்டர் தற்போது இணையங்களில் வெளியாகியுள்ளது.

யுகபாரதி பாடல்களை எழுத இமான் இசைமைக்கிறார்.

Karu Pazhaniappan Arulnithi movie titled Pugazhendhi Enum Naan

 

pugal arulnithi

சூரி படத்தலைப்பை வெளியிடும் சுசீந்திரனின் பெற்றோர்

சூரி படத்தலைப்பை வெளியிடும் சுசீந்திரனின் பெற்றோர்

Soori new movie title will be released by Suseenthirans parentsஇயக்குனர் சுசீந்திரன் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது.

இப்படத்தில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தை தலைப்பை சுசீந்திரன் தந்தை நல்லுசாமி வெளியிட்டார்.

இதனையடுத்து புதுமுகங்கள் நடிக்கும் ஒரு படத்தை இயக்கிவருகிறார் சுசீந்திரன்.

இதில் நடிகர் சூரி முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தலைப்பை நாளை காலை 10 மணிக்கு சுசீந்திரனின் பெற்றோர் வெளியிடஉள்ளதாக தன் ட்விட்டர் பக்கத்தில் கைப்பட எழுதிய கடிதத்தை பதிவிட்டுள்ளார்.

Soori new movie title will be released by Suseenthirans parents

soori new movie

செப்டம்பர் 10ஆம் தேதி விஜய்யின் மெர்சல் டீசர்

செப்டம்பர் 10ஆம் தேதி விஜய்யின் மெர்சல் டீசர்

Mersal Teaser will be release on September 10th 2017அட்லி இயக்கத்தில் விஜய், காஜல், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மெர்சல்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Mersal Teaser will be release on September 10th 2017

2.0 ஹாட் அப்டேட்ஸ்… டீசர்-ட்ரைலர்-பாடல்கள் ரிலீஸ் தகவல்கள்

2.0 ஹாட் அப்டேட்ஸ்… டீசர்-ட்ரைலர்-பாடல்கள் ரிலீஸ் தகவல்கள்

2point0 movie teaser trailer songs release update

லைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ள 2.0 படம் அடுத்த ஆண்டு 2018 ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது.

ஷங்கர் இயக்கிய இப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என லைக்கா நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீ மகாலிங்கம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

படத்தின் பாடல்களை துபாய் நாட்டில் 2017 அக்டோபரில் வெளியிடவுள்ளனர்.

இதனையடுத்து டீசரை நவம்பர் மாதம் ஐதராபாத்திலும், டிரைலரை டிசம்பர் மாதம் சென்னையிலும் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Raju Mahalingam‏ @rajumahalingam
“Festivities to Begin” Come Oct -Audio Release in Dubai!!! Nov-Teaser in Hyderabad and Dec-Trailer in Namma Singara Chennai!!! 2.0 Loading!!

மீண்டும் ரஜினி-விஜய் படத்தயாரிப்பாளருடன் இணையும் விக்ரம்பிரபு

மீண்டும் ரஜினி-விஜய் படத்தயாரிப்பாளருடன் இணையும் விக்ரம்பிரபு

vikram prabhu producer thanuநடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வளர்ந்துள்ள நெருப்புடா படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து எஸ்எஸ் சூர்யா இயக்கும் பக்கா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நிக்கிகல்ராணி, பிந்துமாதவி, சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க, டி.சிவகுமார் தயாரிக்கிறார். இசை ஷாம்.

இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தையும் முடிவு செய்துவிட்டாராம் விக்ரம்பிரபு.

கபாலி, தெறி படங்களை தயாரித்த கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.

விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி படத்தையும் தயாரித்தவர் தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram Prabhus next will be produced by Kalaipuli S Thanu

More Articles
Follows