சறுக்கிய சிம்ட்டாங்காரன்; ஒருவிரல் புரட்சியால் சர்காரை காப்பாற்றிய விஜய்

சறுக்கிய சிம்ட்டாங்காரன்; ஒருவிரல் புரட்சியால் சர்காரை காப்பாற்றிய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkar vijayவிஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.

ஏஆர். ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகி வருவதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

இப்படத்தின் அனைத்து பாடல்களையும் நாளை அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்ட விழா நடத்தி வெளியிடவுள்ளனர்.

இதனிடையில் இப்படத்தில் இடம் பெற்ற சிம்ட்டாங்காரன் என்ற பாடலை சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர்.

விஜய் ரசிகர்களை தவிர ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த பாடலை கிண்டலடித்தனர்.

இந்நிலையில் சர்கார் படத்தின் இரண்டாவது பாடல் ஒருவிரல் புரட்சி நேற்று மாலை வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது-

வெளியான 70 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானே இந்த பாடலை இசையமைத்து பாடியுள்ளார்.

நல்ல வேளையாக சிம்ட்டாங்காரனால் சறுக்கிய சர்கார் இமேஜை இந்த ஒரு விரல் புரட்சி காப்பாற்றியுள்ளது எனலாம்.

தாணு தயாரிப்பில் தனுஷை இயக்கும் முண்டாசுப்பட்டி டைரக்டர்

தாணு தயாரிப்பில் தனுஷை இயக்கும் முண்டாசுப்பட்டி டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dir ram kumarவிஷ்ணு, நந்திதா, காளிவெங்கட், முனீஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான “முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் ராம்குமார்.

தற்போது அவரது இயக்கத்தில் உருகாகியள்ள `ராட்சசன்’ படம் வருகிற 5-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இதில் விஷ்ணு விஷால் – அமலா பால் ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்து தனுஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவிருக்க்கிறாராம் ராம்குமார்.

வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பேண்டஸி படமாக உருவாகும் இதன் சூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

அமிதாப்-அமீர்கான் இணையும் பட டிரைலரை வெளியிட்டார் கமல்

அமிதாப்-அமீர்கான் இணையும் பட டிரைலரை வெளியிட்டார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan released Thugs of Hindostan trailer Tamil versionயாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ஆக்சன் அட்வென்சர் படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ .

இது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.

பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களான அமிதாப்பச்சன் மற்றும் அமீர்கான் ஆகியோர் முதன் முதலாக இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுடன் கத்ரீனா கைப் மற்றும் பாத்திமா சனா சேக் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா அவர்கள் இயக்கியுள்ளார்.

நவம்பர் 8 ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை பற்றிய தகவலை வெளியிட அமிதாப் பட்சன் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் வீடியோ ஒன்றில் பேசி சமீபத்தில் வெளியிட்டனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் இவர்களால் டப் செய்யப்படவில்லை. பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்களை வைத்து டப்பிங் செய்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் தமிழ்,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது. மேலும் இந்த படத்தின் தமிழ் ட்ரைலரை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டார்.

Kamalhassan released Thugs of Hindostan trailer Tamil version

மழை கால நோய்களை தடுக்க ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜின் டிப்ஸ்

மழை கால நோய்களை தடுக்க ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜின் டிப்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nutritionist Divya Sathyaraj alerts public about Flu and Virus during rainy seasonசெப்டம்பர் மாதம் முடியும் தருவாயில் இருந்தாலும் இன்னும் தமிழகத்தில் சில இடங்களில் கோடை கொடுமை உள்ளது.

விரைவில் மழை காலம் தொடங்கவுள்ளது.

வருகிற நவம்பர் மாதத்தில் வரும் மழையால் வைரஸ் நோய்,சளி,இருமல் போன்றவைகள் வரலாம். அவற்றை தடுப்பது எப்படி என்பது குறித்து நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா கூறியுள்ளதாவது…

மழை காலம் குறித்து பொது மக்கள் அச்சம் அடைய வேண்டாம்.

நம் உடம்பை பாதுகாப்பதற்க்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் வைட்டமின்களை எடுப்பது அவசியம். எனவே உடனடியாக உங்கள் மருத்துவரை சந்தித்து, அவர்களின் ஆலோசனை படி zincovit,vitamin b,vitamin c, மருந்துகளை எடுக்க வேண்டும்.

