‘வலிமை’ சூட்டிங்கில் அஜித் விபத்து; கிண்டல் செய்யும் விஜய் ரசிகர்கள்

‘வலிமை’ சூட்டிங்கில் அஜித் விபத்து; கிண்டல் செய்யும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai ajithநேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி ‘வலிமை’ படத்தற்காக இணைந்துள்ளது.
வினோத் இயக்க அஜித் நடிக்க போனிகபூர் இந்த படத்த தயாரித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையைமத்து வருகிறார்.

இந்த நிலையில் இப்பட சூட்டிங்கில் பைக் சேஸிங் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர்.

அப்போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையறிந்த அஜித் ரசிகர்கள், அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என GetWellSoonThala என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதனையும் விஜய் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

அவர்கள் ஐய்யோ அம்மா பைக் ரேஸ் என டிரெண்ட்டிங் செய்து வருகின்றனர்.

இருந்தபோதிலும் அஜித் உடனே சூட்டிங்கில் கலந்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

‘நெற்றிக்கண்’ ரீமேக் விவகாரம்; விசுவை விளாசிய கவிதாலயா

‘நெற்றிக்கண்’ ரீமேக் விவகாரம்; விசுவை விளாசிய கவிதாலயா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Visuகிட்டதட்ட 30 வருடங்களுக்கு முன் ரஜினி, சரிதா, மேனகா நடிப்பில் வெளியான படம் ‘நெற்றிக்கண்’.

இப்படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புவதாக தனுஷ் அறிவித்திருந்தார்.

அதற்குள் டைரக்டர் விசு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்.

நெற்றிக்கண் படத்துக்கு கதை எழுதிய என்னிடம் உரிமை பெறாமல் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடர்வேன் எனவும் எச்சரித்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் நெற்றிக்கண் படத்தை தயாரித்த கவிதாலயா பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘நெற்றிக்கண்’ திரைப்படம் குறித்து உண்மைக்கு புறம்பான, மனவருத்தம் அளிக்கக்கூடிய தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அறிகிறோம்.

‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் முழு காப்புரிமையும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், கவிதாலயா வசமே இருக்கிறது. அதன் தமிழ் ரீமேக் உரிமையை யாருக்கும் கொடுக்கவில்லை.

இந்நிலையில் விசு, கதாசிரியர் என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தை தரவில்லை என கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு. ரீமேக் உரிமை விற்கப்படுமேயானால், சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளை மனதில் கொண்டே கவிதாலயா செயல்படும்.

விசு கவிதாலயாவிற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எதிராக ‘தில்லுமுல்லு’ திரைப்படம் தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் எந்த விதமான ஒரு அடிப்படை ஆதாரமும், முகாந்திரமும் கிடையாது.

இது சம்பந்தமாக, அவர் தொடர்ந்த வழக்கில் கவிதாலயாவும், அதன் நிர்வாகிகளும் சம்பந்தப்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆக, கவிதாலயாவும் மற்றும் அதன் நிர்வாகிகளும் ஒப்பந்தமீறல்களுக்கும், விதி மீறல்களுக்கும் ஒருபோதும் துணை நின்றதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.”

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சிம்புவின் மாநாடு தொடங்கியது.; அப்துல் காலிக்கை வாழ்த்திய சீமான்

சிம்புவின் மாநாடு தொடங்கியது.; அப்துல் காலிக்கை வாழ்த்திய சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seeman simbuசிம்பு நடிப்பில் உருவாகவிருந்த பின்னர் தடைப்பட்டு நின்று போன படம் ‘மாநாடு’.

தற்போது ஒரு வழியாக 2 வருடங்களுக்கு பிறகு பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இதில் அப்துல் காலிக் என்ற கேரக்டரில் சிம்பு நடிக்கிறார்.

