பவன் கல்யாணை கவனித்த போனி கபூர் அஜித்தை கண்டுக்கலையே..?!

பவன் கல்யாணை கவனித்த போனி கபூர் அஜித்தை கண்டுக்கலையே..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

boney kapoorபிரபல தயாரிப்பாளர் போனி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர்.

இவர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்திருத்தார்.

தற்போதும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.

கொரோனா காலத்தில் வலிமை பற்றி அடிக்கடி அப்டேட் கேட்டு போனி கபூரை அஜித் ரசிகர்கள் வற்புறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு வக்கீல் சாப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

இது நேர்கொண்ட பார்வையின் தெலுங்கு ரீமேக்காகும்.

இந்த படத்தில் அஜித் கேரக்டரில் வக்கீலாக பவன் கல்யாண் நடிக்க, அஞ்சலி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

பவன் கல்யாணையும் அவரது ரசிகர்களையும் கவனித்த போனி கபூர் இவ்வளவு நாளாக வலிமை அப்டேட் கேட்டும் தரவில்லையே என ஆதங்கத்தில் உள்ளனர் அஜித் ரசிகர்கள்.

‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தயாரிப்பாளர் மரணம்

‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தயாரிப்பாளர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மவுன யுத்தம், கல்யாண காலம், அவன், கலர் கனவுகள் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் கே.ஆர்.கண்ணன்.

இவர் நடிகர் ராமகிருஷ்ணன் இயக்கி நடித்த போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தை கடைசியாக தயாரித்திருந்தார்.

இவருக்கு தற்போது 72 வயதாகிறது.

இவர் மணப்பாக்கத்தில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பில் காலமானார்.

கொரோனாவுக்கு புதிய விதிகளுடன் அவசர சட்டம் பிறப்பிக்க அரசு முடிவு

கொரோனாவுக்கு புதிய விதிகளுடன் அவசர சட்டம் பிறப்பிக்க அரசு முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

fine for coronaகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு அமலில் இருந்தது.

தற்போது ஓரிரு மாதங்களாக சில தளர்வுகள் விதிக்கப்பட்டு இந்த செப்டம்பர் மாதல் முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்னும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக தெரிகிறது.

ஆனாலும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களின் தொடர் கோரிக்கைகளால் பேருந்துக்கு அனுமதியளித்தள்ளதாக முதல்வர் அறிவித்தார்.

இத்துடன் கொரோனா கட்டுப்பாடுகளை பலர் பின்பற்றாத சூழலில், விதிகளை மீறுபவர்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், பொது சுகாதார சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் விதிகளை கடுமையாக்க முடிவு செய்த தமிழக அரசு, தொற்று நோய் தடுப்புச் சட்டத்தில் புதிய விதிகளை சேர்த்து அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்துள்ளது.

இந்த அவசரச் சட்டத்தின் கீழ் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் முக கவசம் அணியாமலும் விதிகளை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமாக முக கவசம் கட்டாயம் என்பதே விதிமுறையாகும்.

இந்தச் சட்டமானது, தமிழக ஆளுநரின் ஒப்புதல் மூலம் ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தியேட்டர் Vs ஓடிடி ரிலீஸ்..: தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க அறிக்கை

தியேட்டர் Vs ஓடிடி ரிலீஸ்..: தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

T Rajendarநேற்று (02.09.2020) தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவிப் கூட்டமைப்பின் சந்திப்பு Zoom மூலமாக நடைபெற்றது.

இந்த சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள்:

1. ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஒரு படத்தை உருவாக்கினால் தான் ஒரு விநியோகஸ்தரால் அந்த படத்தை வாங்க முடியும். திரையரங்க உரிமையாளரின் ஆதரவு இருந்தால்தான் அந்த படத்தினை விநியோகஸ்தரால் வெளியிடமுடியும். முதலில் படகு வேண்டும். அந்த படகை ஓட்டுவதற்கு துடுப்புள்ள படகோட்டி வேண்டும். படகு பயணிப்பதற்கு தண்ணீர் வேண்டும். இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது. இதை போலத்தான் நமது திரைப்பட தொழிலும் ஒருவரோடு ஒருவர் சார்ந்தது.

ஒரு தயாரிப்பாளரின் திரைப்படத்தை ஒரு விநியோகஸ்தர் நேரடியாக வாங்கி வெளியிட வேண்டியது என்றாலும், இல்லை ஒரு தயாரிப்பாளர் வெளியிடுவதற்கு உதவிகரமாக ஒரு விநியோகஸ்தர் இருப்பது என்றாலும் சரி, திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவு தேவை. திரையுலகம் வாழ, திரையரங்குகள் வாழ, திரைப்பட விநியோகஸ்தகள் வாழ, முதலில் பக்க பலமாக, உறுதுணையாக விநியோகஸ்தர்களாகிய நாங்கள் இருக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகரின் படத்தை ஒரு விநியோகஸ்தர் வாங்கும் போது அதிர்ஷ்டவசமாக வெற்றி அடைந்துவிட்டால் பரவாயில்லை, ஒருவேளை துரதிஷ்டவசமாக தோல்வி அடைந்துவிட்டால் அந்த தோல்வியை தோளிலே தூக்கி சுமந்தவர்கள் எண்ணற்ற விநியோகஸ்தர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

இன்றைக்கு வந்திருக்கலாம் O.T.T. தளம், ஆனால் இத்தனை காலமாக பல நட்சத்திர நடிகர்களுக்கு படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மட்டுமே சேர்த்தோம் பலம். ஏற்கனவே திரையுலகம் நலிவடைந்து, சிதைந்துவிட்டது. பத்தும் பத்தாததற்கு கொரோனா காலத்திலே திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கிறது. திரையுலகம் மூச்சுமுட்டி கிடக்கின்றது.