மருந்துகளை வாங்குவதற்கு முன்பே அந்த மருந்து காலாவதி ஆனதா? நாம் உட்கொள்ளலாமா? உள்ளிட்டவைகளை சரிபார்த்து வாங்க வேண்டும்.” என கூறியுள்ளார் திவ்யா.

Nutritionist Divya Sathyaraj alerts public about Flu and Virus during rainy season

என்னை விட சின்ன பெண் த்ரிஷாவை பார்த்தால் பயம்.. : விஜய்சேதுபதி

என்னை விட சின்ன பெண் த்ரிஷாவை பார்த்தால் பயம்.. : விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi trisha 96மெட்ராஸ் எண்டெர்பிரைசஸ் சார்பாக நந்தகோபால் தயாரித்திருக்கும் 96 படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் என்பவர் இயக்கியுள்ளார்.

இவர் ஏற்கெனவே ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

இப்படத்தில் ராம் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்க, ஜானு கேரக்டரில் த்ரிஷா நடித்துளார்.முக்கிய கேரக்டரில் ஜனகராஜ் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது விஜய்சேதுபதி பேசியதாவது:

’செக்கச்சிவந்த வானம்’ படத்துக்குக் கூட எதையும் எதிர்பார்க்காமல் வாருங்கள் என்று நான் சொல்லியிருந்தேன்.

ஆனால், 96 படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. அதை பூர்த்தி செய்யும் என்று முழுமையாக நம்புகிறேன். ஆனாலும் அதையும் தாண்டி ஒரு பயம் ஏற்பட்டுள்ளது.

எப்படியாவது நன்றாக இருந்துவிடணும் என்ற பயம் அதிகம் ஏற்பட்டுள்ளது. அந்த நாளுக்காக தான் காத்திருக்கிறேன்.

இப்படத்தில் எல்லாரும் ரசித்து ரசித்து வேலை செய்தோம்.
சினிமாவில் எங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. நன்றாக இருக்கோம். ஆனால், அனைவருமே நல்ல சம்பளம் வாங்குவதில்லை.

அதையும் தாண்டி, நாம் பார்க்கும் நல்ல வேலையில் ஒரு மனநிம்மதி இருக்கிறது பாருங்கள். அது ஒரு சில படத்தில் தான் கிடைக்கும். இப்படத்தில் அனைவருக்குமே அந்த மனநிம்மதி கிடைத்தது.

எனக்கு த்ரிஷாவைப் பார்த்தால் சின்ன வயதிலிருந்தே பயம். ஹோம் வொர்க் பண்ணவில்லை என்றால் அவருடைய படத்தைக் காட்டித் தான் அம்மா பயமுறுத்துவார்.

நாயகிகள் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிடுகிறார்கள். நிஜத்தில் கண்டிப்பாக என்னைவிட சுமார் 6/7 வருடங்களாவது சின்ன பெண்ணாக இருப்பார் த்ரிஷா.” என்றார் விஜய்சேதுபதி.

Vijay Sethupathi shares his working experience with Trisha

96 movie press meet

மீண்டும் சூர்யா-ஹரி கூட்டணியில் இணையும் சன் பிக்சர்ஸ்

மீண்டும் சூர்யா-ஹரி கூட்டணியில் இணையும் சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya and Hari teams up with Sun picturesகடந்த 2010ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் படம் ரிலீஸ் ஆனது.

இப்படத்தை மிகப்பெரிய அளவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மார்கெட்டிங் செய்து வெளியிட்டது.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 2 மற்றும் 3 பாகங்களும் தற்போது வெளியாகிவிட்டது.

இந்நிலையில் தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு விரைவில் ஹரி இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இப்படத்தை நேரிடையாக தயாரிக்க முன் வந்துள்ளதாம் சன் பிக்சர்ஸ்.

தற்போது தயாரித்து வரும் பேட்ட, சர்கார், தலைவர் ரஜினி 166 ஆகிய படங்களை சூர்யா படத்தை சன் டிவி தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம்.

Suriya and Hari teams up with Sun pictures

More Articles
Follows