தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சுதேசி’ மற்றும் கரண் நடித்த ‘உச்சத்துல சிவா’ ஆகிய படங்களை இயக்கியவர் ஜேப்பி.
இவர் உச்சத்துல சிவா படத்தில் சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்.
எனவே, இப்படத்தை தொடர்ந்து, ‘பணம் காய்க்கும் மரம்’ என்கிற காமெடி படத்தை இயக்கி இதிலும் நடித்துள்ளார்.
நாயகனாக அக்(ஷ)ய் நடிக்க, நாயகிகளாக அகல்யா, அன்விகா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ராஜ் குல்கர்ணி மற்றும் சோனு பாண்டே ஆகியோர் வில்லன்களாக நடிக்க, போஸ் வெங்கட், படவா கோபி, பாரதி கண்ணன், பாலு ஆனந்த், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் பிரபல இசையமைப்பாளரான எல்.வைத்தியநாதனின் மகன் L.V.கணேசன் இசையமைக்க, உச்சத்துல சிவா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஹார்முக் இதிலும் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தை தொடர்ந்து ஆனந்தலிங்க குமார் இப்படத்தின் படத் தொகுப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
படத்தை தர்ஷ் ஷோ கம்பெனி தயாரிப்பில் A.ராமலிங்கம் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு ராதா ஜெயபிரகாஷ்.
இப்படம் குறித்து ஜேப்பி கூறியதாவது…
இதில் நான் ஹீரோவின் அண்ணனாக நடிக்கிறேன்.
தயாரிப்பாளர் ஏ. ராமலிங்கம் சூட்டிங் ஸ்பாட்டில் என் நடிப்பை பார்த்துவிட்டு என்னை நடிக்க இப்படத்தில் நடிக்க வற்புறுத்தினார்.
சந்தானம், சூரி போன்றவர்கள் நடிக்க வேண்டிய கேரக்டர் அது.
முதலில் தயக்கம் இருந்தாலும், அதன்பின்னர் முதல் பிரதியை பார்த்தபோது நிறைவாக செய்திருக்கிறேன் என்கிற நிம்மதி ஏற்பட்டது” என்கிறார் இயக்குனர் ஜேப்பி.