தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகிறது.
கடந்த சில வருடங்களாகவே பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் தினத்தில் அதிகாலை 4 மணிக்கே காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.
எனவே சர்கார் திரைப்படத்திற்கும் அதிகாலை காட்சிகள் இருக்கும் என ரசிகர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் காலை காட்சிகள் 6 மணிக்கே ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாலை காட்சிகளுக்கு எந்த தியேட்டரிலும் முன்பதிவு செய்யப்படவில்லை..
சிறப்புக் காட்சிகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அரசு தரப்பிலும் கடுமையான கெடுபிடி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் பல தியேட்டர்களில் அதிகாலைக் காட்சிகளை ரத்தாகியுள்ளது.