தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாராதான்.
அறிமுக ஹீரோ, டாப் ஹீரோ என பேதம் பார்க்காமல் எவருடன் வேண்டுமானாலும் நடிப்பவர் இவர்.
ஆனால், இவர் மீது இருக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு இதுதான். அதாவது தன் பட புரமோஷன், இசை வெளியீட்டு விழா என எதிலும் கலந்து கொள்ளாதவர் என்பதுதான்.
இதனால் இவரை லேடி அஜித் என்று கூறுவோரும் உண்டு.
தற்போது அஜித்தின் மற்றொரு பாலிசியையும் கடைபிடிக்கிறாராம் நயன்தாரா.
முன்பெல்லாம் தானுண்டு, கேரவன் உண்டு என்றிருந்த நயன்தாரா, இப்போதெல்லாம் தன் காட்சி முடிந்துவிட்டாலும் சக நடிகர்கள் நடிக்கும் நடிப்பை தளத்திலேயே உட்கார்ந்து பார்க்கிறாராம்.
அஜித்தும் இப்படிதான் சக நடிகர்களை ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.