நாளை லவ்வர் பாய் சிம்புவின் மெகா ட்ரீட்

நாளை லவ்வர் பாய் சிம்புவின் மெகா ட்ரீட்

tr stillsபாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து குறளரசன் இசையமைத்த படம் ‘இது நம்ம ஆளு’.

தமிழில் வெற்றிப் பெற்ற இப்படம் இப்போது தெலுங்கில் ‘சரஸுடு’ என்கிற பெயரில் நாளை செப்-15ல் ரிலீஸாகிறது.

இதன் டைட்டில் அருகே லவ்வர் பாய் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது டப்பிங் படமாக உருவாக்கப்படவில்லையாம்.

படத்தை உருவாக்கும்போதே தமிழில் சூரி நடித்த 40 நிமிட காட்சிகளை , தெலுங்கில் சத்யம் ராஜேஷ் என்கிற காமெடி நடிகரை வைத்து படமாக்கினார்களாம்.

அதுமட்டுமல்ல, தமிழில் நயன்தாரா, சிம்பு இருவரும் இணைந்து நடித்த சிம்பு எழுதிய பாடல் ஒன்றை, டி.ராஜேந்தர் சுந்தர தெலுங்கில் எழுதியுள்ளார்.

‘முன்ன மன்மதா.. நின்ன வல்லபா.. நேனு சரஸுடு” என சிம்புவின் ஹிட் படங்களின் பெயர்கள் எல்லாம் அந்தப்பாட்டில் இடம்பெறுகின்றனவாம்.

இப்படம் கர்நாடகாவிலும், தமிழகத்தில் உள்ள சில முக்கிய தியேட்டர்களிலும் தெலுங்கிலேயே ரிலீஸாகிறது.
தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட தெலுங்கு படமான இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநில அரசுகளும் ஜி.எஸ்.டி வரியில் இருந்து விளக்கு அளித்துள்ளன.
இப்படத்தை முதன்முறையாக ஆந்திரா முழுவதும் தானே ரிலீஸ் செய்கிறார் டி.ராஜேந்தர்.

மேலும் இது தொடர்பான புரமோசன் நிகழ்ச்சிகளில் டி.ராஜேந்தர் கலந்துக் கொண்டு வருகிறார்.

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது பீப் விவகாரத்தில் பொங்கிய மகளிர் அமைப்பினர் அனிதாவுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? எனவும் நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டவர்கள் நீட்டை எப்படி எதிர்ப்பார்கள்..? எனவும் பல அதிரடி கேள்விகளை எழுப்பினார் டி.ராஜேந்தர்.

Tomorrow Simbus Sarasudu release Movie sub titled A Lover Boy

lover boy simbu

அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என சொல்லும் சிவா மனசில புஷ்பா

அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என சொல்லும் சிவா மனசில புஷ்பா

Siva Manasula Pushpa movie about Bad politiciansசர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு திட்டமிட்டபடி கச்சிதமாக முடிவடைந்துள்ளது.

அரசியல் களத்தை மையப்படுத்தி வாராகி உருவாக்கியுள்ள சிவா மனசில புஷ்பா படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள். இருவரும் வாராகியின் ஜோடியாக வருகின்றனர்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான பெண்ணுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு, சண்டைதான் இந்தப் படத்தின் கதை.

ஒரு அரசியல்வாதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது என்கிறார் வாராகி.

இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது.

படப்பிடிப்பில் செய்தியாளர்களை வாராகி மற்றும் நாயகிகள் ஷிவானி குரோவர், ஜிஸ்மி ஆகியோர் சந்தித்தனர்.

வாராகி கூறுகையில், “இது ஒரு அரசியல் படம். ஆனால் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். மக்களை ஆளும் அரசியல்வாதிகள் எப்படி இருக்கக் கூடாது, இரட்டை வேடதாரிகளாக நாடகமாகக் கூடாது என்று சொல்ல எடுத்துள்ள படம். நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் வெற்றிப் பெறும்,” என்றார்.

நாயகி ஷிவானி குரோவர் கூறுகையில், “நான் ஏற்கெனவே தமிழில் நடித்திருந்தாலும், சிவா மனசில புஷ்பா எனக்கு முக்கியமான படம். என் பாத்திரம் என்னவென்று விளக்கமாக சொல்லித்தான் ஒப்பந்தம் செய்தார்கள்.

