‘இறைவன்’ மேடையில் விஜய்சேதுபதியிடம் கால்ஷீட் கேட்ட ஜெயம் ரவி

‘இறைவன்’ மேடையில் விஜய்சேதுபதியிடம் கால்ஷீட் கேட்ட ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ‘இறைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.

நடிகர் ஜெயம் ரவி…

“இறைவன் என்றாலே அன்புதான். எதுக்கு இந்தப் பெயர் வைத்தீர்கள் என என்னிடம் நிறைய பேர் கேட்டார்கள். இந்தத் தலைப்பை இயக்குநர் சொன்ன போது, ‘இன்னுமா யாரும் இந்த தலைப்பை வைக்கவில்லை?’ என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்பை கொடுக்கும் இறைவனை ஏன் தலைப்பாக வைக்கவில்லை என்று தோன்றியது. இந்த அன்பில்தான் படம் தொடங்கியது.

கோவிட் காரணமாக ‘ஜனகனமண’ நின்றது. அதன் பின்புதான் ‘இறைவன்’ தொடங்கியது. நான் பார்த்த முதல் நடிகன் ரவிதான் என விஜய் சேதுபதி சொன்னார். ஆனால், நான் இயக்க வேண்டும் என நினைத்த முதல் ஹீரோ விஜய்சேதுபதிதான். சீக்கிரம் எனக்கு கால்ஷீட் கொடுங்கள். வந்ததற்கு நன்றி.

வினோத் சாரின் படங்கள் இண்டஸ்ட்ரியை புரட்டிப் போட்டவை. அவருக்கும் நன்றி. அகமது சாரின் அன்பும் நட்பும் எனக்கு எப்போதும் தேவை. அழகர் சாருக்கு இந்தப் படம் மிகப்பெரிய லாபம் கொடுக்கும்.

விஜயலட்சுமி, நரேன் சிறப்பாக நடித்துள்ளனர். அப்பாதான் நான் உருவான இடம். நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் சுதன் எங்களுக்கு சிறப்பாக செய்துள்ளார்.

‘பொன்னியின் செல்வன்’ படமெல்லாம் முடித்து விட்டு என்ன செய்ய போகிறாய் என்று என் அண்ணன் கேட்டார். ஏன் ‘தனி ஒருவன்2’ பண்ண மாட்டாயா எனக் கேட்டேன். அப்படி ஒரு அண்ணன் இருக்கும் போது எல்லாமே எனக்கு ஜெயம்தான். ‘இறைவன்’ படம் எல்லாருக்கும் பிடிக்கும். நான் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால் யுவனும் அதற்குக் காரணம். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் ” என்றார்.

Will you give me call Sheet Jayamravi asking Vijaysethupathi

நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவி.. அப்போ எனக்கு 400 ரூபாய் சம்பளம்.. – விஜய்சேதுபதி

நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவி.. அப்போ எனக்கு 400 ரூபாய் சம்பளம்.. – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ‘இறைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா…

“இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். இயக்குநர் அகமது கடின உழைப்பாளி. இங்கு வந்திருக்கும் ஜெயம் ரவி, விஜய்சேதுபதி இரண்டு பேரும் சம்பளம் குறித்து கவலைப்படாமல் கதை, இயக்குநர்கள் மீது நம்பிக்கை வைப்பவர்கள். படத்திற்கு என் வாழ்த்துக்கள்”.

நடிகர் விஜய்சேதுபதி…

“அகமது சார் மிகவும் தன்மையானவர். அவரிடம் இருந்து இப்படி ஒரு படம் எதிர்பார்க்கவில்லை. படத்தின் டைட்டில்கள் அழகாக வைக்கிறார். இறைவன் என்பது நம்பிக்கையான வார்த்தை. ஆனால், அதை இப்படி பயமுறுத்தி ஆர்வத்தோடு கொடுத்துள்ளார்கள். படத்தின் டிரெய்லர் பயமுறுத்தினாலும் பார்ப்பதற்கான ஆர்வத்தைக் கொடுத்துள்ளது.

நான் சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில் நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவிதான். ‘எம். குமரன்’ படத்தில் நதியா மேம் ரவிக்கு அறிமுகம் கொடுக்கும் போது நானும் அங்கு நின்றிருப்பேன். அந்தப் படத்தில் எனக்கு 400 ரூபாய் சம்பளம் கொடுத்திருப்பார்கள். ‘இறைவன்’ படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

At my carrier i saw first hero Jayamravi says Vijaysethupathi

தலைவி நயன்தாராவுடன் காம்பினேஷன்.. தலைவன் ஜெயம் ரவி… – விஜயலட்சுமி

தலைவி நயன்தாராவுடன் காம்பினேஷன்.. தலைவன் ஜெயம் ரவி… – விஜயலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ‘இறைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.

