டொரேண்டோ திரைப்பட விழாவில் குரங்கு பொம்மை-க்கு 2 விருதுகள்

டொரேண்டோ திரைப்பட விழாவில் குரங்கு பொம்மை-க்கு 2 விருதுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kurangu bommmaiபுளு சாப்யர் என்பது கனடாவில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு குழுக்களில் ஒன்றாகும்.

இவர்கள் தற்போது “டொரேண்டோ தெற்காசிய திரைப்பட விருதுகள்” மூலமாக பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற்றவர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்கள்.

இந்த அறிவிப்பினை புளு சாப்யர் நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜீஷ் ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி கடந்த ஆண்டு வெளியான தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிப் படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 25 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 சிறப்பு (ஜூரி) விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் “விக்ரம் வேதா”, “அருவி” “அறம்” என பல வெற்றிப்படங்கள் இடம்பெற்று கடுமையான போட்டி நிலவிய சூழலில் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினை ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் மற்றும் பலர் நடித்து, நித்திலன் இயக்கியிருந்த “குரங்கு பொம்மை” திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.

அது மட்டுமல்லாமல், இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது “இயக்குநர் இமயம்” பாரதிராஜா-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக சர்வேதச அளவிலான ஆன்லைன் வாக்கெடுப்பு முறையில் இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் இந்த காட்சியில் வருகிறார் சூர்யா

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் இந்த காட்சியில் வருகிறார் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi and suriyaசூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பில் அவரின் தம்பி கார்த்தி நடித்துள்ள படம் “கடைக்குட்டி சிங்கம்”. கார்த்தியுடன் சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கிராமத்து பின்னணியில் விவசாயத்துடன், குடும்ப சென்ட்டிமென்ட் கலந்த படமாக தயாராகி உள்ளது. ஜூலை 13-ம் தேதி படம் திரைக்கு வர உள்ள நிலையில் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

படத்தில் இடம்பெறும் ரேக்ளா ரேஸ் போட்டியில், வெற்றி பெறும் கார்த்திக்கு, சூர்யா பரிசு அளிப்பது போன்று காட்சி படமாகி உள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

விஸ்வரூபம் 2-வில் கமலின் அம்மாவாக பிரபல ஹிந்தி நடிகை

விஸ்வரூபம் 2-வில் கமலின் அம்மாவாக பிரபல ஹிந்தி நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan and waheeda rahmanகமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் விஸ்வரூபம் 2.

முதல் பாகம் 2013-ல் வெளியாக இதன் இரண்டாம் பாகம், நான்கு ஆண்டுகள் கழித்து ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.

முதல்பாகத்தில் நடித்த பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் இந்தப்படத்திலும் தொடருகின்றனர்.

இப்படத்திற்கும் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடல் வெளியாகியுள்ளது.

“நானாகிய நதிமூலமே…” என்று ஆரம்பிக்கும் இந்தப்பாடலை கமலே, எழுதி, பாடியிருக்கிறார். கமலுடன், கவுசுகி சக்ரபார்த்தி மற்றும் மாஸ்டர் கார்த்திக் சுரேஷ் ஐயர் ஆகியோரும் இணைந்து பாடியிருக்கின்றனர்.

இதில் கமலின் அம்மாவாக பிரபல ஹிந்தி நடிகை வகிதா ரஹ்மான் நடித்திருக்கிறார்.

இந்த பாடல் தாய்மையை போற்றும் விதத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிக் டிக் டிக் வெற்றி விழாவில் ஆரவ் பிறந்தநாளை கொண்டாடிய ஜெயம்ரவி

டிக் டிக் டிக் வெற்றி விழாவில் ஆரவ் பிறந்தநாளை கொண்டாடிய ஜெயம்ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam raviசக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி – நிவேதா பெத்துராஜ் நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் டிக் டிக் டிக்.

இந்த படத்தில் ஜெயம் ரவியின் மகனாக அவரது சொந்த மகன் ஆரவ் ரவியே நடித்திருந்தார்.

இந்நிலையில் டிக் டிக் டிக் படத்தின் சக்சஸ் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் ஆரவ் ரவியின் பிறந்த நாளும் சேர்த்து கொண்டாடப்பட்டது.

ஜெயம்ரவி பேசுகையில்…

டிக் டிக் டிக் படத்தின் கதை வித்தியாசமான கதை என்பதால் துணிந்து நடித்தேன். இன்றைக்கு ரசிகர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த படத்தில் முதலில் படமாக்கியபோது செட் போடவில்லை. அதில் தான் நானும், நிவேதா பெத்துராஜூம் நடித்தோம்.

