Breaking ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதி கன்பார்ம்; அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

Breaking ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதி கன்பார்ம்; அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Official announcement of Ner Konda Paarvai release date is hereஅமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹிந்திப் படம் ‘பிங்க்’.

இப்படத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்களும் வாழ்த்தினர்.

தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் நடிக்க தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார்.

போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் அஜித்துடன் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிக்க நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு ’நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைத்து அண்மையில் இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. பொதுவாக வெள்ளிக்கிழமை அன்று படங்கள் வரும். அல்லது முன்னதாக வியாழக்கிழமையன்று படத்தை வெளியிடுவார்கள். தற்போது முதன்முறையாக சனிக்கிழமை வெளியாவது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம்.

Official announcement of Ner Konda Paarvai release date is here

நயன்தாராவை தவறாக பேசிய ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம்

நயன்தாராவை தவறாக பேசிய ராதாரவிக்கு நடிகர் சங்கம் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar Sangam Warns Radha Ravi Over Nayanthara Commentsகொலையுதிர் காலம் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நயன்தாரா பற்றி கடுமையாக விமர்சித்தார் ராதாரவி. இதற்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு…

பெறுநர் :
திரு.ராதாரவி அவர்கள்,
எண்.9 1வது தெரு, போயஸ் ரோடு,
தேனாம்பேட்டை,
சென்னை – 600018.

அன்புடையீர் வணக்கம் ..!

சமீபத்தில் நடந்த “கொலையுதிர் காலம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய “இரட்டை அர்த்த வசனங்களை கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது ..! இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக்கண்டிக்கிறது..!

இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும், திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்..! இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது ..!

இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானமான சூழ்நிலையையும், மனஉளைச்சளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை..?

திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக்கூடிய தாங்கள் தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்..!

ஆனால் இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை ..? எது எப்படி இருப்பினும், இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ..!

அதை தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் “தென்னிந்திய நடிகர் சங்கம் “ திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி !
(M. நாசர்)
தலைவர்

Nadigar Sangam Warns Radha Ravi Over Nayanthara Comments

நயன்தாராவை கேவலப்படுத்திய ராதாரவி..; கடுப்பான விக்னேஷ் சிவன்

நயன்தாராவை கேவலப்படுத்திய ராதாரவி..; கடுப்பான விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vignesh Shivan condemns Radharavis speech at Kolaiyuthir Kaalam Press Meetநயன்தாரா நடிப்பில் சக்ரி டுலெட்டி இயக்கியுள்ள படம் கொலையுதிர் காலம்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் வழக்கம்போல நயன்தாரா கலந்துக் கொள்ளவில்லை. மேலும் இயக்குனர் சக்ரி டுலெட்டியும் கலந்துக் கொள்ளவில்லை. படத்தயாரிப்பாளர் மதியழகன் கலந்துக் கொண்டார்.

இந்த விழாவில் ராதாரவி பேசும்போது…

முன்னணி நடிகர்களுடன் நயன்தாராவை கம்பேர் செய்ய கூடாது. அவர் சிறந்த நடிகைதான். ஒரு பக்கம் பேயாகவும் இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார்.

முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களை பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கிறார்கள்.
ராதாரவியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தன் கண்டனத்தை கடுமையாக தெரிவித்துள்ளார்.

‘ஒரு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவரிடம் பேசிய அருவருப்பான கருத்துகளுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ? மூளையற்ற நபர், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார்.

இதில் வேதனையளிக்கும் விஷயம், அவருடைய கீழ்தரமான கருத்தை அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது.

இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், என்ன நடந்தாலும் அவர் மீது நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்களோ அல்லது வேறு எந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. பரிதாப நிலை என்று காட்டமாக பதிவு செய்துள்ளார்.

Vignesh Shivan‏Verified account @VigneshShivN

Clueless and helpless cos no one will support or do anything or take any action against that filthy piece of shit coming from a legendary family .. he keeps doing this to seek attention! Brainless ! Sad to see audience laughing& clapping for his filthy comments! None of us

None of us had any idea that this event was going to take place for an incomplete film .. the actual producers or directors left the film few years back I guess! Inappropriate event wit unnecessary people sitting and knowing not what to speak ! If this is called promoting a movie

In 2017, Mr.Radha Ravi made a crass insensitive comment about children with disabilities. It is men like Mr.Radha Ravi who perpetuate & glorify the violence against women & children.

In 2018, there was a sexual harassment complaint against Mr.Radha Ravi by a distressed actress, who feared to reveal her identity. He walked scotfree. A little later Mr.Radha Ravi scandalously & insensitively mocked at the #MeToo movement.