நடிகை விஜயலட்சுமி…

” சர்வைவர் நிகழ்ச்சி முடித்த பின்பு எனக்கு கிடைத்த நல்ல படம் ‘இறைவன்’. ஜாஸ்மின் கதாபாத்திரத்தில் நான் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என இயக்குநர் அகமது என்னிடம் சொன்னார். அவரின் நம்பிக்கைக்கு நன்றி. தலைவி நயன்தாராவுடன் காம்பினேஷன் கிடைத்தது மகிழ்ச்சி. தலைவன் ஜெயம் ரவி என் பக்கத்து வீடுதான்.

இந்தப் படம் மூலம் அவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. மகிழ்ச்சியான அனுபவம் கொடுத்த இந்தப் படத்திற்கு நன்றி”.

இயக்குநர் அகமது…

“நிகழ்விற்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. ‘மனிதன்’ படத்திற்கு பிறகு ஐந்தாறு வருடங்கள் கழித்து இந்த மேடையில் நிற்கிறேன். ஒரு படம் நடக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளரும் ஹீரோவும் மனது வைக்க வேண்டும். ரவியுடன் இதற்கு முன்பு ‘ஜனகனமண’ ஆரம்பித்தோம்.

ஆனால், கோவிட் காரணமாக அது நடக்கவில்லை. ரவியை வைத்து புது ஜானரில் ஒரு படம் எடுக்க நினைத்தேன். அந்த கதையை புரிந்து கொண்ட ரவிக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி.

அதனால்தான் ‘இறைவன்’ படமே வந்துள்ளது. இதுவரை நான் சாஃப்ட்டான படங்கள் மட்டுமே எடுத்துள்ளேன். எனக்கே இந்தக் கதை சவாலாகதான் இருந்தது. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். நயன்தாராவுக்கு இந்தக் கதையை 4 நிமிடங்கள்தான் ஃபோனில் சொன்னேன். உடனே சம்மதம் சொன்னார்.

அவருக்கு நன்றி. யுவனும் சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. நிகழ்வுக்கு வந்துள்ள விஜய் சேதுபதி சாருக்கும் நன்றி. இயக்குநர் வினோத்தின் படங்களுக்கு நான் ரசிகன். ‘இறைவன்’ படத்திற்கு உங்களுக்கு ஆதரவு கொடுங்கள்”.

My thalaivi Nayanthara says Vijayalakshmi

‘அஞ்சாதே’ படத்திற்கு பிறகு விஜயலட்சுமியுடன் மீண்டும் ஜோடி – நரேன்

‘அஞ்சாதே’ படத்திற்கு பிறகு விஜயலட்சுமியுடன் மீண்டும் ஜோடி – நரேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ‘இறைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் அ. வினோத் பேசியதாவது..

“படத்தின் டிரெய்லர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. படத்திற்காக காத்திருக்கிறேன். ஜெயம் ரவி சார் நெகடிவ் ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும். ஆல் தி பெஸ்ட்”.

எடிட்டர் மணிகண்ட பாலாஜி…

” இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது. திரில்லர் ஜானரில் படம் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

கலை இயக்குநர் ஜாக்கி…

“நான் பயந்த சுபாவம் என்பதால் திரில்லர் ஜானரில் படங்கள் பார்ப்பதில்லை. ஆனால், அப்படியான ஒரு படத்தில் என்னை இயக்குநர் வேலை செய்ய வைத்திருக்கிறார். அவருடன் அடுத்தடுத்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. படத்திற்கு வாழ்த்துகள்”.

நடிகர் நரேன்…

“போலீஸ் கதாபாத்திரம் அடிக்கடி எனக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தில் சிறிய ஆனால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதற்கு காரணமான என் நண்பர்கள் அகமது சார், ஜெயம் ரவிக்கு நன்றி.

இந்தப் படத்தில் இருப்பது மகிழ்ச்சி. ‘அஞ்சாதே’ படத்திற்கு பிறகு விஜயலட்சுமியுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோவிற்கும் நன்றி”.

நடிகர் அழகம் பெருமாள்..

“‘இறைவன்’ படத்தை தயாரித்திருக்கும் சுதனுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். அவருக்கு மட்டுமல்ல இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வெற்றி படமாக அமைய வாழ்த்துகள்”.