பிறகு செட் போட்ட பிறகு அதை பார்த்த பிறகு தான் இந்த படம் ஓடுங்கிற நம்பிக்கையே எனக்கு வந்திருக்கு என்று சொன்னவர் நிவேதா. அந்த அளவுக்கு அந்த செட் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது.

மிருதன் படத்தில் நடித்தபோது முதுகில் பலத்த அடிபட்டு சிகிச்சை எடுத்தேன். அதையடுத்து இந்த படத்திற்காக ரோப்பில் தொங்கியபடியே நடிக்க வேண்டியிருந்ததால் வலி இருந்தது. என்றாலும், அதை பொறுத்துக்கொண்டு நடித்தேன்.

இன்றைக்கு ஆடியன்ஸ் ஹிட் படமாக்கி விட்டதால் அந்த வலி காணாமல் போய் விட்டது.

இந்த படத்தில் டெக்னீசியன்கள் ஒவ்வொருவருமே சிறப்பாக செயல்பட்டனர். இது அவர்களுக்கான கதை.

அவர்கள் ஒருவர் தவறு செய்திருந்தாலும் படம் தோல்வியடைந்திருக்கும். ஆனால் அனைவருமே சிறப்பாக செயல்பட்டு படத்தை வெற்றிப்படமாக்கி விட்டனர்.” என்று பேசினார்.

*மணியார் குடும்பம்* விழாவில் தம்பி ராமைய்யாவை மாட்டி விட்ட சூரி

*மணியார் குடும்பம்* விழாவில் தம்பி ராமைய்யாவை மாட்டி விட்ட சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sooriமுரளி நடித்த மனுநீதி, வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் தம்பி ராமைய்யா.

ஆனால் இவரை ஒரு நடிகராகத்தான் பலருக்கும் தெரியும். அதற்கு முழு காரணமாக அமைந்த படம் மைனா.

அப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற அவர், அதன்பிறகே முழுநேர நடிகராகி விட்டார்.

அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் அறிமுகமான தனது மகன் உமாபதியை வைத்து, தற்போது மணியார் குடும்பம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இவரே பாடல் எழுதி, இசையமைத்தும் இருக்கிறார்.

உமாபதி ராமைய்யா, மிர்துளா, சமுத்திர கனி, ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, பவன் என பலர் நடித்துள்ள இந்த படத்தில் தம்பி ராமைய்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை விழா சென்னையில் நடைபெற்றது.

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், கே.பாக்யராஜ், பிரபுசாலமன், சேரன், கரு.பழனியப்பன், சீனுராமசாமி, சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், பேசிய பலரும் தம்பிராமைய்யாவின் திறமையை பெருமையாக பேசினர். அதுபோல் உமாபதியும் பெரிய நடிகராக வேண்டும் என்று வாழ்த்தினர்.

நடிகர் சூரி பேசும்போது விழாவை கலகலப்பாக்கி பேசினார். அவர் பேசியதாவது…

தம்பி ராமைய்யா அண்ணன் எந்த ஸ்பாட்டில் இருந்தாலும் ஒரு எனர்ஜி இருக்கும்.

ஒருநாள், எனக்கு 50 வயசுக்கு மேல ஆகிடுச்சு. ஆனாலும் இன்னும் பத்து கல்யாணம் கூட நான் பண்ணுவேன். அந்த அளவுக்கு நான் இன்னும் புல் எனர்ஜியா இருக்கேன் என்று சொன்னார்.

தம்பி ராமைய்யாவின் மனைவியும் விழாவுக்கு வந்திருந்தார். விழா அரங்கமே சிரக்க அவரும் சிரித்தார்.

சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு

சிவாஜி கணேசனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivaji ganesanதென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞரும், கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று கலைத்துறைக்கு பெருமையை ஈட்டித்தந்த நடிகர் திலகம் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் பிறந்தநாளான அக்.1 ம் தேதியை இனி ஒவ்வொறு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருக்கிறார். இந்திய அளவிலும், உலகெங்கும் வாழும் தமிழர்களாலும் கொண்டாடப்படும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களது கலைச் சேவையை பாராட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் சார்பாகவும், ஒட்டுமொத்த தமிழ் திரைத்துறையினர் சார்பாகவும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம். – தென்னிந்திய நடிகர் சங்கம்

More Articles
Follows