Vignesh Shivan condemns Radharavis speech at Kolaiyuthir Kaalam Press Meet

MR ராதாவின் கொள்ளுப்பேரனை மணந்த பார்த்திபன்-சீதா தம்பதியரின் மகள்

MR ராதாவின் கொள்ளுப்பேரனை மணந்த பார்த்திபன்-சீதா தம்பதியரின் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parthiban Seethas daughter Abinaya weds Naresh Karthik news updatesநடிகர் பார்த்திபன்-சீதா தம்பதிகளின் மூத்த மகளான அபிநயாவின் திருமணம் இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

மணமகனின் பெயர் நரேஷ் கார்த்திக். நடிகர் எம். ஆர். ஆர். வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன். (நடிகர் எம். ஆர். ராதாவின் கொள்ளுப்பேரன்).

திருமண நிகழ்வில் கலந்துக் கொண்டவர்கள் விவரம் வருமாறு…

நடிகர் ராதா ரவி, திருமதி லதாரஜினிகாந்த், R. B சௌத்ரி, இயக்குனர் எழில், லேனா தமிழ் வாணன், A. P ஸ்ரீதர், SA சந்திரசேகர், சோபா சந்திரசேகர், மாணிக்கம் நாராயணன், K பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், ஈஸ்வரி ராவ், DTR ராஜா, அட்வகேட் ராஜசேகர், நிரோஷா, சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி சாந்தனு, நடிகர் கார்த்தி, இயக்குனர் விக்ரமன், மயில் சாமி, மோகன்,சித்ரா லக்ஷ்மணன், ஐக் ஹரி, தங்கர் பச்சான், ராதிகா சரத்குமார், R பாண்டியராஜன், பிரித்திவிராஜன், JSK சதிஷ், பானு ப்ரியா, நல்லி குப்புசாமி செட்டியார், சூரி, ஒளிப்பதிவாளர் சுகுமாரன், சத்யஜோதி தியாகராஜன், நடிகை அருணா, இயக்குனர் KS ரவிக்குமார், நடிகை சாரதா, ராஜ ஸ்ரீ, சச்சு, வெந்நீராடை நிர்மலா போன்ற திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Parthiban Seethas daughter Abinaya weds Naresh Karthik news updates

Parthiban Seetha daughter Abinaya wedding

 

ஸ்மார்ட் போன் தரும் வார்னிங்…; “கீ” படம் பாருங்க புரியும்

ஸ்மார்ட் போன் தரும் வார்னிங்…; “கீ” படம் பாருங்க புரியும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kee Movie will be related to Mental health says Director Kaleesநாடோடிகள், ஈட்டி , மிருதன், போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட்.

இந்நிறுவனம் தயாரித்துள்ள வெற்றி படைப்பு “கீ“ இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும்.

இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா , R. J. பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ்.

இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர் ஆவர். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு நகூரன்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜீவா பேசியதாவது…

வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என எண்ணம் மனதில் தோன்றியது.

நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தை மலயாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா நடித்துள்ளார்.

மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். படத்திற்கு விஷால் அருமையாக இசையமைத்துள்ளார். அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம்.

தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமைந்துள்ளது. சரியான தருணத்தில் கூப்பிட்ட நேரத்தில் வந்து ஒளிபதிவினை மேற்கொண்ட அபிநந்தன் அவர்களுக்கு என் நன்றிகள். சிறப்பான பணியைச் செய்துள்ளார். காலீஸ் சிறந்த இயக்குனர். இதுபோன்ற நிறைய இளைய புதுமுக இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவிற்கு தேவை.

இளைய இயக்குனர்கள் வந்தால்தான் புதிய எண்ணங்கள் தோன்றும். புதிய எண்ணங்கள் இருந்ததால் தான் பல பரிமாணங்களில் திரைப்படங்களை தர முடியும்.
இந்த படத்தில் நடித்த ஆர்ஜே பாலாஜி, அணைகா அருமையாக நடித்துள்ளனர். படத்தின் காட்சிகள் மிக பிரமாண்டமாக வந்துள்ளது. படத்தொகுப்பாளர் நாகூரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இறுதியாக இந்த படம் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. உங்கள் அன்பாலும் ஆதரவாலும் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்.

நடிகை நிக்கி கல்ராணி பேசியவை…

மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த படம் வருகிறது என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவர்களுக்கும் காலீஸ் அவர்களுக்கும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். 4, 5 வருடங்களாக இந்த படத்தை ஒரு குழந்தை போல் பாதுகாத்து வந்துள்ளனர்.

