இணையத்தில் பற்றி எரியும் ‘தல 61’ அப்டேட்ஸ்..; அஜித் ரசிகர்கள் ஹாப்பி

இணையத்தில் பற்றி எரியும் ‘தல 61’ அப்டேட்ஸ்..; அஜித் ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thala 61‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் போனிகபூர் மற்றும் வினோத் ஆகியோரது கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இவர்கள் 2வது முறையாக ‘வலிமை’ படத்திற்காக இணைந்துள்ளனர்.

இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில மாதங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடன் தியேட்டர்களில் வெளியாகும் என தெரகிறது.

இந்நிலையில் தல அஜித்தின் 61 வது படம் குறித்த தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படிகிறது.

இம்முறை வந்த தகவல்கள் உறுதியாகியுள்ளது.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை 7 மாதங்களில் முடித்துவிட திட்டமிட்டுள்ளனர்.

இவ்வருடத்தில் சூட்டிங் தொடங்கி 2022ல் நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.

Thala 61 exclusive update here

சந்தோஷ் சிவனின் தந்தையும் 3 தேசிய விருது பெற்றவருமான ஒளிப்பதிவாளர் சிவன் மரணம்

சந்தோஷ் சிவனின் தந்தையும் 3 தேசிய விருது பெற்றவருமான ஒளிப்பதிவாளர் சிவன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhosh sivan fatherதளபதி, இருவர், துப்பாக்கி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன்.

சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்திற்கும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இவரின் தந்தை சிவன் என்பவரும் பிரபல ஒளிப்பதிவாளர்தான்.

பல மலையாளத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் அபயம், யாகம், கொச்சு கொச்சு மோகங்கள் உள்ளிட்ட மலையாள படங்களையும் இயக்கியுள்ளார்.

மூன்று முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் சிவன் இன்று மாரடைப்பு காரணமாக திருவனந்தபுரத்தில் காலமானார்.

இதனையடுத்து சந்தோஷ் சிவன் குடும்பத்தினர்களுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Famous cinematographer Santhosh Sivan father passed away

விஜய் பர்த் டே டான்ஸ்.: கீர்த்தி மாளவிகாவை அடுத்து சூப்பர் ஸ்டார் மகளும் செம ஆட்டம்

விஜய் பர்த் டே டான்ஸ்.: கீர்த்தி மாளவிகாவை அடுத்து சூப்பர் ஸ்டார் மகளும் செம ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய் தன் 47வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதனை முன்னிட்டு ரசிகர்கள் பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இத்துடன் விஜய்யுடன் நடித்த நடிகைகள் கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் விஜய் ஆடிய பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்கள் வெளியிட்டனர்.

இவை சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் ’மாஸ்டர்’ பட பாடலான ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார்.

இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

Actress Lakshmi Manchu’s vaathi coming dance goes viral

ஆன்லைன் வகுப்புகளுக்கு 2GB FREE DATA வழங்க தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை

ஆன்லைன் வகுப்புகளுக்கு 2GB FREE DATA வழங்க தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலான தனியார் & அரசுப் பள்ளிகள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே பாடம் நடத்தி வருகின்றனர்.

செல்போன் & லேப்டாப் வாங்கிட வசதியில்லாத மாணவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆன்லைன் வகுப்புகளில் கூட சில ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதால் சமீபத்தில் தமிழக அரசு விதிமுறைகள் விதித்து அறிக்கை வெளியிட்டது.

பள்ளி ஆன்லைன் வகுப்புகளில் கண்ணியமாக உடை அணிய வேண்டும். ஆன்லைன் வகுப்பு நிகழ்வை முழுமையாக பதிவு செய்து, ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டி அமைக்கப்படும்.

பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழுவில், தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் தலா இருவர், ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் பள்ளி சாரா வெளிநபர் ஒருவரும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆன்லைன் வகுப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

“வகுப்புகள் இணைய வழியிலே நடக்கும் சூழல் இருப்பதால், 2 ஜிபி இலவச டேட்டா திட்டம் செயல்படுத்த வேண்டும் எனும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. கல்வி நிலையங்கள் திறக்கும் வரை தமிழக அரசு இலவச டேட்டா வழங்க வேண்டும்.

2 GB free data scheme should be implemented says Kamal Haasan

கேட்டாலும் சொல்ல மாட்டுறாரு அஜித் பட புரொடியூசர்.; கேட்காமலே சொல்றாரே தனுஷ் பட புரொடியூசர்

கேட்டாலும் சொல்ல மாட்டுறாரு அஜித் பட புரொடியூசர்.; கேட்காமலே சொல்றாரே தனுஷ் பட புரொடியூசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith dhanush‘வலிமை’ பட அப்டேட் கேட்டு கேட்டு அஜித் ரசிகர்கள் அப்செட்டாகி விட்டனர்.

இப்பட தயாரிப்பாளர் போனி கபூரும் இந்த கொரோனா சூழ்நிலையில் இப்போதைக்கு எந்த அப்டேட்டும் கிடையாது என அறிவித்துவிட்டார்.

விஜய் பட ‘பீஸ்ட்’, சிம்பு பட ‘மாநாடு’ என மற்ற பட அப்டேட்டுகளை அள்ளிவிட்டு வருகின்றனர் அந்த பட தயாரிப்பாளர்கள்.

இந்த நிலையில் தனுஷின் ‘நானே வருவேன்’ பட அப்டேட் குறித்து அப்பட தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கிறார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இதனால் தனுஷ், செல்வராகவன் இணையும் ‘நானே வருவேன்’ படத்தின் ஷுட்டிங் எப்போது? என குழப்பத்தில் இருந்தனர் ரசிகர்கள்.

தற்போது ‘நானே வருவேன்’ பட அப்டேட்டை தாணு கொடுத்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா இவர்கள் மூவரும் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Producer Thanu gives update on Dhanush next film

ரஜினி இடத்தில் விஜய்யை வைத்த சன்..; விஜய் இடத்தில் சிவகார்த்திகேயனை வைத்த நெல்சன்

ரஜினி இடத்தில் விஜய்யை வைத்த சன்..; விஜய் இடத்தில் சிவகார்த்திகேயனை வைத்த நெல்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Vijay SKரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ மற்றும் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’, சூர்யா நடித்து வரும் அவரது 40வது படம் ஆகிய படங்களை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

இத்துடன் தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி நடிக்கும் படங்களையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று விஜய் பிறந்த நாளை முன்னிட்டு BEAST பர்ஸ்ட் லுக்கை இந்த நிறுவனம் வெளியிட்டது.

இதுநாள் வரை சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் HEADERல் ரஜினியின் ‘அண்ணாத்த’ டைட்டில் போஸ்டர் இருந்தது.

ஆனால் நேற்று விஜய் போஸ்டரை HEADERல் வைத்தனர். இது சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொண்டாலும் விஜய் ரசிகர்கள் இதனை கொஞ்சம் ஓவராகவே கொண்டாடினர்.

ரஜினி ரசிகர்களை விஜய் ரசிகர்கள் வம்புக்கு இழுக்க இது ட்விட்டரில் பேசும் பொருளானது.

பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இவரே தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தையும் இயக்கியுள்ளார்.

ஆனால் அவர் இந்த செய்தி ஜூன் 23ல் வெளியாகும் வரை டாக்டர் போஸ்டரையே HEADERல் வைத்துள்ளார்.

மேலும் அவரைப் பற்றிய தகவலில் Director of தளபதி 65 என்றே உள்ளது. அதனை பீஸ்ட் என்று கூட மாற்றவில்லை.

HEADERல் கூட BEAST போஸ்டரை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு விஜய் ரசிகர்கள் என்ன சொல்வார்களோ..? பார்ப்போம்..

Vijay and Rajini fans fight in twitter

More Articles
Follows