O.T.T. தளத்திலே நட்சத்திர அந்தஸ்த்துள்ள படத்தை வாங்குவார்கள், சிபாரிசு செய்பவர்களின் படங்களை வாங்குவார்கள், ஆனால் சின்ன தயாரிப்பாளர்களின் படங்களை வாங்குவார்களா?

தயாரிப்பாளர்களே சிந்திக்க வேண்டும், ஆனால் சின்ன படங்களை வாங்கி வெளியிடும் சில விநியோகஸ்தர்களும் இருக்கிறார்கள் என்பதனை மறந்துவிட வேண்டாம். இந்த O.T.T. என்ற இந்த புதிய தளம் எங்களுடைய திரைப்பட விநியோகஸ்தர் என்ற இனத்தையே அழித்துவிட கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்க விரும்புகின்றோம்.

இன்று வேண்டுமானால் கொரோனாவின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கலாம். கடவுள் அருளால், காலம் நினைத்தால் விரைவிலேயே திரையரங்குகள் திறக்கப்படும். நம்பிக்கை இருந்தால் நல்லதே நடக்கும்.

2. தற்போது திரையரங்க நுழைவு கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி 12 சதவீகிதம் வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு (LBT) 8 சதவீகிதம் கேளிக்கை வரி செலுத்துவதால் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கு கூடுதல் சுமையாக அமைகிறது. ஆகையால் மேற்படி 8 சதவீகிதம் உள்ளாட்சி வரியினை முற்றிலும் ரத்து செய்ய கோரி தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

3. இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படத்தின் விநியோக உரிமை சம்பந்தமாக விநியோகஸ்தர்களிடம் பணத்தினை பெற்றுக்கொண்டு, அவர் தயாரித்த அந்த படத்தினை திரையரங்குகளில் வெளியிடாமலும், விநியோகஸ்தர்கள் செலுத்திய தொகையை திரும்ப அளிக்கமாலும், அப்படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் விதமாக அப்படத்தினை O.T.T. யில் திரையிடும் தயாரிப்பாளர்களிடமிருந்து விநியோகஸ்தர்கள் செலுத்திய பணத்தினை திரும்ப பெற்று சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அளிப்பதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் திரு. டி.ராஜேந்தர், செயலாளர் திரு. மன்னன், கோவை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க தலைவர் ராஜமன்னார், திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க உப தலைவர் திரு. பிரதாப் ராஜா, மதுரை மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் சாகுல் அமித், சேலம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் மோகன், திருச்சி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் ரவி, திருநெல்வேலி மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க செயலாளர் மணிகண்டன் மற்றும் தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சங்க உறிப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் 2 எழுத்து பெயர் கொண்ட 2 நடிகர்கள் கூட்டணி

சுசீந்திரன் இயக்கத்தில் 2 எழுத்து பெயர் கொண்ட 2 நடிகர்கள் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor adhi jaiவெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.

இவர் அண்மையில் இயக்கிய ஜீனியஸ், கென்னடி கிளப், சாம்பியன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் சுசீந்திரன் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

நடிகர்கள் ஜெய் மற்றும் ஆதி இணைந்து இந்த படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணமதிப்பிழப்பு காமெடி ரீமேக்.; சுந்தர் சியுடன் இணையும் பிரசன்னா-ஷாம்.?

பணமதிப்பிழப்பு காமெடி ரீமேக்.; சுந்தர் சியுடன் இணையும் பிரசன்னா-ஷாம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sundar c prasanna shamகடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு குறித்த படம் மாயா பஜார் 2016.

கன்னடத்தில் வெளியான இந்த படத்தில் ராஜ்.பி.ஷெட்டி, வஷிஸ்டா சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.

ராதாகிருஷ்ண ரெட்டி இயக்க அஸ்வினி புனித் ராஜ்குமார் தயாரித்திருந்தார்.

கொரோனா ஊரடங்குக்கு முன்பு இந்த படம் அங்கு வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

ஒரு போலீஸ்க்கு அவரது மனைவியை புற்று நோயில் இருந்து காப்பாற்ற பணம் தேவைப்படுகிறது. அதே போல் ஒரு ஏழைக்கு தன் பணக்கார காதலியை மணக்க பணம் தேவைப்படுகிறது.

இவர்கள் இணைந்து பணமதிப்பிழப்பை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பணத்தை கிரிமினலாக சம்பாதித்து செட்டிலாகிறார்கள் என்பதுதான் அந்த படத்தின் கதை.

இதை முழு நீள காமெடி படமாக உருவாகியிருந்தது.

இந்த பட தமிழ் ரீமேக் உரிமையை வாங்கிய சுந்தர்.சி தன் அவ்னி சினி கிரியேஷன் சார்பில் தயாரிக்கிறாராம்.

அவரது உதவியாளரான சுராஜ் அல்லது பத்ரி இந்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

போலீஸ் அதிகாரியாக ஷாமும், ஏழையாக பிரசன்னாவும் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இவர்களுடன் யோகி பாபு, அஸ்வின் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More Articles
Follows