சரித்திர நாயகி ஜெயலலிதா படத்துடன் த்ரிஷாவின் ‘நாயகி’யும் ரிலீஸ்

jayalalitha trishaநாளை செப்டம்பர் 16ஆம் தேதி ஐந்து தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படமும் வெளியாகிறது.

புரட்சித் தலைவியின் நடிப்பில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியிருக்கும் படம் சூரிய காந்தி.

கடந்த 1973 ஜூலையில் இப்படம் ரிலீஸானது. இதில் ஜெயலலிதாவுடன் முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், மனோரமா, சோ ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் நாளை டிஜிட்டல் பிரிண்டில் ரிலீஸ் ஆகிறது.

இத்துடன் வெளியாக உள்ள மற்ற படங்களின் பற்றி ஒரு பார்வை….

த்ரிஷாவின் மிரட்டலான நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம் நாயகி. இதில் இரண்டு வேடம் ஏற்றுள்ளார்.

ஒரு கேரக்டரில் 20 வயது பெண்ணாக நடித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 200 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடுகிறது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள படம் பகிரி. நிறைய புதுமுகங்கள் இதில் அறிமுகமாகின்றனர்.

பிரபு ரணவீரன் மற்றும் ஷ்ரவியா ஜோடியாக நடித்துள்ளனர்.

நீண்ட இடைவேளைக்கு பின்னர் கரண் நடிப்பில் வெளியாகவுள்ள படம் உச்சத்துல சிவா. இவருடன் நேகா, ஆடுகளம் நரேன், இளவரசு, கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை வித்யாசாகர்.

இத்துடன் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள சதுரம் 2 படமும் ரிலீஸ் ஆகிறது. இதில் சௌந்தர்யா ரஜினியின் நண்பர் ரியாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல்பாகம் இன்னும் வரவில்லையே என்று கேட்பவர்களுக்கு நாங்க என்ன சொல்றது தெரிலையே பாஸ்.?

Overall Rating : Not available

Related News

த்ரிஷா நடிப்பில் நாயகி படம் அண்மையில்…
...Read More
கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சுதேசி’ மற்றும்…
...Read More

Latest Post