இந்த வேடத்தில் நடிப்பதால் எனக்கு எந்தப் பிரச்சினையும் வராது. எனது இயக்குநர் – ஹீரோ வாராகி அதைப் பார்த்துக் கொள்வார். அந்த அளவு துணிச்சலான மனிதர் அவர். மிகச் சிறப்பாகவும் நடித்துள்ளார்,” என்றார்.

நாயகி ஜிஸ்மி கூறுகையில், “மலையாளத்தில் சிறுவயதிலிருந்தே படங்களில் நடித்துள்ளேன். தமிழில் எனக்கு இது முதல் படம். எனக்கு மிகப் பெரிய அறிமுகத்தைத் தந்துள்ளார் வாராகி. அவருக்கு மனைவியாக இந்தப் படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்தில் நடிப்பதைக் கேள்விப்பட்டு நிறைய வாய்ப்புகள் வருகின்றன.

நான் இந்தப் படம் வெளியாகும்வரை வேறு படத்தில் நடிப்பதாக இல்லை. அந்த அளவு நம்பிக்கை உள்ளது எனக்கு,” என்றார்.

சிவா மனசில புஷ்பா படத்தில் கே ராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தவசி ராஜ், விஜயகுமார், நியூஸ் 7 சுப்பையா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

Siva Manasula Pushpa movie about Bad politicians

கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்கிறாரா..? கமல் விளக்கம்

கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்கிறாரா..? கமல் விளக்கம்

Actor Kamal Haasanநடிகர் கமல்ஹாசன் அவர்கள் மார்க்சிஸ்ட் விழாவுக்கு அழைக்கப்பட்டு இருப்பதாகவும், அக்கட்சியில் அவர் இணையவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியன.

இச்செய்தி குறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கோழிக்கோடு நிகழ்ச்சியில் கேரள முதல்வருடன் பங்கேற்க எனக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை.

அக்டோபர் மாதம் வரை எல்லா சனிக்கிழமைகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.

இருப்பினும், கேரள நிகழ்ச்சிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

அடல்ட் ஒன்லி படக்கதையில் நடிக்கிறாரா ஓவியா..?

அடல்ட் ஒன்லி படக்கதையில் நடிக்கிறாரா ஓவியா..?

actress oviyaஹரஹர மகாதேவகி படத்தை தொடர்ந்து சந்தோஷ் இயக்கவுள்ள புதிய படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

இப்படத்திற்கு இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இளைஞர்களை கவரும் வகையில் அடல்ட் ஒன்லி படமாக இது இருக்கும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் இதில் நாயகியாக ஓவியா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

காலாவின் அடுத்த கட்டம் இன்றுமுதல் ஆரம்பம்

காலாவின் அடுத்த கட்டம் இன்றுமுதல் ஆரம்பம்

Kaala movie stillsதயாரிப்பாளர் சங்கம் இடையே எழுந்த மோதல் காரணமாக பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தம் அறிவித்தனர்.

இதனால் கடந்த 13 நாட்களாக எந்தவிதமான சூட்டிங்கும் தமிழகத்தில் நடைபெறவில்லை.

பலகட்ட பேச்சுவார்த்தை முடிவில் இருதரப்பினரும் சமாதானம் ஆனதால் இன்றுமுதல் சூட்டிங் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

எனவே இன்றுமுதல் ரஞ்சித் இயக்கும் காலா சூட்டிங்கில் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

இதன் சூட்டிங் ஒன்றரை மாதங்களை வரை நடைபெறும் என கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் கமல் கட்சி போட்டி; விரைவில் அறிவிப்பு..?

உள்ளாட்சி தேர்தலில் கமல் கட்சி போட்டி; விரைவில் அறிவிப்பு..?

Kamal to announce new political party soon and he may participate in Local body electionஇந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த உலகநாயகன் கமல்ஹாசன் விரைவில் அரசியல் களம் போகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

எதையும் முறையாக பயிற்சி பெற்று கற்றுக் கொண்டு களம் இறங்கும் கமல், அரசியல் பற்றி அறிய அண்மையில் கேரளா சென்றிருந்தார்.

அடுத்த சுதந்திர போராட்டத்திற்கு நான் தயாராகிவிட்டேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக என்னோடு இணையலாம் எனவும் அவர் அண்மையில் பேசியிருந்தார்.

இந்நிலையில் இந்த செப்டம்பர் மாத இறுதிக்குள் இவரின் புதிய கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கமல் மற்றும் இதர உறுப்பினர்கள் போட்டியிட போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Kamal to announce new political party soon and he may participate in Local body election

More Articles
Follows