வெற்றிவேல் நாயகியை விடாத கிடாரி சசிக்குமார்…!

வெற்றிவேல் நாயகியை விடாத கிடாரி சசிக்குமார்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nikhila Again Team up With Sasi kumar's kidaari Movieதாரை தப்பட்டை, வெற்றிவேல் படங்களைத் தொடர்ந்து கிடாரி படத்தில் நடித்து வருகிறார் சசிகுமார்.

வசந்தபாலனின் உதவியாளர் பிரசாத் முருகேசன் இயக்கி வரும் இப்படத்தை படத்தின் நாயகனே தயாரிக்கிறார்.

இவரின் ஜோடியாக வெற்றிவேல் நாயகிகளில் ஒருவரான நிகிலா நடித்து வருகிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக நடிகர் தர்புகா சிவா அறிமுகமாகிறார். ‪‎

ராஜதந்திரம் படத்தில் இவரது நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹீரோவாகி வரும் நிலையில், ஒரு நடிகர் இசையமைப்பாளராக மாறியிருப்பது ஆச்சரியம்தான்.

கபாலி சீக்ரெட்ஸை வெளியிடும் நயன்தாராவின் அப்பா..!

கபாலி சீக்ரெட்ஸை வெளியிடும் நயன்தாராவின் அப்பா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Udhayabhanu Maheswaran Plays a Cop in Kabali Movieசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள படம் கபாலி.

இதன் பாடல்கள் ஜீன் 9ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் படம் பற்றிய எந்த தகவலையும் வெளியில் சொல்லக்கூடாது என அன்புக் கட்டளை விதித்து இருந்தார் இயக்குனர் ரஞ்சித்.

ஆனால் சில தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக கசிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள இயக்குனரும் நடிகருமான உதயபானு மகேஸ்வரன் தன் கேரக்டர் குறித்த தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் கபாலி படத்தில் மலேசியா போலீஸ் ஆக நடித்துள்ளதை தெரிவித்துள்ளார்.

இவர் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யாவுக்கு புஷ்பா நன்றி… வழக்கை வாபஸ் பெற்ற வாலிபர்..!

சூர்யாவுக்கு புஷ்பா நன்றி… வழக்கை வாபஸ் பெற்ற வாலிபர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Complaint against Suriya withdrawn after woman comes forwardதன் மீது தவறு இல்லாதபோதும், ஒரு பெண் முன்னிலையில் பொது இடத்தில் தன்னை நடிகர் சூர்யா அடித்துவிட்டதாக பிரேம்குமார் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இதனால், சூர்யாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.

இதனிடையில் அச்சம்பவத்தில் இடம் பெற்ற பெண்ணான புஷ்பா கிருஷ்ணசாமி தன் ட்விட்டர் பக்கத்தில்

”என்னிடம் தவறாக நடக்க முயன்ற அந்த இளைஞர்களிடம், தன்னை காப்பற்றியதற்கு நன்றி” எனவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நிறைய பின்னணி சம்பவங்கள் நடந்திருந்தாலும் தற்போது சூர்யாவும், பிரேம்குமாரும் சமரசம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே சூர்யாவிற்கு எதிராக கொடுத்த வழக்கை வாபஸ் பெற்று விட்டாராம் பிரேம்குமார்.

தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

Suriya Case

விஜய்சேதுபதியுடன் இணையும் சிபிராஜ்-ஜிவி பிரகாஷ்..!

விஜய்சேதுபதியுடன் இணையும் சிபிராஜ்-ஜிவி பிரகாஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash and Sibiraj Joins Hands with VIjay Sethupathiஇன்று ஜூன் 1ஆம் தேதி இரண்டு படங்களின் டீசர் மற்றும் இரண்டு பட ட்ரைலர் வெளியீடு நடக்கவிருக்கிறது.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி-தமன்னா இணைந்துள்ள தர்மதுரை பட டீசர் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிக்க, யுவன் இசையமைத்துள்ளார்.

இதனையடுத்து, அம்மன், அருந்ததி புகழ் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள சிவநாகம் படத்தின் டீசரும் இன்று வெளியாகிறது.

இந்த இரண்டு டீசர்களை தொடர்ந்து, சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்-ஆனந்தி இணைந்துள்ள எனக்கு இன்னொரு பேரு இருக்கு பட ட்ரைலர் வெளியாகிறது.

இதைப்போலவே, சத்யராஜ்-சிபி ராஜ் இணைந்து நடிக்கும் ஜாக்சன் துரை பட ட்ரைலரும் இன்று வெளியாகிறது.

தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

‘ஒரு நாள் கூத்து’க்காக காத்திருக்க வைத்த மியா-ரித்விகா..!

‘ஒரு நாள் கூத்து’க்காக காத்திருக்க வைத்த மியா-ரித்விகா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Nelson Venkatesan Speech at Oru Naal Koothu Press Meet!கெனன்யா பிலிம்ஸ் சார்பாக செல்வக்குமார் தயாரித்திருக்கும் படம் ஒரு நாள் கூத்து.

நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் தினேஷ் உடன் மியா ஜார்ஜ், ரித்விகா, நிவேதா பெத்துராஜ் ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர்.

மேலும் கருணாகரன், பாலசரவணன், ரமேஷ்திலக், சார்லி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் பெரும் ஹிட்டடித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் இயக்குனர் நெல்சன் பேசும்போது…

“நான் யாரிடமும் உதவி இயக்குனராக பணி புரிந்தது இல்லை. எனது முதல் படமே இதுதான்.

இப்படத்தின் கதை ஆசிரியர் எனது தமிழ் ஆசிரியர்தான். நான் அவருடைய மாணவர். எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருந்தது.

திருமணம் பற்றி பலருக்கும் பல சிந்தனைகள் இருக்கும். ஒருவரது வாழ்க்கையே திருமணத்தால் மாறிவிடும்.

இப்படத்தில் நடிக்க மியா ஜார்ஜ் மற்றும் ரித்விகாவை சந்தித்து பேசினோம். இருவரும் ஓகே சொன்னாலும் கால்ஷீட் தரவில்லை. அவர்களுக்காக ஆறு மாதங்கள் காத்திருந்தோம்.” என்றார்.

பாகுபலியை நெருங்கும் ‘கபாலி..’ நெருப்புடா…!

பாகுபலியை நெருங்கும் ‘கபாலி..’ நெருப்புடா…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth's Kabali Huge Pre-Release Businessகபாலி படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வர அப்படத்தின் மீதான ஆர்வமும் அதிகமாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலாய் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகவிருப்பதால் இந்தியா தாண்டியும் இதன் எதிர்பார்ப்பு எகிறியுள்ளதாம்.

மேலும் மற்ற நாடுகளிலும் இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதால் மற்ற மொழிகளிலும் வெளியிடலாமா? என தயாரிப்பு தரப்பு யோசித்து வருகிறது.

மற்ற ரஜினி படங்களை காட்டிலும் கபாலி வேறு ஒரு பாதையில் பயணிப்பதால், நிச்சயம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்கின்றனர் கோலிவுட் வல்லுனர்கள்.

இதன் வியாபாரமும் விண்ணைத் தொடும் அளவில் இருப்பதால், இதன் வியாபாரம் மற்றும் வசூல் ‘பாகுபலி’ படத்தை நெருங்கும் என கூறப்படுகிறது.

More Articles
Follows