After Anjadhey again pair with Vijayalakshmi says Narain

சின்ன படங்கள் எடுக்க கூடாதா? விஷால் சொன்னது சரியா..? ; ‘எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் விவாதம்

சின்ன படங்கள் எடுக்க கூடாதா? விஷால் சொன்னது சரியா..? ; ‘எனக்கு என்டே கிடையாது’ பட விழாவில் விவாதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’.

அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார்.

தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார்.

மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தளபதி ரத்னம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலாச்சரண் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சந்திரமுகி 2, யாத்திசை உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர் ஓம் பிரகாஷ் இந்த படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். படத்தொகுப்பை வேல்முகனும் கலை வடிவமைப்பை சூர்யாவும் கவனித்துள்ளார்.

அக்டோபர் 6 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஆக்சன் ரியாக்சன் சார்பில் ஜெனிஷ் இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

இதனை முன்னிட்டு தற்போது இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் என யாருமே சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்காமல் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் கார்த்திக் பேசும்போது…

“அடிப்படையில் வழக்கறிஞர் என்றாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தில் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆகவும் பயிற்சி எடுத்தேன். கடந்த ஏழு வருட தவமாக தற்போது இந்த படத்தை தயாரித்துள்ளேன்.

இந்த ஏழு வருடங்களில் ஒவ்வொரு முறையும் இந்த படத்தை துவங்க முயற்சிக்கும்போது சில தடங்கல்கள் ஏற்பட்டு முயற்சி தள்ளிப்போனது. ஆனாலும் ‘எனக்கு என்டே கிடையாது’ என்கிற எங்கள் படத்தின் டைட்டிலை எனக்கு நானே சொல்லி உற்சாகப்படுத்திக் கொண்டேன்.

விக்ரம் ரமேஷ் என்னை சந்தித்து சொன்ன கதை தனித்துவமாக இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்பாக சில விஷயங்களில் தீர்மானமாக இருந்தேன். படப்பிடிப்பில் யாரும் யாரையும் திட்டக்கூடாது. கோபத்தைக் காட்டக் கூடாது.

படப்பிடிப்பில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அன்றைய தின ஊதியத்தை அவர்கள் கேட்காமலேயே தேடிச்சென்று கொடுத்து விட வேண்டும்.. எல்லோருக்கும் சரிசமமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தென்.. படப்பிடிப்பு நடந்த 35 நாட்களிலும் அதை இடைவிடாமல் கடைபிடித்து முதல் படத்திலேயே இதை சாதித்தும் விட்டேன்.

இந்த படத்தில் மூன்று பேருக்கு இடையே ஏற்படும் ஒரு சிறிய போராட்டம் ஒன்று இருக்கிறது. இதற்கு ஸ்டண்ட் மாஸ்டரை வைத்து படமாக்கினால் நன்றாக இருக்கும் என்பதால் ஓம் பிரகாஷை அழைத்தோம். அவர் அதை ஒரு பிரமாதமான சண்டைக் காட்சியாகவே அமைத்துக் கொடுத்தார்.

யாத்திசை போன்ற படத்தில் 300 பேருக்கு மேல் வைத்து சண்டை காட்சிகளை உருவாக்கியவர் வெறும் மூன்று பேருக்கான சண்டைக் காட்சியையும் அழகாக வடிவமைத்து கொடுத்தார்.

சமீபத்தில் நடிகர் விஷால் பேசும்போது மூன்று கோடி, நான்கு கோடி வைத்துக்கொண்டு சின்ன படங்களை தயாரிக்கிறோம் என யாரும் வர வேண்டாம் என கூறியிருந்தார். இதுவே ஒரு விதமான சனாதானம் தான்.. இப்படி சொல்ல யாருக்குமே உரிமை இல்லை” என்று கூறினார்.

தயாரிப்பாளர் கார்த்திக்கின் வழிகாட்டியாக அவருக்கு பக்கபலமாக துணை நிற்கும் சக்தி என்பவர் பேசும்போது, “எனக்குள் இருக்கும் இலக்கிய ஆர்வம் தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. விக்ரம் ரமேஷ் முதல் பட இயக்குநர் மாதிரியே இல்லை..