ஏப்ரல் 12ம் தேதி படம் வெளியாகிறது இப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என முழுமையாக நம்புகிறேன். காலீஸ் ஒரு மிகச் சிறந்த இயக்குனர். ஜீவாவுடன் நான் முதலில் நடித்த படம் இது. ஆனால் கலகலப்பு 2 படம் முதலில் ரிலீஸ் ஆனது.

இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். கேமராமேன் அபிநந்தன் ஒளிப்பதிவு மிகப் பிரமாதமாக வந்துள்ளது. உங்கள் அனைவரது ஆதரவாலும் அன்பினாலும் படம் மாபெரும் வெற்றி வெற்றி அடையும் என நம்புகிறேன்.

இயக்குனர் காலிஸ் பேசியவை…

செல்போன்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது. ஒரு 4 வயது குழந்தை ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் அந்த குழந்தை இந்த படம் பார்க்க வேண்டும்.

ஒரு 70 வயது முதியவர் செல்போன் பயன்படுத்தினால் அவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன ? என்பதை எடுத்து கூறும் படம்.
இந்த படம் வெளிவர கடைசிவரை உறுதுணையாக இருந்த நடிகர் ஜீவா தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நிக்கி கல்ராணி ஒரு சின்சியரான நடிகை. அருமையாக நடித்துள்ளார். படப்பிடிப்புக்கு விரைவாகவே வந்து விடுவார்.

அபி நந்தனின் ஒளிப்பதிவு, நகூரனின் படத்தொகுப்பு என அனைவரும் அருமையாக வேலை செய்துள்ளனர். . வில்லனாக நடித்துள்ள பத்ம சூர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏப்ரல் 12 ஆம் தேதி படம் வெளிவருகிறது உங்களின் அனைவரின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன்.

நடிகர் கோவிந்த் பத்ம சூர்யா பேசியவை…

தமிழ் படத்தில் முதன் முதலாக நடித்துள்ளேன். வில்லனாக நடித்து உள்ளேன். வாய்ப்பளித்த இயக்குனர் காலீஸ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். . ஏப்ரல் 12 ஆம் தேதி இந்தப் படம் உலகமெங்கும் ரிலீஸாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவாலும் இந்த படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்.

Kee Movie will be related to Mental health says Director Kalees

kee movie team

பாத்தா கூப்பிடற மாதிரி.; நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி

பாத்தா கூப்பிடற மாதிரி.; நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radha Ravi Abused Nayanthara at her Kolaiyuthir Kaalam Trailer Launchகமல், மோகன்லால் நடித்த உன்னைப் போல் ஒருவன், அஜித் நடித்த பில்லா 2 படங்களை இயக்கியவர் சக்ரி டுலெட்டி.

இவர் இப்போது நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா, டைரக்டர் யாரும் கலந்துக் கொள்ளவில்லை.

மாறாக நடிகர் ராதாரவி, சாம்ஸ், இயக்குனர்கள் கரு. பழனியப்பன், பிரவின்காந்தி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்த நிகழ்விலும் வழக்கம்போல் ராதாரவி சர்ச்சையான கருத்துக்களை பேசினார். அவர் கூறியதாவது…

‘இங்கு ஒருவர் பேசும்போது சினிமாவில் ரஜினி, கமல் காலம் போல இது நயன்தாரா காலம் என்றார். மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடனும் ஒப்பிட்டு பேசினார்.

அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களுடன் எல்லாம் நயன்தாராவை ஒப்பிடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் சினிமாவில் இருப்பதே பெரிய விஷயம். அவரைப் பற்றி வராத (கிசுகிசு) செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டியும் தனியாக நிற்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.

நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார்.

முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் நடிகை கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.

பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களை நடிக்க வைக்கலாம். பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களை நடிக்க வைக்கலாம்.

90எம்எல் என்று ஒரு படம் வந்தது. அதில் எதை எதையோ சொன்னார்கள். பிக்பாஸ் நடிகை அதில் நடித்தார்.
இப்போ எல்லாம் தியேட்டர்களில் படம் பார்க்க வருகிறவர்கள் படத்தை சரியாக பார்ப்பதில்லை. (காதலர்கள்) அவர்கள் எதையோ செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

நானும் விரைவில் ஒரு படம் எடுக்க போகிறேன். ஒன்றரை லிட்டர் என்ற பெயரில் எடுக்க போகிறேன்.

இவ்வாறு ராதாரவி பேசினார்.

Radha Ravi Abused Nayanthara at her Kolaiyuthir Kaalam Trailer Launch

More Articles
Follows