இன்று நடைபெற்ற பூஜையில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் இயக்குனருமான சீமான் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

மாஸான மோஷன் போஸ்டர்; தனுஷின் D40 டைட்டில் வெளியானது

மாஸான மோஷன் போஸ்டர்; தனுஷின் D40 டைட்டில் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Karthik Subbarajs D40 titled Jagame Thandhiramரஜினி நடித்த பேட்ட படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

இது தனுஷின் 40வது படமாக உருவாகியுள்ளது.

சூட்டிங் முடிவடைந்தாலும் பட தலைப்பை வெளியிடவில்லை.

இந்த நிலையில் பட பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டைட்டில் ஆகியவை இன்று மாலை 5 மணிக்கு வெளியாகு என அறிவித்து அதன் படி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜகமே தந்திரம் என டைட்டில் வைத்துள்ளனர்.

வெள்ளை சட்டை, வேட்டி அணிந்து இரண்டு கையிலும் துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு தோளில் ஒரு மிஷின் கன்னையும் கட்டிக்கொண்டு அதிரடியாக நுழைகிறார் தனுஷ்.

மேலும் மற்றொரு லுக்கில் கேங்ஸ்ராக உள்ளார் தனுஷ்.

இந்த மோசன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவரும் எனத் தெரிகிறது.

இந்த படத்தை மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தில் வெளியிட உள்ளனர்.

அன்று நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Karthik Subbarajs D40 titled Jagame Thandhiram

 

‘மாஸ்டர்’ விஜய்க்கு மாஸ் கிஸ் அடித்த விஜய்சேதுபதி

‘மாஸ்டர்’ விஜய்க்கு மாஸ் கிஸ் அடித்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi Kiss to Vijay in Master spotவிஜய் & விஜய்சேதுபதி இருவரும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் மாஸ்டர் பட படப்பிடிப்பு நடந்த போது, ஆர்ட் டைரக்டர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

அப்போது வழக்கம்போல அவருக்கு கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

அப்போது விளையாட்டாக விஜய்யும் முத்தம் கேட் தனது அக் மார்க் முத்தத்தை கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி.
இது அங்குள்ள பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது,

இதுவரை அந்த படத்தை வெளியிடவில்லை. எனவே விரைவில் எதிர்பார்க்கலாம்.

(இதில் இருக்கும் படம்.. கிராபிக்ஸ் டிசைனர் கை வண்ணம்.. ஹிஹி…ஹிஹ்ஹி)

Vijay Sethupathi Kiss to Vijay in Master spot

‘மாஸ்-க்கு மாஸ்டர்; மாஸ்டருக்கு..! விஜய்யுடன் இணையும் பார்த்திபன்?

‘மாஸ்-க்கு மாஸ்டர்; மாஸ்டருக்கு..! விஜய்யுடன் இணையும் பார்த்திபன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parthiban talks about Vijay and Thalapathy 65 movieலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி இணைந்து நடித்து வரும் படம் மாஸ்டர்.

இப்படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஏப்ரல் மாதம் 9-ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இதன்பின்னர் விஜய்யின் அடுத்த படத்தை (தளபதி 65) யார்? இயக்குவார்? என்ற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த நிலையில் ’‘தளபதி 65’ படத்தில் இயக்குநர் பார்த்திபன் விஜய்யுடன் இணைந்தால் செம மாஸ்’ என்று ட்விட்டரில் ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருந்தார்.

அதற்கு பதிலளித்த பார்த்திபன், “மாஸ்க்கு மாஸ்டரை பிடிக்கும். மாஸ்டருக்கு இந்த நண்பனைப் பிடிக்கும். (‘நண்பன்’ படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார். அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார்). நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்” என பதிவிட்டுள்ளார்.

Parthiban talks about Vijay and Thalapathy 65 movie

https://twitter.com/rparthiepan/status/1229591376603385856?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1229591376603385856&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Fentertainment%2Fcinema-thalapathy-65-movie-director-parthiban-reply-in-twitter-msb-256479.html

More Articles
Follows