தயாரிப்பாளர் கார்த்திக்கை பொறுத்தவரை, தான் இருக்கும் இடங்களில் யாரும் மோசமான வார்த்தைகள் பேசுவதை விரும்ப மாட்டார். யாரையும் மரியாதை குறைவாக நடத்த மாட்டார். முக்கியமாக தனிநபராக இல்லாமல் எல்லோரும் கூட்டாக சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என விரும்புபவர்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் கலாசரணின் திறமையை பார்க்கும்போது இத்தனை நாளாக இவர் எப்படி வெளியே தெரியாமல் இருந்தார் என்கிற ஆச்சர்யம் ஏற்பட்டது” என்று கூறினார்.

இப்படத்தின் வெளியிட்டு உரிமையை பெற்றுள்ள விநியோகஸ்தார் ஜெனிஷ் பேசும்போது…

“சமீபத்திய நிகழ்வில் நடிகர் விஷால் சின்ன படங்களை எடுப்பவர்கள் தயவு செய்து சினிமாவுக்கு வர வேண்டாம் அதற்கு பதிலாக அந்த காசில் சொத்து வாங்கி போடுங்கள் என்று கூறியதை அவர் சொன்ன ஒரு அறிவுரையாக தான் நான் பார்க்கிறேன்.

அவர் ஒரு தயாரிப்பாளராக தனது கடந்தகால அனுபவத்திலிருந்து அப்படி கூறியுள்ளார். அவர் சொன்னது போல இன்று சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதிலும் ஓடிடி தளங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதிலும் நிறைய சிரமங்கள் இருக்கிறது.

லட்சங்களில் எடுக்கப்பட்ட படங்களை விநியோகித்து கூட நல்ல லாபம் பார்த்தேன். அதேசமயம் சமீபத்தில் ஒரு ஐந்து கோடி பட்ஜெட்தில் எடுக்கப்பட்டு வெளியான படம் வெறும் பத்து லட்சம் தான் வசூலித்தது. டாடா, குட் நைட் போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் நல்ல வசூல் செய்தன என்பதையும் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

ஒளிப்பதிவாளர் தளபதி ரத்னம் பேசும்போது,…

“சமீப காலமாக நிறைய திரில்லர் படங்கள் வருகின்றன. இதில் என்ன புதிதாக பண்ண முடியும் என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்படும். ஆனால் இந்த படத்தில் திரைக்கதை புதிதாக இருக்கும். படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக்கின் குணாதிசயத்துக்காகவே இந்த படத்தில் அனைவரும் இருமடங்காக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தோம்.

படத்தை எடுத்து முடித்த பின்பு அதை இசையமைப்பாளரும் எடிட்டரும் சேர்ந்து இன்னும் வேறு விதமாக மாற்றி விட்டார்கள்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் கலாசரண் பேசும்போது…

“இந்தப் படத்தில் கடைசி டெக்னீசியனாக இணைந்தது நான்தான்.. சொல்லப்போனால் மொத்த படத்தையும் எடுத்து முடித்துவிட்டுத் தான் என்னிடம் வந்தார்கள்.. பாடல்களுக்கு கூட மாண்டேஜ் காட்சிகளை முன்கூட்டியே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து அதற்கு பாடல்களை உருவாக்க சொன்னார்கள். அதே சமயம் எனக்கு வேண்டிய சுதந்திரத்தையும் கொடுத்தார்கள்.

இந்த படத்தில் இரண்டு பாடல்களை பரிதாபங்கள் புகழ் கோபி மற்றும் அபிஷேக் ராஜா ஆகியோர் பாடியுள்ளனர். அபிஷேக் ராஜா என் இசையில் ஏற்கனவே சில சுயாதீன பாடல்களை பாடியுள்ளார்” என்றார்.

கலை இயக்குநர் சூர்யா பேசும்போது, “இந்த படத்தின் படப்பிடிப்பில் எங்களை தேடி வந்து சம்பளத்தை கொடுத்தார்கள். சொன்ன மாதிரியே 35 நாட்களில் படத்தை முடித்து விட்டார்கள். தயாரிப்பு நிறுவனம் என சொல்வதை விட அது வானத்தைப் போல குடும்பம் என்று சொன்னால் சரியாக இருக்கும்” என்று கூறினார்.

நடிகர் சிவகுமார் ராஜு பேசும்போது…

“இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தபோது எனக்கே முதலில் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆனால் என்னை ஊக்கப்படுத்தி உற்சாகம் கொடுத்து நடிக்க வைத்தனர். முதன்முறையாக சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது.

ரிகர்சல் பண்ணும்போது தான் சினிமா என்பது விளையாட்டு கிடையாது என்பதை உணர்ந்தேன்” என்று கூறினார்.

