குரங்கு பொம்மைக்கு கூட்டமில்லையே பாரதிராஜா…- திருப்பூர் சுப்ரமணியம் கண்டனம்

Tirupur Subramaniam questions BharathiRaja in Kurangu Bommai success issueநித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த், குமரவேல், பிஎல். தேனப்பன் உள்ளிட்டோர் நடித்த படம் குரங்கு பொம்மை.

அண்மையில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நல்ல படங்களை தியேட்டர்காரர்கள் ஓட விடுவதில்லை என பாரதிராஜா மற்றும் விதார்த் குற்றம் சாட்டியிருந்தனர்.

பாரதிராஜாவின் இந்த பேச்சுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கதலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தன் வாட்ஸ்அப் பதிவில் கூறியுள்ளதாவது…

குரங்கு பொம்மை நல்ல படம்தான். ஆனால் அதை பார்க்க தியேட்டரில் ஆளில்லையே.

ஒரு காட்சிக்கு 100 பேர் கூட படம் பார்க்க வரவில்லை. நாங்கள் என்ன செய்வது? மக்களை நல்ல படங்களை பார்க்க சொல்லுங்கள்.

ஹீரோ கத்தி வீசுவதைதான் மக்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் தியேட்டர்களையே குறை சொல்வது ஏன்?

நல்ல கதைதானே என பாரதிராஜா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தாரா?. குரங்கு பொம்மை படத்தால் எங்களுக்கு நஷ்டம்தான்” என ஆவேசமாக பேசியுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.

Tirupur Subramaniam questions BharathiRaja in Kurangu Bommai success issue

Overall Rating : Not available

Related News

தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்…
...Read More
நடிகர் அரவிந்த்சாமி தலைமை விருந்தினராக பங்கேற்க்கும்…
...Read More

Latest Post