தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பாக படங்களை தயாரித்தும் வெளியீட்டும் வருகின்றனர்.
விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.
இந்த படத்தை தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக இவர்கள் தயாரித்து இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது ரவுடி பிக்சர்ஸ் சார்பாக குஜராத் மொழியில் ‛சுப் யாத்ரா’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளனர்.
இதில் மல்ஹார் தாக்கூர், மோனல் கஜார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தேசிய விருது பெற்ற மனிஷ் சயினி என்பவர் இயக்கியுள்ளார்.
வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மோனல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சுப் யாத்ரா என்ற இந்த படத்தை ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார் நயன்தாரா.
இதே நாளில் தான் மணிரத்னம் இயக்கிய பான் இந்தியா படமான ‘பொன்னியின் செல்வன் 2’ திரையரங்குகளில் வெளியாகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
[email protected] and #Nayanthara’s @Rowdy_Pictures debuts in #Gujarati Cinema with #ShubhYatra starring @MalharThakar & @Gajjarmonal directed by national award winner #ManishSaini, The film is slated to release on April 28th Worldwide!🤩
#GujaratiMovie #HituKanodia
#AdityaGadhvi https://t.co/fBXzM8BkOg
Nayanthara’s shubh yatra to clash with ponniyin selvan 2