இயக்குநர் விக்ரம் ரமேஷ் பேசும்போது..

” நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் இது ஒளிவு மறைவில்லாத ஒரு நிறுவனம். கதையை சொல்வதற்கு முன்பாகவே, இதுதான் பட்ஜெட்.. நான் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறேன். என்னுடைய நண்பர்களும் இதில் என்னுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என முதலிலேயே கூறிவிட்டேன். தயாரிப்பாளரும் எந்த நிபந்தனையும் விதிக்காமல் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். அதுமட்டுமல்ல ரொம்பவும் தாமதப்படுத்தாமல் கதை சொன்ன ஒரு வாரத்திலேயே படத்தையும் துவங்கி விட்டார்கள்.

இந்த படத்தில் மஸ்தான் கதாபாத்திரத்தில் சிவகுமார் ராஜு நடித்துள்ளார்.

இவர் நிறைய குறும்படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர் இவருக்கு முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் பிரபலமான இன்னொரு நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தோம் ஆனால் கடைசி நேரத்தில் இவரே நடிக்கட்டும் என முடிவெறுத்தோம். இந்த படத்திற்கு பாடல்கள் சிச்சுவேஷன் சொல்வதற்கு பதிலாக முழு படத்தின் கதையும் சொன்னேன். பாடலாசிரியர் ஸ்ரீனி அதற்கு ஏற்றார்போல அருமையான பாடல்களை எழுதிக் கொடுத்தார்.

ஒரு படத்துக்கு தேவை நல்ல கதை.. ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனம்.. இவை இரண்டும் இருந்தால் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். இந்த படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் வெளியே வரும்போது படம் நல்லா இருக்கு என்று மட்டுமே சொல்வார்கள். இந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகி ஏன் கலந்து கொள்ளவில்லை என்றால், அவரை எங்களால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இந்தியன் 2, கேப்டன் மில்லர் என பெரிய படங்களில் அவர் பிசியாக இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.. ஒருவேளை இனி பெரிய படங்களில் தான் நடிப்பார் போல தெரிகிறது.

இந்த படத்தில் நடித்துள்ள சேகர் என்கிற கதாபாத்திரம் ஒரே நாளில் பலவிதமான பிரச்சனைகள சந்திக்கும்… அவரது வாழ்க்கையும் இந்த படத்தின் கதையும் முடிந்து விடும் என நினைக்கும் நேரத்தில் மீண்டும் புதிதாக இன்னொரு விஷயம் தொடரும். அதனால் தான் எனக்கு எண்டு கார்டே இல்லை என்கிற டைட்டிலை இந்த படத்திற்கு வைத்தோம்: என்று கூறினார்.

Enaku ends kidaiyaadhu movie news

1990களில் விஜய் – அஜித் படம் பார்த்த உணர்வு – வனிதா விஜயகுமார்

1990களில் விஜய் – அஜித் படம் பார்த்த உணர்வு – வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வனிதா விஜயகுமார், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தில்லு இருந்தா போராடு’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த படத்தை கேபி பாலா என்பவர் வெளியிடுகிறார்.

நடிகர் அஜித்தை பார்க்க வேண்டும். அஜித்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என விரும்பி வந்தவர் பாலா. இந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக இந்த படத்தை வெளியிடுகிறார் என பலரும் மேடையில் பேசினர்.

பின்னர் மேடையில் வனிதா விஜயகுமார் பேசும்போது..

“என்னை பார்த்தால் பயமாக இருக்கிறது என பலரும் சொல்கிறார்கள். எனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களும் இதை தான் சொல்கிறார்கள். நான் என்ன கடித்து தின்று விட போகிறேனா? என்னை பார்த்து ஏன் பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் ஒரு தைரியமான பெண்தான் ஆனால் என்னை பார்த்து பயப்பட வேண்டாம் என்றார்.

லொள்ளுசபா மனோகர் பேசும்போது இந்த படம் பழைய படம் போல இருக்கிறது என்றார். நானும் அதை தவறாக சொல்லவில்லை. எனக்கும் 1990களில் பார்த்த படத்தை போல தான் இந்த படத்தின் காட்சிகள் இருந்தன. பாடல் காட்சிகளும் நன்றாக இருந்தது. 1990களில் விஜய் அஜித் படங்களின் பார்த்தபோது எப்படி இருந்ததோ ?! அதை உணர்வு எனக்கு இப்போது ஏற்பட்டது” என்று பேசினார் வனிதா.

Vanitha speech at Dhillu irundha Poradu audio launch

More Articles
Follows